Asianet News TamilAsianet News Tamil

சால்மன் மீனில் கொட்டிக் கிடக்கும் சத்துக்கள்; கர்ப்பிணி பெண்கள் கண்டிப்பாக சாப்பிடணும்.. ஏன் தெரியுமா?

ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நம் உடலுக்கு இன்றியமையாத ஒரு ஊட்டச்சத்தாக திகழ்கிறது. அந்தவகையில், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த மீன்கள் மற்றும் அவற்றின் நன்மைகள் என்னென்ன என்பதை குறித்து பார்க்கலாம்.

amazing health benefits of salmon fish and here about the top most omega 3 rich fishes in tamil mks
Author
First Published Oct 12, 2023, 12:26 PM IST

மீன் என்றாலே நம் அனைவருக்கும் நாவூறும். அந்த அளவிற்கு அதன் சுவை தூக்கலாக இருக்கும். மீன் நம் உடலுக்கு நன்மையை தரக்கூடியது என்பது அனைவரும் அறிந்ததே, இருந்தபோதிலும் மீன்களிலேயே, எந்த மீன் உடலுக்கு மிகவும் நல்லது என்பது உங்களுக்கு தெரியுமா? அதுபோல் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த மீன்கள் மற்றும் அவற்றின் நன்மைகள் என்னென்ன என்பதை விரிவாக பார்க்கலாம்.

ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நன்மைகள்:
ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நம் உடலுக்கு இன்றியமையாத ஒரு ஊட்டச்சத்தாக திகழ்கிறது. இந்த ஒமேகா-3 ஆனது நம்முடைய உடல் வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகிறது. குறிப்பாக உடலில் ரத்தம் உறையாமல் பாதுகாக்கிறது. இந்த கொழுப்பு அமிலமானது, இதயம் மற்றும் மூளை ஆகியவற்றின் ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்தது. அது மட்டுமல்லாமல் மூட்டு வலியால் அவதிப்படுவோருக்கு சிறந்த நிவாரணியாகும். சமீபத்திய ஆராய்ச்சி ஒன்றில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மனசோர்வில் இருந்து நம்மை பாதுகாக்கிறது என்று தெரிய வந்துள்ளது. 

இதையும் படிங்க:  "திலாப்பியா" மீனை சாப்பிட்டு கால், கைகளை இழந்த 40 வயது பெண்...உண்மையில் நடந்தது என்ன?

மீன் எண்ணெய்:

ஒமேகா-3 கொழுப்பு அமிலத்திலிருந்துதான் மீன் எண்ணெய் மற்றும் மீன் மாத்திரைகள் தயாரிக்கப்படுகின்றன. இது கண், காது சம்பந்தமான பிரச்னைகளுக்கு வழங்கப்படும் மருந்துகளில் ஒன்றாகும். எனவே தான் இந்த மீன்களுக்கு மக்களிடம் எப்போதுமே வரவேற்பு உள்ளது.

இதையும் படிங்க:  தேங்காய் பாலில் 'மீன்' குழம்பு செய்து சாப்பிட்டு இருக்கீங்களா? 

இடத்திற்கு ஏற்ப மீன்களின் சத்துக்கள் மாறுபடுமா?
பொதுவாகவே ஆறு, குளம், ஏரி, கடல் என பல இடங்களில் மீன்கள் காணப்படுகின்றன. இவற்றால் அதன் சத்துக்கள் மாறுபடுமா? என்ற சந்தேகம் பலருக்கு உண்டு. ஆனால் உண்மை என்னவென்றால், மீன்கள் எந்த இடத்தில் வளர்ந்தாலும் அவற்றின் சத்துக்கள் ஒருபோதும் மாறுவதில்லை என்பதுதான் உண்மை. 

சின்ன மீன்கள்: 
இயற்கையாகவே, கடல்பாசிகளில் நிறைய ஒமேகா 3 மற்றும் புரதம் உள்ளது. எனவே இந்த கடல்பாசியை மீன்கள் சாப்பிடுவதால் அவற்றிற்கும் ஒமேகா3 அதிகமாகவே கிடைக்கிறது. அதிலும் குறிப்பாக, சிறிய மீன்களுக்கு ஒமேகா3 நிறைய இருக்குமாம். அதனால் தான் பலர் கடல் மீன்களை அதிகம் விரும்பி சாப்பிடுகிறார்கள். அதிலும் குறிப்பாக சிறிய மீன்களைத்தான் விரும்பி சாப்பிடுவார்கள். 

சால்மன் மீன்:
ஒமேகா 3 கொழுப்பு அமிலம் சால்மன் மீனில் அதிகமாக இருக்கிறது. எல்லா மீன்களை விடை இந்த மீனில் தான் ஒமேகா 3 அதிகம் உள்ளது. ஒமேகா 3  மட்டுமின்றி, உயர்ரக புரதம், மெக்னீசியம், பொட்டாசியம், நியாசின், வைட்டமின் பி12, வைட்டமின் ஏ போன்றவை நிறைந்துள்ளது. அதனால்தான் என்னமோ இந்த மீனின் விலை மற்றும் மவுசும் அதிகமாக இருக்கிறது. மேலும் இந்த மீனை குழம்பு வைத்தாலோ வறுத்தாலோ அவ்வளவு ருசியாக இருக்கும். குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் இந்த மீனை சாப்பிட்டால் வயிற்றில் இருக்கும் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Follow Us:
Download App:
  • android
  • ios