வழுக்கை தலையில் முடி வளர கறிவேப்பிலையை 'இப்படி' யூஸ் பண்ணுங்க!
முடி உதிர்ந்து வழுக்கையாகிவிட்டால் மீண்டும் தலைமுடி வளர சில விஷயங்களை மட்டும் செய்தால் போதும். அது என்னவென்று இங்கு பார்க்கலாம்.

Effective Home Remedies for a Bald Head : முடி உதிர்தல் என்பது எல்லாரும் சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்சனை. இதன் கூடவே பொடுகு, அரிப்பு போன்றவையும் ஒட்டிக்கொள்ளும் .சில பேருக்கு முடி உதிர்தல் அதிகமாக இருந்தால், வலிக்கு கூட ஏற்பட்டு விடும். குறிப்பாக சில ஆண்களின் தலை முடி மொத்தமுமாகக் கொட்டி முழுவதுமாக வழுக்கையாக காணப்படுவார்கள். வழுக்கை விழுந்ததால் பல வகையான எண்ணெய் தேய்த்தாலும் தலைமுடி மீண்டும் வளராத சோகத்தில் பலரும் இருப்பார்கள். அந்த லிஸ்டில் நீங்களும் இருக்கிறீர்களா? இது குறித்து பெரிதாக நீங்கள் கவலைப்பட தேவையில்லை. உங்கள் வீட்டில் இருக்கும் சில பொருட்களை மட்டும் பயன்படுத்தினால் போதும். வழுக்கை தலையில் மீண்டும் முடி வளர தொடங்கும்.
வெங்காயம்:
வழுக்கை தலையில் முடி வளர்வதற்கு பயன்படுத்தும் ஒரு அற்புதமான பொருள் வெங்காயம். இதில் சல்பர் நிறைந்துள்ளதால் அது முடி வளர்ச்சியை ஊக்குவிப்பது மட்டுமில்லாமல், முடி உதிர்தலையும் தடுக்க உதவும். இதற்கு நீங்கள் வெங்காயத்தின் சாற்றை தலையில் தேய்த்து குளித்து வந்தால் ரத்த ஓட்டம் அதிகரித்து, முடி வளர்ச்சி ஊக்குவிக்கப்படும். அது போல தினமும் இரண்டு சாம்பார் வெங்காயத்தை பச்சையாகவோ அல்லது காலத்தில் கலந்து சாப்பிடலாம்.
கறிவேப்பிலை
கறிவேப்பிலை முடி உதிர்தல் பிரச்சனையை போக்கி, முடி வளர உதவுகிறது. இதற்கு நன்கு காய்ந்த கருவேப்பிலையுடன் சிறிதளவு தேங்காய் எண்ணெய் கலந்து அந்த பேஸ்ட்டை உங்களது தலையில் தடவி 20 நிமிடம் அப்படியே வைத்துவிட்டு பிறகு குளிர்ந்து நீரில் குளிக்க வேண்டும். இதை நீங்கள் தொடர்ந்து செய்து வந்தால் ஒரு மாதத்திலேயே நல்ல பலன்களை நீங்கள் காண்பீர்கள்.
தேங்காய் எண்ணெய் மற்றும் விளக்கு எண்ணெய்:
2 ஸ்பூன் தேங்காய் எண்ணெயுடன், 1 ஸ்பூன் விளக்கெண்ணெய் கலந்து அதை லேசாக சூடுப்படுத்தி தலையில் தடவி மசாஜ் செய்து, பிறகு ஒரு டவலால் தலையை போர்த்திக் கொள்ளுங்கள். 5 நிமிடம் அப்படியே வைத்து விட்டு பிறகு மீண்டும் மசாஜ் செய்ய வேண்டும். இந்த முறையை நீங்கள் 3 நாட்களுக்கு ஒரு முறை செய்து வந்தால் உச்சந்தலையில் ரத்த ஓட்டம் அதிகரித்து வழுக்கை விழுந்த பகுதியில் முடி வளர ஆரம்பிக்கும்.
இதையும் படிங்க: பிரசவமான பின் தலைமுடி ஏன் அதிகமா உதிர்கிறது? தடுக்க சிம்பிள் டிப்ஸ்
வெந்தயம்
வெந்தயம் தலைமுடி வளர்ச்சியை ஊக்குவிக்க உதவும். முக்கியமாக இது முடி வேகமாக வளரவும், தலைமுடியில் ஏற்படும் பிரச்சனையை சரி செய்யவும் உதவும். இதற்கு ஊறவைத்த வெந்தயத்தை பேஸ்ட் போலாக்கி அதனுடன் வைட்டமின் ஈ ஆயில் கலந்து, உச்சந்தலையில் தடவி 15 நிமிடம் அப்படியே வைத்துவிட்டு பிறகு குளிக்க வேண்டும். இதை நீங்கள் வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால் உங்களது வழுக்கு தலையிலும் முடி துளிர்க்க ஆரம்பிக்கும்.
இதையும் படிங்க: இரண்டு பொருள் மட்டுமே!! இடுப்பளவு நீளமான முடிக்கு சூப்பர் டிப்ஸ்
முட்டை மாஸ்க்:
தலை முடி வளர்வதற்கும், வலிமைப்படுத்துவதற்கும் போதுமான அளவு புரதம் தேவை இதற்கு முட்டையின் மஞ்சள் கருடன் சிறிதளவு எலுமிச்சை சாறு, ஆலிவ் எண்ணெய் சேர்ந்து அதை தலைமுடியில் தடவி, சிறிது நேரம் அப்படியே வைத்துவிட்டு பிறகு ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும் இந்த முறையை நீங்கள் வாரத்திற்கு இரண்டு முறை மட்டும் செய்தால் போதும். உச்சந்தலைக்கு வேண்டிய ஊட்டச்சத்துக்கள் கிடைத்து, தலை முடி வளர ஊக்குவிக்கப்படும்.
தேங்காய் பால்
வழுக்கை தலையில் முடி வளர தேங்காய் பால் முக்கிய பங்கு வகிக்கிறது. இதற்கு கால் கப் தேங்காய் பாலில் 2 ஸ்பூன் தயிர் கலந்து அதை உங்களது உச்சந்தலையில் தடவி பிறகு 20 நிமிடம் அப்படியே வைத்து விட்டு குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும். வாரத்திற்கு 2-3 முறை இப்படி செய்து வந்தால் தலைமுடி மீண்டும் வளர ஆரம்பிக்கும்.