வழுக்கை தலையிலும் முடி வளர தேங்காய் எண்ணெயுடன் எந்தவொரு பொருள் கலந்து, எப்படி பயன்படுத்த வேண்டுமென்று இங்கு காணலாம்.

முடி உதிர்தல் என்பது ஆண் பெண் இருவரும் சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்சனை. பொதுவாக இந்த பிரச்சனையால் பெண்களை விட ஆண்கள் தான் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். அதுவும் இந்த காலத்தில் 30 வயது ஆகும் முன்பே பல ஆண்கள் வழுக்கை தலையுடன் இருக்கிறார்கள். இதற்கு முக்கிய காரணம் வாழ்க்கை முறை, உணவு பழக்கம் மற்றும் தலை முடிக்கு போதுமான பராமரிப்பு இல்லாமையே.

இத்தகைய சூழ்நிலையில், ஒல்லியான தலைமுடி மற்றும் வழுக்கை தலைக்கு தேங்காய் எண்ணெய் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆனால் முழு பலனை பெற மற்றொரு எண்ணெயும் தேவை. அதுதான் விளக்கெண்ணெய். கூந்தல் பராமரிப்பில் நீண்ட காலமாக விளக்கெண்ணெய் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இது உச்சந்தலைக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்து மயிர் கால்களை தூண்டும்.

தேங்காய் எண்ணெய் மற்றும் விளக்கெண்ணெய் கலவையானது முடி வளர்ச்சிக்கு சிறந்த வைத்தியமாகும். இந்த இரண்டு எண்ணெயையும் ஒன்றாக கலந்து தலைமுடிக்கு பயன்படுத்தும் போது முடி உதிர்தல் குறையும், முடி அடர்த்தியாகவும், ஆரோக்கியமாகவும் வளரும். குறிப்பாக வழுக்கை தலையிலும் முடி வளரும். இப்போது இந்த இரண்டு எண்ணெயை தலைமுடிக்கு எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து இங்கு காணலாம்.

பயன்படுத்தும் முறை :

2 ஸ்பூன் தேங்காய் எண்ணெயில் 1 ஸ்பூன் விளக்கெண்ணெய் சேர்த்து லேசாக சூடாக்க வேண்டும். அந்த எண்ணெயை வழுக்கை விழுந்த இடத்தில் தடவி விரல் நுனியால் மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். இப்படி செய்தல் இரத்த ஓட்டம் முடி வளர்ச்சியை தூண்டும்.

குறைந்தது 1 மணி நேரமாவது எண்ணெயை தலையில் வைத்திருக்க வேண்டும். உங்களது உச்சந்தலைக்கு ஏற்றதாக இருந்தால் நீண்ட நேரம் கூட வைக்கலாம். பின் தலைக்கு குளிக்க வேண்டும்.

நினைவில் கொள் :

- இந்த எண்ணெய் கலவையை வாரத்திற்கு 1-2 முறை பயன்படுத்தலாம் முதல் முறை பயன்படுத்தும் போது. குறைந்தது 10 நிமிடங்களாவது எண்ணெய் தலையில் இருக்க வேண்டும்.

- இந்த எண்ணெய் கலவையுடன் ரோஸ்மேரி எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெய் பயன்படுத்தினால் முடி வளர்ச்சி மேலும் சிறப்பாக இருக்கும்.

- தேங்காய் எண்ணெயுடன் விளக்கெண்ணெய் சேர்ப்பதால் இந்த கலவையை நீண்ட நேரம் தலையில் ஊற வைக்க வேண்டாம்.

- அதுபோல மிகவும் சூடான நிலையில் இந்த எண்ணெய் கலவையை உச்சந்தலையில் வைக்கக் கூடாது.