இரண்டு பொருள் மட்டுமே!! இடுப்பளவு நீளமான முடிக்கு சூப்பர் டிப்ஸ்
Hair Growth Tips : தோள்பட்டையில் இருக்கும் முடி இடுப்பு வரை நீளமாக வளர கீழே கொடுக்கப்பட்டுள்ள சில வீட்டு வைத்தியங்களை நீங்கள் பின்பற்றுங்கள்.

இரண்டு பொருள் மட்டுமே!! இடுப்பளவு நீளமான முடிக்கு சூப்பர் டிப்ஸ்
இன்றைய காலத்தில் பரபரப்பான வாழ்க்கை முறை காரணமாக பெரும்பாலானோர் முடி உதிர்தல் பிரச்சனைகள் அவதிப்படுகிறார்கள். இதன் காரணமாக அவர்கள் பல்வேறு முயற்சி செய்து கொண்டே இருக்கிறார்கள். உண்மையில் கூந்தல் ஒவ்வொருவரின் ஆளுமையை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், அவர்களது அழகையும் கூட்டுகிறது.
முடி நீளமாக வளர
பெண்கள் முதல் ஆண்கள் வரை என அனைவரும் முடி அடர்த்தியாகவும், ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். குறிப்பாக பெண்களுக்கு தலைமுடி நீளமாக இருப்பது ரொம்பவே பிடிக்கும். அது அவர்களின் அழகை கூட்டும். இருப்பினும், பல பெண்களுக்கு நீளம் மற்றும் அடர்த்தியான முடி இருப்பதில்லை. நீங்களும் அந்த நபர்களில் ஒருவராக இருந்தால் இந்த பதிவு உங்களுக்கானது மட்டுமே. கொடுக்கப்பட்டுள்ள சில வீட்டு வைத்தியங்களை நீங்கள் பின்பற்றுவதன் மூலம் உங்கள் தலைமுடியை நீளமாகவும், அடர்த்தியாகவும் மாற்ற முடியும்..
இதையும் படிங்க: கொத்து கொத்தா முடி கொட்டுதா? இரவில் இதை மட்டும் செய்யுங்க...அதிசயம் நடக்கும்
முடி நீளமாக வளர டிப்ஸ்;
தேவையான பொருட்கள்:
வெந்தயம் மற்றும் கற்றாழை ஜெல்
வெந்தயத்தின் நன்மைகள்:
வெந்தயம் முடி நன்றாக வளர உதவுகிறது மற்றும் ஒல்லியாக இருக்க முடியை அடர்த்தியாக உதவும்.
கற்றாழை ஜெல் நன்மைகள்:
- கற்றாளைஜல் உச்சந்தலையில் இருக்கும் அனைத்து வகையான தொற்றுக்களையும் நீக்க உதவும்.
- முடியை ஈரப்பதமாக வைக்க உதவும்.
- கற்றாழை ஜெல்லில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் முடியை ஆரோக்கியமாக்கும்.
முடி நீளமாக வளர கற்றாழை ஜெல் மற்றும் வெந்தயத்தை பயன்படுத்தும் முறை:
முதலில் வெந்தயத்தை பேஸ்ட் போல் நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு அதை வடிகட்டி சுமார் 1-2 அப்படியே வைத்து விடுங்கள். பிறகு அதனுடன் கற்றாழை ஜெல் சேர்த்துக் கொள்ளுங்கள். வேண்டுமானால் இதனுடன் வைட்டமின் ஈ கேப்ஸ்யூல் சேர்த்துக் கொள்ளுங்கள். இப்போது அனைத்தையும் நன்றாக கலந்து அதை உங்களது உச்சம் தலையில் இருந்து முடியும் வரை நன்றாக தடவ வேண்டும். பின் சுமார் 15-20 நிமிடங்கள் அப்படியே வைத்து விட்டு பிறகு லேசான ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும். கண்டிஷனரையும் பயன்படுத்த மறக்காதீர்கள். இந்த முறையை நீங்கள் வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால் சில நாட்களிலேயே நல்ல பலன்களை காண்பீர்கள்.
இதையும் படிங்க: நீளமான கூந்தல் வளர அரிசி, கிராம்பு நீர் மேஜிக்; எப்படி பயன்படுத்துவது?