Asianet News TamilAsianet News Tamil

தேங்காய் பாலில் 'மீன்' குழம்பு செய்து சாப்பிட்டு இருக்கீங்களா? 

மற்ற இறைச்சிகளை விட மீன் சிறந்தது. இது ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது. மீனில், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் ஏ, பி, டி, ஆகியவை அதிகம் உள்ளது.

how to cook curry fish with coconut milk in tamil
Author
First Published Aug 24, 2023, 2:44 PM IST

மற்ற இறைச்சிகளை விட மீன் சிறந்தது. இது ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது. மீனில், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் ஏ, பி, டி, ஆகியவை அதிகம் உள்ளது. மேலும் பலர் மீன் விரும்பி சாப்பிடுவது உண்டு. இதில் உள்ள கொழுப்பு அமிலங்கள் இரத்தத்தில் கொழுப்பு படிவதை தடுக்கிறது. அந்தவகையில், 
தேங்காய் பாலுடன் 'மீன்' குழம்பு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதையும் படிங்க: நாவூறும் நாஞ்சில் நாட்டு மீன் குழம்பு - இப்படி செய்து பாருங்க சூப்பரா இருக்கும்!

தேவையான பொருட்கள்:

மீன் துண்டுகள் - 8
வெங்காய விழுது - 4 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 4 
கடுகு - 1 ஸ்பூன் 
சீரகத் தூள் - 4 ஸ்பூன் 
மிளகாய் தூள் - 4 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 2 ஸ்பூன்
கரம் மசாலா தூள்- டீஸ்பூன்
சீரகம் - 2 ஸ்பூன்
தேங்காய்ப்பால் - இரண்டு கப்
எண்ணெய் - 4 ஸ்பூன்
உப்பு - போதுமான அளவு

இதையும் படிங்க:  கேரள ஸ்டைல் பச்சை மாங்காய் மீன் குழம்பு ரெசிபி - பச்சை மாங்காய் நன்மைகள் அப்படியே கிடைக்கும்!!

செய்முறை முறை:

  • முதலில் மீன் துண்டுகளுக்கு சிறிது மஞ்சள் மற்றும் உப்பு தடவி அரை மணி நேரம் வைக்கவும். அரை மணி நேரம் கழித்து மீன் துண்டுகளை எண்ணெயில் போட்டு வதக்கவும். ஆனால் துண்டுகளை அதிகமாக வறுக்க வேண்டாம். வெந்ததும், மீன் துண்டுகளை வேறொரு தட்டில் எடுத்து தனியாக வைக்கவும்.
  • அதே பாத்திரத்தில், இன்னும் கொஞ்சம் எண்ணெய் சேர்க்க வேண்டும். பின் அதில் சீரகம், கடுகு சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
  • பிறகு வெங்காய விழுது சேர்த்து பிரவுன் கலர் வரை வதக்கவும். பிறகு சீரகத்தூள், மிளகாய் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
  • சிறிது நேரம் கழித்து, தேங்காய் பாலை எடுத்து கலவையில் ஊற்றி கலக்கவும். இப்போது அதனுடன் மீன் துண்டுகளைச் சேர்த்து லேசாகக் கலந்து தேவையான அளவு உப்பு சேர்த்து குறைந்த தீயில் மீன் துண்டுகள் முழுவதுமாக வேகும் வரை வேகவிடவும்.
  • இறுதியாக கரம் மசாலா தூள் மற்றும் கொத்தமல்லி சேர்த்து அடுப்பை அணைக்கவும். 10 நிமிடம் வைக்கவும். பின் அடுப்பில் இருந்து இறக்கவும். 
  • இப்போது தேங்காய் பால் கலந்த 'மீன்' குழம்பு தயார். சூடான சாதத்துடன் சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.
Follow Us:
Download App:
  • android
  • ios