Asianet News TamilAsianet News Tamil

Hair Shiny: தலைமுடியை பளபளப்பாக வைத்து கொள்ள வாழைப்பழத்தை இப்படி பயன்படுத்தி பாருங்க!

பெண்கள் பலரும் தங்களின் தலைமுடி மிருதுவாக பட்டுப்போல் இருக்க வேண்டும் என்று நினைப்பது இயல்பு தான். ஆனால் இன்றைய தொழில்நுட்ப உலகில், பலருக்கும் நினைத்தது போல் தலைமுடி இருப்பதில்லை. 

Use banana to keep your hair shiny!
Author
First Published Nov 29, 2022, 2:18 PM IST

இயற்கையாக நமக்கு கிடைக்கும் பழங்களில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை, நம் உடலுக்கு ஆரோக்கியத்தை நிறைவாக அளிக்கிறது. முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் நம் ஆரோக்கியத்தை பலவழிகளில் மேம்படுத்துகிறது. உடல் ஆரோக்கியம் மட்டுமின்றி, தலைமுடி ஆரோக்கியத்திற்கும் வாழைப்பழம் உதவுகிறது. பெண்கள் பலரும் தங்களின் தலைமுடி மிருதுவாக பட்டுப்போல் இருக்க வேண்டும் என்று நினைப்பது இயல்பு தான். ஆனால் இன்றைய தொழில்நுட்ப உலகில், பலருக்கும் நினைத்தது போல் தலைமுடி இருப்பதில்லை. 

இன்றைய இளம் தலைமுறையினர், தலைமுடியின் ஆரோக்கியத்தை பாதுகாக்க கண்ட கண்ட ஷாம்புக்கள் மற்றும் கிரீம்களை வாங்கி பயன்படுத்துவார்கள். இருந்தாலும் இது நிரந்த தீர்வினை தருவதில்லை. ஆனால், உண்மையில் இவையெல்லாம் தலைமுடியை பாழ்படுத்தி விடுகிறது. இதற்கு, இயற்கையான முறையில் கூட தீர்வினை காண முடியும். பளபளப்பான பட்டுப்போன்ற தலைமுடிக்கான நல்ல ஹேர் மாஸ்க்கை, வீட்டில் உள்ள பொருட்களை கொண்டே தயாரிக்கலாம். இதற்கு வாழைப்பழம் பெரிதும் உதவுகிறது. வாழைப்பழத்தை பச்சைப் பயறுடன் சேர்த்துக் கொள்ளலாம். இப்போது இந்த ஹேர் மாஸ்க்கை எப்படி தயார் செய்வது என்று இங்கே பார்ப்போம். 

வாழைப்பழம் ஹேர் மாஸ்க்

நன்றாக பழுத்த வாழைப்பழத்தை உரித்து, ஒரு பாத்திரத்தில் பிசைந்து கொள்ள வேண்டும். பிறகு, ஊறவைத்த பச்சைப் பயிறை அரைத்துக் கொள்ள வேண்டும். இதன் பின்னர் இரண்டையும் ஒன்றாக கலந்து, பேஸ்டாக மாற்றிக் கொள்ள வேண்டும். அவ்வளவு தான் வாழைப்பழ ஹேர் மாஸ்க் தயார்.

Mouth ulcers: வாய்ப் புண்ணால் அடிக்கடி அவஸ்தையா? இதோ இருக்கு சில பாட்டி வைத்தியங்கள்!

எப்படி பயன்படுத்த வேண்டும்?

உங்களின் தலைமுடியைப் பிரித்து, உச்சந்தலை மற்றும் உங்கள் தலைமுடியின் நீளம் முழுவதும் இந்த ஹேர் மாஸ்க்கை தடவ வேண்டும். 15 முதல் 20 நிமிடங்கள் வரை அப்படியே தலைமுடியை உலர வைக்க வேண்டும். பிறகு, மெதுவாக ஸ்க்ரப் செய்து விட்டு, ஷாம்பூவைக் கொண்டு லேசாக தலைமுடியை கழுவ வேண்டும்.

இந்த வாழைப்பழ ஹேர் மாஸ்க்கை வாரத்திற்கு இரு முறை பயன்படுத்தினால், நிச்சயமாக உங்களின் தலைமுடி உதிர்வு அறவே நீங்கி, உங்கள் முடி பிரச்சனைகளுக்கு நிரந்தரமான தீர்வு கிடைக்கும். இந்த ஹேர் மாஸ்க்கானது, வயது வித்தியாசமின்றி அனைவருக்கும் ஏற்றது. மேலும், பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் பயன்படுத்தலாம்.

Follow Us:
Download App:
  • android
  • ios