நீளமான கூந்தல் வளர அரிசி, கிராம்பு நீர் மேஜிக்; எப்படி பயன்படுத்துவது?
அரிசி நீரில் இந்த ஒரு பொருளைச் சேர்த்து கூந்தலுக்குத் தடவினால், உங்கள் கூந்தல் மிகக் குறுகிய காலத்தில் இடுப்புவரை வளரும். எப்படி அந்த மேஜிக் என்று பார்க்கலாம்.

நீளமான கூந்தலுக்கு அரிசி, கிராம்பு நீர்
வயதானாலும் கூந்தல் அடர்த்தியாக, நீளமாக, கருப்பாக, பளபளப்பாக இருக்க வேண்டும் என்று அனைவரும் விரும்புவார்கள். அதற்காக சந்தையில் கிடைக்கும் முடி வளர்ச்சிக்கான ஆயில், ஷாம்பூ, சீரம் என்று வாங்கி பயன்படுத்துகிறார்கள். ஆனால் அவற்றில் இருக்கும் ரசாயனங்கள் கூந்தலைக் கெடுக்கும் என்பதை பலருக்கும் தெரிந்தே செய்கிறார்கள். எப்படியோ முடி வளர வேண்டும் என்ற ஆசைதான் இதற்குக் காரணம். அவற்றால் கூந்தல் நீளமாக வளர்வதற்கு பதிலாக உதிர்வதற்குத்தான் வாய்ப்பு அதிகம்.
அரிசி நீர், கிராம்பு மேஜிக்
தலைமுடி உதிர்வதை எப்படி கட்டுப்படுத்தி, வளரச் செய்வது என்று பார்க்கலாம். வீட்டில் கிடைக்கும் இரண்டு பொருட்களால் கூந்தலை நீளமாக்கலாம். அவை அரிசி நீர், கிராம்பு என்று கூறப்படும் இலவங்கம். அரிசி நீரில் கிராம்பு சேர்த்து கூந்தலுக்கு தடவினால், கூந்தல் மிகக் குறுகிய காலத்தில் இடுப்புவரை வளரும்.
முடி வளர்ச்சிக்கு தேவையான பொருட்கள்
ஆஞ்சல் ஜெயின் தனது இன்ஸ்டாகிராமில் நீண்ட கூந்தலுக்குப் பயன்படுத்தும் உதவிக் குறிப்புகளைப் பகிர்ந்து இருக்கிறார். சமீபத்தில் ஹேர் டோனர் செய்யும் முறையைப் பகிர்ந்துள்ளார். இதைப் பயன்படுத்தி தான் கூந்தலை நீளமாக்கிக் கொண்டதாகக் கூறியுள்ளார். இந்த டோனருக்கு என்னென்ன தேவை என்று பார்ப்போம்.
முடி வளர்ச்சிக்கு தேவையான பொருட்கள்:
அரிசி - 2 தேக்கரண்டி
நீர் - 1 கப்
கிராம்பு - 8-10
தளமுடிக்கான டோனர் செய்முறை
ஒரு பெரிய கிண்ணத்தில் 2 தேக்கரண்டி அரிசி, நீர், கிராம்பு சேர்த்து 4-5 மணி நேரம் ஊற வைக்கவும். நீர் மஞ்சள் நிறமாக மாறும். டோனர் ஆன பிறகு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி கூந்தலுக்கு ஸ்ப்ரே செய்யவும். இதற்கு வாசனை இருக்காது. எப்போது வேண்டுமானாலும் தடவலாம். தலைக்கு குளிக்க வேண்டியதில்லை. இரவில் தூங்கும் முன் தடவுவது நல்லது.
சளி, இருமல் பிரச்சினையா? மதுரை பேமஸ் முள்ளு முருங்கை வடை செஞ்சு பாருங்க.. வேற லெவல்ல இருக்கும்!
கிராம்பு மற்றும் அரிசி நீரின் பயன்கள்
கிராம்பு கூந்தல் வளர்ச்சிக்கு உதவுகிறது. இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் சருமம் வறண்டு போவதைத் தடுக்கிறது. கூந்தலின் வேர்க்கால்களை வலுப்படுத்துகிறது. அரிசி நீரில் புரதம் உள்ளது. இது கூந்தலுக்குப் பளபளப்பைத் தருகிறது. கூந்தல் சேதமடைவதைத் தடுக்கிறது.