Asianet News TamilAsianet News Tamil

என்ன கருவாட்டில் இத்தனை நன்மைகள் இருக்கா...தெரிந்து கொள்வோம் வாங்க!

மீனில் அதிக புரதச் சத்துகள் உள்ளது என்று, நாம் அனைவருக்கும் தெரிந்தது தான். அதுபோல் கருவாட்டிலும் நம் உடலுக்கு ஆரோக்கியம் தரும் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இது குறித்து இக்கட்டுரையில் பார்க்கலாம்.

benefits of dry fish
Author
First Published Apr 20, 2023, 10:42 AM IST

தமிழர்களின் உணவுக் கலாச்சாரத்தில் கருவாடு முக்கிய பங்கு வகிக்கிறது. நம் உணவில் மீனை நாம் எடுத்துக் கொள்ளும் அளவுக்கு கருவாடை எடுத்துக் கொள்வதில்லை. ஏனெனில், கருவாட்டின் வாடையும், அதன் சுவையும் சிலருக்கு முகம் சுளிக்கச் செய்யும்.

அசைவ உணவுகளில் அதிக கொழுப்பு சத்து இல்லாத உணவு மீன் மற்றும் கருவாடு தான். இது உடலை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. இதில் 80-85 சதவீதம் வரை புரதம் உள்ளது. 

இதையும் படிங்க: Coffee: காபி குடித்தால் தான் வேலையே ஓடுமா? ஆனா 2 முறைக்கு மேல காபி குடித்தால் பாதிப்பு! இத்தனை தீமைகள் இருக்கு

நன்மைகள்:

கருவாடு எலும்பு மற்றும் பற்களை உறுதிப்படுத்துகிறது.

கருவாட்டில் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தக் கூடிய ஆண்டிஆக்ஸிடன்ட் அதிகமாக காணப்படுகிறது. இருமல் மற்றும் சளி உள்ளவர்களுக்கு கருவாட்டு குழம்பு சிறந்த மருந்தாகும்.

கருவாடு, பெண்களுக்கு அதிகம் ஏற்படும் பிரச்சினைகளான  நீர்ப்பை, சினைப்பை, கருப்பை போன்ற பிரச்சினைகளை சரி செய்கிறது.

மேலும் இது வாதம், பித்தம், இரத்த ஓட்டம் போன்ற பிரச்சினைகளையும் சரி செய்கிறது.

கர்ப்பிணி பெண்களுக்கு பால் சுறா மிகவும் நல்லது. ஏனெனில் அது அவர்களுக்கு பால் உற்பத்தியினை அதிகரிக்க செய்யும்.

இதய நோய், சிறுநீரக நோய், தோல் நோய், செரிமானச் சிக்கல் மிக்க நோய், கடும் நீரிழிவு நோய் போன்ற நோய்கள் உள்ளவர்கள் காருவாடு சாப்பிடக் கூடாது.

குறிப்பாக, இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் கருவாடு சாப்பிடுவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.

Follow Us:
Download App:
  • android
  • ios