Fruit & Vegetable Peels: இனி பழம் மற்றும் காய்கறி தோல்களை இப்படி பயன்படுத்துங்கள்! பல நன்மைகள் இருக்கு!
நாம் அனைவரும் பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடும் போது அதன் தோல்களை பயன்படுத்துவதில்லை. அப்படியே குப்பையில் வீசி விடுகிறோம். ஆனால் பழத் தோல்களில் பல வகையான நன்மைகள் உள்ளன. அவை என்னென்ன என்பது குறித்து இந்தப் பதிவில் அறிந்து கொள்ளலாம்.
நாம் அனைவரும் பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடும் போது அதன் தோல்களை பயன்படுத்துவதில்லை. அப்படியே குப்பையில் வீசி விடுகிறோம். ஆனால் பழத் தோல்களில் பல வகையான நன்மைகள் உள்ளன. அவை என்னென்ன என்பது குறித்து இந்தப் பதிவில் அறிந்து கொள்ளலாம்.
உருளைக்கிழங்கு தோல்
உருளைக்கிழங்குத் தோலில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது கண்களுக்கு கீழே உள்ள கருவளையங்களை சீர் செய்யப் பயன்படும். இத்தோலை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து, குளித்து முடித்தவுடன் கண்களைச் சுற்றிலும் 15 நிமிடங்களுக்கு வைத்தால் கண்களுக்கு குளிச்சியை அளிப்பது மட்டுமின்றி, கருவளையங்கள் நீங்கி முகம் பொலிவுடன் காணப்படும்.
வாழைப்பழத் தோல்
வாழைப்பழத் தோலைதூக்கி வீசாமல், அடிக்கடி பற்களின் மீது தேய்த்து வந்தால், பற்கள் அனைத்தும் பளீச்சென்று வெண்மையாக மாறிவிடும்.
ஆரஞ்ச் மற்றும் எலுமிச்சை பழத் தோல்
ஆரஞ்ச் மற்றும் எலுமிச்சை பழத் தோல்களை ஜன்னல்கள் மற்றும் கதவுகளின் ஓரங்களில் வைத்தால், கரப்பான் மற்றும் பூச்சிகள் வராமல் தடுக்கப்படும். இந்த பழத் தோலை குளிக்கும் நீரில், சிறிது நேரம் ஊற வைதுத, பிறகு இந்த நீரில் குளித்தால், சருமம் மிகப் பொலிவுடனும் நறுமணத்துடனும் நீண்ட நேரம் இருக்கும்.
Kidney Stone: சிறுநீரக கல் பிரச்சனையா? எந்த உணவுகளை நீங்கள் சாப்பிட வேண்டும்!
புதினா
வீட்டில் எலிகள் தொல்லையால் அவதிப்படுபவர்கள், புதினாவின் காய்ந்த இலைகள் அல்லது அதன் காம்புகளையோ வீட்டிற்குள் வைத்தால் போதும். எலி, சிலந்தி மற்றும் தேவையற்ற பூச்சிகளை வீட்டிற்குள் வருவதை நம்மால் தடுக்க முடியும்.
- வாசனை செண்டை வினிகருடன் கலந்து வீட்டை சுத்தப்படுத்தும் வேலையைச் செய்யலாம்.
- ஃபில்டர் ஃகாபியை எறும்பு புற்றின் அருகில் கொட்டினால், எறும்புகள் அனைத்தும் ஓடி விடும். ஒரு கிளாஸ் தண்ணீரில், 5 டீஸ்பூன் உப்பை கலந்து அதை அறையின் நான்கு பக்க ஓரங்களில் தெளித்து விட்டால் போதும், எறும்புகளின் நடமாட்டம் இருக்காது.
- நீக்க முடியாத மிக கடுமையான கரைகளை பேக்கிங் சோடவை பயன்படுத்தி, மிக எளிதாக அகற்றி விடலாம்.
- வீணாக குப்பைக்கு போகும் பழம் மற்றும் காய்கறித் தோல்களை, வீட்டில் இருக்கும் ரோஜா செடிகளில் கொட்டினால், நன்றாக பூ பூக்கும். பூச் செடியும் ஆரோக்கியமாக இருக்கும்.
- பழம் மற்றும் காய்கறித் தோல்களை மிக்ஸியில் நன்கு அரைத்து, தென்னை மரங்களுக்கு உரமாக பயன்படுத்தி வரலாம்.