இந்த 6 விஷயம் தெரிஞ்சா போதும்...நீங்களும் சமையல் எக்ஸ்பெர்ட் ஆகிடலாம்
சமையலில் கைபக்குவம் முக்கியம் என்பார்கள். அந்த கைபக்குவம் அனைவருக்கும் வர வேண்டும் என்றால் சில எளிய முறைகளை தெரிந்து கொண்டாலே போதும். இந்த கைபக்குவம் தான் உலகின் அனைத்து நாட்டினரையும் இந்திய உணவுகள் ருசியில் கட்டிப் போட்டு வைத்துள்ளன.

சுவை, மனம் ஆகியவற்றில் இந்திய உணவுகளை மிஞ்சுவதற்கு உலகில் எந்த உணவும் கிடையாது. சாம்பார், பிரியாணி, புலாவ், சிக்கன் என சைவம், அசைவம் எதுவாக இருந்தாலும் இந்திய உணவுகளுக்கு இணை கிடையவே கிடையாது. சமைப்பது ஒரு கலை என்பார்கள். எந்த உணவை எத்தனை நிமிடங்கள் வேக வைக்க வேண்டும், எந்த சமயத்தில் எந்த மசாலாவை சேர்க்க வேண்டும் என்பதை தெரிந்து வைத்துக் கொண்டு சரியான முறையில், சுவையாக சமைப்பது அனைவருக்கும் வந்து விடாது.
இந்திய உணவுகளில் சேர்க்கப்படும் பொருட்கள் தான் அந்த உணவிற்கு ருசியையும், மனத்தையும் கொடுக்கக் கூடியது. ஒரு பாரம்பரிய உணவை நீங்கள் அதே சுவை, மனம் மாறாமல் நீங்கள் சமைக்க வேண்டும் என்றால் அதற்கு சில சமையல் நுணுக்கங்கள் உள்ளது. இதை மட்டும் தெரிந்த கொண்டால் நீங்கள் குக்கிங் எக்ஸ்பெர்ட் ஆகி விடலாம். இந்திய உணவுகளுக்கு ருசியை தூக்கலாக்கிக் கொடுக்கும் அந்த 6 விஷயங்களை இதோ...முடிந்தால் இதை நீங்களும் டிரை பண்ணி பார்த்துவிட்டு சொல்லுங்கள்.
சுவையை அதிகரிக்கும் குக்கிங் டிப்ஸ் :
1. அம்மியில் அரைத்து வைப்பது :
முந்தைய காலங்களில் சமையலுக்கு மசாலா அரைப்பதாக இருந்தால் அம்மியில் அரைத்து தான் பயன்படுத்தினார்கள். மிக்ஸி, கிரைண்டரில் அரைப்பதை விட அம்மியில் அரைத்து வைக்கும் உணவுகளின் சுவை கூடுதலாக, அதே பாரம்பரிய சுவையை கொண்டு வந்து விடும்.தென்னிந்தியாவில் தற்போது வரை பல வீடுகளில் அம்மியில் அரைத்து சமையல் செய்யும் வழக்கம் உள்ளது.
2. ஆட்டு உரல் :
அம்மியை போல் பாரம்பரியமாக பயன்படுத்தப்பட்டு வரும் மற்றொரு முறை ஆட்டு உரல். மாவு அரைப்பதற்கு, பூண்டு, இஞ்சி, மசாலாக்கள் ஆகியவற்றை அரைப்பதற்கு பயன்படுத்து உண்டு. இயற்கையாக எண்ணெய், மனம் ஆகியற்றை வெளிப்படுத்த உதவும் சிறந்த கருவியாகும். இதில் அரைத்து வைக்கக் கூடிய உணவுகள் கூடுதல் மனம் மிகுந்ததாக இருக்கும்.
3. நல்லெண்ணெய் சமையல் :
இந்தியர்களின் பாரம்பரிய சமையலில் கண்டிப்பாக இருக்கும் ஒரு பொருள் நல்லெண்ணெய். குறிப்பாக தமிழர்கள், பங்காலி, பீகாரி சமையல்களில் இது கண்டிப்பாக இருக்கும். சைவம், அசைவம் எந்த வகை உணவாக இருந்தாலும் நல்லெண்ணெய்யில் செய்தால் அதற்கு தனித்துவமான சுவையும், மனமும் கிடைத்து விடும். பல பாரம்பரிய உணவுகளாக அசைவ உணவுகளுக்கு தற்போது வரை நல்லெண்ணெய் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இது உணவில் சுவை தன்மையை தூக்கலாக இருக்க வைக்கிறது.
4. முழு மசாலாக்கள் :
மசாலா பொடிகள் சேர்க்காமல் முழுவதுமாக இருக்கும் கருப்பு மிளகு, ஏலக்காய், சீரகம், சோம்பு, கிராம்பு உள்ளிட்டவைகளை சமயலுக்கு முன் பயன்படுத்துகிறார்கள். இது உணவின் சுவையை கூட்டுவதுடன் மருத்துவ பயன்களை தரக் கூடியதாகும். கருப்பு மிளகு, சீரகம் போன்றவை உடலை எப்போது கதகதப்பாக வைத்திருக்கும். இவைகள் சளி, இருமலில் இருந்து விடுபடவும் உதவுகின்றன.
5. புதிதாக அரைத்த மசாலா :
இந்திய உணவுகளின் சுவைக்கு மிக முக்கியமான காரணம் உடனடியாக அரைத்த மசாலாக்களை சமையலுக்கு பயன்படுத்துவது தான். கடைகளில் விற்கும் பாக்கெட் செய்யப்பட்ட, பதப்படுத்தப்பட்ட மசாலாக்கள் இல்லாமல் வீட்டிலேயே ஃபிரஷாக அரைத்த இஞ்சி-பூண்டு பேஸ்ட் போன்ற மசாலாக்களை பக்குவதாக அரைத்து சேர்ப்பது உணவின் சுவை தூக்கலாக இருப்பதற்கு மிக முக்கியமானது. ஒரு உணவை நுகர்ந்து பார்த்ததுமே அதை சுவைக்க வேண்டும் என ஆசையை தூண்டும் மனத்தை கொடுப்பது இந்த மசாலாக்கள் தான்.
6. சமையல் நுணுக்கங்கள் :
எந்த உணவை எப்படி சமைத்தால் ருசியாக இருக்கும் என தெரிந்து கொண்டு பலவிதமான உணவுகளை தயாரிக்கும் சமையல் நுணுக்கங்கள் இந்திய சமையலில் பயன்படுத்தப்படும் மிக முக்கியமான முறையாகும். சில உணவுகளை நேரடியாக எண்ணெய்யில் பொரிப்பது, சிலவற்றை வேக வைத்து எண்ணெய்யில் பொரிப்பது, சிலவற்றை தீயில் சுடுவது, இன்னும் சில உணவுகளை மிதமான தீயில் மெதுவாக வேக வைப்பது, சில அசைவ உணவுகளை விறகு அடுப்பில் மட்டுமே வைத்து சமைப்பது என பல விதமான முறைகளை கையாள்வதால் ஒவ்வொரு உணவும் ஒரு தனித்துவம் இருந்ததாக இருக்கின்றன.