பளபளப்பான மற்றும் ஆரோக்கியமான கூந்தலுக்கு வெந்தயத்தை ஹேர் பேக்காக எப்படி பயன்படுத்த வேண்டும் என்று இங்கு பார்க்கலாம்.

பெண்கள் ஒவ்வொருவரும் தங்களது கூந்தல் அடர்த்தியாக, நீளமாக மற்றும் பளபளப்பாக இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். இதற்காக அவர்கள் பலவிதமான கூந்தல் பராமரிப்பு முறைகளை முயற்சி செய்வார்கள். குறிப்பாக சந்தையில் கிடைக்கும் விலை உயர்ந்த ஷாம்பு, எண்ணெய்கள் போன்றவற்றை வாங்கி பயன்படுத்துவார்கள். ஆனால் அவற்றில் இருக்கும் ரசாயனம் கூந்தலின் ஆரோக்கியத்தை தான் பாதிக்கும்.

இத்தகைய சூழ்நிலையில், வீட்டில் கிடைக்கும் அதுவும் குறிப்பாக சமையலறையில் பயன்படுத்தும் இரண்டு பொருட்களை வைத்து ஹேர் பேக்காக போட்டால் தலைமுடி தொடர்பான பிரச்சனைகள் நீங்கும். அது என்னவெஞ், வெந்தயம் மற்றும் தயிர் ஹேர் பேக். இந்த ஹேர்பேக் தலைமுடி ஆரோக்கியமாக வைப்பது மட்டுமல்லாமல், பல நன்மைகளையும் அளிக்கும். சரி இப்போது இந்த ஹேர்பேக் தயாரிப்பது எப்படி என்றும், அதன் நன்மைகள் குறித்தும் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

வெந்தயம் மற்றும் தயிர் ஹேர் பேக் நன்மைகள்:

தயிர் மற்றும் வெந்தயம் ஹேர் பேக் தயாரிக்கும் முறை:

தேவையான பொருட்கள்

வெந்தயம், தயிர், தேங்காய் எண்ணெய் அல்லது விளக்கெண்ணெய்

தயாரிக்கும் முறை:

சிறிதளவு வெந்தய விதைகளை இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். பிறகு காலையில் தண்ணீர் வடிகட்டி மையாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இதனுடன் தயிர் மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலக்க வேண்டும்.

பயன்படுத்தும் முறை:

தலை முடியை இரண்டாகப் பிரித்து தயாரித்து வைத்த ஹேர் மாஸ்கை தலையில் தடவ வேண்டும். தலையை மெதுவாக மசாஜ் செய்தால் ரத்த ஓட்டம் பயன்படும். பிறகு ஷவர் கப் அணியுங்கள். அரை மணி நேரம் கழித்து சூடான நீரில் தலைக்கு குளிக்க வேண்டும். தலைக்கு மென்மையான ஹெர்பல் ஷாம்பு பயன்படுத்த வேண்டும். இந்த ஹேர் பேக்கை வாரத்திற்கு ஒரு முறை மட்டும் பயன்படுத்தி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

குறிப்பு :

- வெந்தயம் ஊற வைக்க மறந்து விட்டால் வெந்தைய பொடி பயன்படுத்தலாம்.

- இந்த ஹேர் பேக்கை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் மட்டுமே நல்ல பலன் கிடைக்கும்.

தலைமுடி வளர்ச்சிக்கு உதவும் உணவுகள்:

கூந்தல் வளர்ச்சிக்கு ஹேர் பேக் மட்டும் பயன்படுத்தினால் போதாது. உணவுகளும் அவசியம். இதற்கு இரும்புச்சத்து, புரதம், துத்தநாகம், பயோட்டின், ஒமேகா 3 போன்ற சத்துக்கள் இருந்த உணவுகளை சாப்பிட வேண்டும். பருப்பு, முட்டை, இறைச்சி, கீரை வகைகள், பீட்ரூட், உலர் திராட்சை, பாதாம், வால்நட், ப்ரோக்கோலி, ஆளி விதைகள், சால்மன் மீன், அவகேடா, சூரியகாந்தி விதைகள், ஆரஞ்சு, ஸ்ட்ராபெரி, ஆலிவ் எண்ணெய்ய், வேர்க்கடலை வெண்ணெய், கேரட், சர்க்கரைவள்ளி கிழங்கு, மாம்பழம், எலுமிச்சை, எள் போன்றவற்றை உங்களது உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். கூடவே போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். சர்க்கரை உணவுகள், துரித உணவுகள், எண்ணெயில் பொரித்த உணவுகள், மது, காஃபின் போன்றவற்றை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.