MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Hair Care Tips: தலைமுடி உதிருதா? கிச்சனில் உள்ள பொருட்களே போதும்.. நல்ல ரிசல்ட் தரும்.. சிம்பிள் டிப்ஸ் இதோ!

Hair Care Tips: தலைமுடி உதிருதா? கிச்சனில் உள்ள பொருட்களே போதும்.. நல்ல ரிசல்ட் தரும்.. சிம்பிள் டிப்ஸ் இதோ!

கூந்தல் பராமரிப்பு குறித்து இன்றைக்கு அனைவரும் அக்கறை காட்டத் தொடங்கியுள்ளனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே தலைமுடி உதிர்வு பிரச்சினை பெரிய அளவில் மன அழுத்தத்தை தரக்கூடியதாக இருக்கிறது. என்ன செய்தால் இருக்கிற முடியை பாதுகாக்கலாம். கரு கரு என்று தலைமுடி வளர வீட்டு கிச்சனில் உள்ள பொருட்களை வைத்து என்ன செய்யலாம் என்று பார்க்கலாம். 

2 Min read
manimegalai a
Published : Jul 14 2024, 11:56 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
ഉലുവ വെള്ളം

ഉലുവ വെള്ളം

வெந்தையம்: நம்முடைய கிச்சனில் உள்ள அஞ்சறைப்பெட்டியில் வெந்தயம் கண்டிப்பாக இருக்கும். அதிக முடி உதிர்வு பிரச்சினையால் பாதிக்கப்படுபவர்கள் வெந்தையத்தை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.  வெந்தயத்தை அப்படியே ஊறவைத்து சாப்பிடுவதைவிட அதனை முளைகட்டி சாப்பிடுவது நல்லது.

26
fenugreek

fenugreek

வெந்தைய எண்ணெய்:  தேங்காய் எண்ணெயை காய்ச்சும் போது அதில் வெந்தையம், கறிவேப்பிலை, மருதாணி இலை, சின்ன வெங்காயம் சேர்த்து காய்ச்சி அதை ஆற வைத்து வடிகட்டி பயன்படுத்தலாம். இந்த எண்ணெய் கலவையில் சிறிதளவு விளக்கெண்ணெய் சேர்த்து பூசினால் முடி உதிர்வு பிரச்சினை தீரும்.

விஜய் சேதுபதி மகளா இது? ரக்கட் லுக்கில் தெறிக்க விடுறாங்களே... வைரலாகும் ஃபேமிலி டைம் செல்பி புகைப்படங்கள்!

36

வெந்தயம் விதைகள்:  நீண்ட, அடர்த்தியான மற்றும் அழகான கூந்தலுக்கு வெந்தையம் உறுதுணையாக இருக்கும். வெந்தயம் விதைகளில் புரதம் நிறைந்துள்ளதால் கூந்தல் வறட்சி, முடி உதிர்தல் மற்றும் பொடுகு ஆகியவற்றைத் தடுக்கிறது.  கூந்தல் வேர்களை வலுப்படுத்தி உச்சந்தலையை ஈரப்பதமாக்குகின்றன. ஒரே இரவில் ஊறவைத்த வெந்தயத்தை பேஸ்ட்டாக அரைத்து, உச்சந்தலையில் மற்றும் தலைமுடியில் தடவி, 15 - 20 நிமிடங்கள் ஊறவைவத்து லேசாக ஷாம்பூவைப் பயன்படுத்தி குளித்தால் கூந்தல் மென்மையாகும். முடி உதிர்தல் கட்டுப்படும்.
 

46

நல்லெண்ணெய்: அதே போல நம்முடைய வீட்டு கிச்சனில் நல்லெண்ணெய் இருக்கும். பாரம்பரிய முறைப்படி வாரம் ஒருமுறை நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பதன்  மூலம் கூந்தலின் வேர்களுக்கு தேவையான சத்துக்கள் கிடைத்து, முடியின் வளர்ச்சி அதிகரிக்கும்.

மகன் திருமணத்தில் 1000 மணிநேர உழைப்பில் உருவான 100 காரட் வைர நெக்லஸ் அணிந்திருந்த நீதா அம்பானி! இத்தனை கோடியா
 

56
oil bath

oil bath

பொடுகு பிரச்சினை நீங்கும்:

முடி உதிர்தல் அதிகம் உள்ளவர்கள் நல்லெண்ணெய் கொண்டு வாரம் ஒருமுறை தலைக்கு மசாஜ் செய்து குளித்தால், உடலில் உள்ள அதிகப்படியான வெப்பம் வெளியேறும். தலையில் பொடுகுத் தொல்லை இருந்தால், வாரம் ஒருமுறை நல்லெண்ணெய் குளியலை மேற்கொண்டால், பொடுகுத் தொல்லை நீங்கும்.

66
hibiscus

hibiscus

செம்பருத்தி: நம்முடைய வீட்டு தோட்டத்தில் உள்ள செம்பருத்தி பூ முடி வளர்ச்சிக்கு ஏற்றது. செம்பருத்தி பூவை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும். செம்பருத்தி பூ, செம்பருத்தி இலையை பறித்து  தேங்காய் எண்ணெயில் காய்ச்சி ஆற வைத்து வடிகட்டி, அதை தினமும் தலையில் தேய்த்துவர முடி உதிர்வது கட்டுப்பட்டு கருமையாக வளரும்.

Shiva Rajkumar: தமிழில் முதல் முறையாக ஹீரோவாக களமிறங்கும் கன்னட சூப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமார்!

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
முடி வளர்ச்சி
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved