ரோஸ்வாட்டர், வெள்ளரி, மஞ்சள் கொண்டு செய்யப்படும் ஐஸ் கட்டிகள்- எதற்கு இதெல்லாம்?
என்ன தான் நமக்கு என்று பல்வேறு அழகு பராமரிப்புக் குறிப்புகள் இருந்தாலும், மற்றவருடைய பாணியை அறிந்துகொள்வதில் பெரும்பாலானோருக்கு பெரிய அலாதி உண்டு. அந்த வகையில் நம்மில் பலர் சமூக ஊடகங்கள், செய்தித்தாள், மாதயிதழ் மற்றும் நாம் விரும்பும் பிரபலங்களிடம் இருந்து மாற்று ஒப்பனை நடைமுறைகளை தெரிந்துகொள்ள விரும்புவதுண்டு. அந்தவகையில் அழகு பரமாரிப்பு செயல்பாடுகளில் பலரிடம் ஆச்சரியம் ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தியை இந்த பக்கத்தில் பார்க்கலாம்.
தினமும் உங்கள் முகம் மற்றும் கழுத்தில் ஐஸ் கட்டியை மசாஜ் செய்வதால் பல நன்மைகள் உள்ளன. கருவளையம், வீக்கம், தடிப்புகள் மற்றும் பல தோல் பிரச்சனைகள் போன்றவை உடனடியாக தீர்வை அடைகின்றன. ஐஸ் கட்டிகள் கொண்டு செய்யப்படும் மசாஜ்களால் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கின்றன, முகத்தில் காணப்படும் எண்ணெய்த் தன்மையைக் குறைக்கின்றன, டேனிங்க் போகிறது. மேலும் சருமத்துக்கு ஒருவித ஈரப்பதம் கிடைக்கிறது. இது ஒப்பனை செய்யும் போது உறுதுணையாக இருக்கும்.
கற்றாழை மற்று துளசி ஐஸ் கட்டிகள்
அலோ வேரா எனப்படுகிற கற்றாழை மற்றும் துளசி இரண்டு சருமத்திற்கும் உடலுக்கும் சிறந்தவை. கற்றாழை முகத்தில் காணப்படும் எண்ணெயைக் குறைக்க உதவுகிறது மற்றும் முகப்பருவை குணப்படுத்துகிறது. அதே நேரத்தில் துளசி ஒரு சக்திவாய்ந்த ஆண்டி-ஆக்சிடண்ட்டாகும். இது சருமத்தை ரிலாக்சாக வைத்திருக்க உதவுகிறது. இதை கொண்டு செய்யப்படும் ஐஸ் கட்டிகள் வெயில் முத்தம் என்று சொல்லப்படுகிற டேனிங் பிரச்னை இருந்தால், உடனடியாக அகற்றிவிடும்.
ரோஸ்வாட்டர் ஐஸ் கட்டிகள்
ரோஸ் வாட்டர் உங்கள் மேக்கப்பை நீக்கவும், சருமத்தை ஈரப்பதமாக்கவும் பயன்படுகிறது. வேலையில் நீண்ட மற்றும் பரபரப்பான நாளுக்குப் பிறகு, ரோஸ்வாட்டர் ஐஸ் கட்டியை கொண்டு மசாஜ் செய்தால் உங்கள் சருமம் பொலிவு பெறும். இது நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராடவும், சுருக்கங்களைக் குறைக்கவும் உதவுகிறது. மேலும் இதனால் சருமம் புத்துணர்ச்சி அடைகிறது.
வெள்ளரிக்காய் & எலுமிச்சை ஐஸ் கட்டிகள்
இவை இரண்டிலும் வைட்டமின் சி நிறைந்துள்ளது. உங்களுடைய உணவு முறையில் இவை இரண்டையும் அடிக்கடி சேர்ந்துவந்தால், குடல் ஆரோக்கியம் பெருகும். எலுமிச்சைப் பழம் மற்றும் வெள்ளரி கொண்டு செய்யப்படும் ஐஸ் கட்டிகளை மசாஜ் செய்தால்,
உங்களுடைய சருமம் பிரகாசம் அடையும். மேலும் இது ஆண்டி ஆக்சிடண்டாகவும் உள்ளது. இந்த ஐஸ் கட்டிகள் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் மற்றும் பருக்கள், முகப்பரு போன்றவற்றை நீக்கும்.
சக்கரை அதிகமாக சாப்பிடுபவர்களுக்கு காத்திருக்கும் ஆபத்து- நிபுணர்கள் விடுக்கும் எச்சரிக்கை..!!
குங்குமப்பூ ஐஸ் கட்டிகள்
உங்களுக்கு குங்கமப்பூ கிடைத்தால், அதை வைத்தும் ஐஸ் கட்டிகளை தயாரிக்கலாம். அதன்மூலம் நமக்கு பல சரும நன்மைகள் கிடைக்கின்றன. குங்கமப்பூ ஐஸ் கட்டிகள் மூலம் பழுப்பு நிற புள்ளிகள், பருக்கள், நிறமி மற்றும் பிற தோல் பிரச்சனைகள் மறைந்துவிடுகின்றன. இது சருமத்தின் நிறத்தை மேம்படுத்தவும், சருமத்திற்கு ஆரோக்கியமான பளபளப்பைக் கொடுக்கவும் உதவுகிறது.
காலையில் எழுந்தவுடன் இந்த டீயை குடிச்சுப் பாருங்க- உடலுக்கு புத்துணர்ச்சி கூடும்..!!
மஞ்சள் ஐஸ் கட்டிகள்
மஞ்சளை கொண்டு ஐஸ் கட்டிகளை தயாரிக்கலாம். அதன்மூலமாகவும் பல்வேறு சரும நன்மைகள் ஏற்படுகின்றன. இந்த ஐஸ் கட்டிகளை வைத்து மசாஜ் செய்தால், இளமையான தோற்றம் நீடிக்கும். மேலும் நமது சரும செல்கள் சேதமடையாமல் கவசமாக இருந்து காக்கும். மஞ்சளில் இருந்து தயாரிக்கப்படும் ஐஸ் க்யூப்ஸ் மூலம் சுருக்கங்கள், நெற்றியில் தெரியும் கோடுகள், கண்களுக்கு கீழே உருவாகும் கருநிறத்திலான வட்டம் போன்றவை மறையும்.