ஓமம், பெருஞ்சீரக டீ குடிப்பது உடலுக்கு நல்லதா?

தூங்குவதற்கு முன் ஓமம் மற்றும் பெருஞ்சீரக டீ குடிப்பது நல்லதா? இதனால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்ன? என்பதை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Is this Good for we consume ajwain and saunf tea before bedtime?

காலையில் நாம் எழுந்ததும் முதலில் தேடுவது சூடான ஒரு கப் டீயை தான். பொதுவாக தேநீர் என்பது அனைவரின் காலை வழக்கமாக உள்ளது. பலரும் ஒரு கப் டீ செய்திதாளுடன் ஒரு மணி நேரத்தை செலவிடுவார்கள். டீ பல நேரங்களில் எனர்ஜி டிரிங்காகவும் சில நேரங்களில் மருந்தாகவும் மாறுகிறது. உடல் வலி, சோர்வு, தலைவலி இருந்தால் நம்மில் பலரும் இஞ்சி டீ பருகுவதும் உண்டு. சிலர் உணவுவேளை முடிந்தவுடன் டீ குடிப்பதை பழக்கமாக கொண்டிருப்பார்கள். டீ என்பது நம் அனைவரின் வாழ்வில் ஒன்றோடு ஒன்று இணைந்துள்ளது. பலருக்கும் இரவில் தூங்கபோகும் போது டீ குடிக்கலாமா? அது உடலுக்கு நல்லதா என்ற கேள்விகள் எழும். அதுகுறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு உணவு பழக்கம் மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. மருத்துவர்கள் இரவு உணவை 8 மணிக்குள் முடிப்பது நல்லது என்று கூறுகிறார்கள். இரவு சாப்பிட்டவுடன் தூங்க செல்லக்கூடாது. சாப்பிட்ட உடன் தூங்கினால் செரிமானம் நடக்காமல் அது பல பக்கவிளைவுகளை உடலில் ஏற்படுத்தும். செரிமானத்திற்கு சிலர் ஓமம் டீ, பெருஞ்சீரக டீ குடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். 

தூங்குவதற்கு முன் ஓமம், பெருஞ்சீரக டீ குடிக்கலாமா?

ஓமம் மற்றும் பெருஞ்சீரகம் உணவு வகைகளில் பரவலாகப் பயன்படுத்தப்படும் மசாலா பொருட்கள். இவை செரிமானத்தை மேம்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவும். ஓமம் மற்றும் பெருஞ்சீரகத்தை தேநீரில் சேர்த்து பருகுவதன் மூலம் செரிமானம் மேம்படும். 

ஓமத்தினால் ஏற்படும் நன்மைகள்

ஓமத்தில் செரிமான நொதிகளின் உற்பத்தியைத் தூண்டும் சேர்மங்கள் உள்ளன. அவை நாம் உண்ணும் உணவை செரிமானம் செய்ய உதவும்கிறது. இது அஜீரணம், வீக்கம் மற்றும் வாயு போன்றவற்றை தடுக்க ஓமம் ஒரு அருமந்தாகும். எனவே இதை தினசரி பானமாக குடிப்பதால் ஜீரணசக்தி அதிகரிக்கும்.

பெருஞ்சீரகத்தினால் ஏற்படும் நன்மைகள்

சீரகம் என்றால் சீர்+அகம் என்பது பொருள். நமது உடலில் அகத்தில் உள்ளவற்றை சீர்செய்ய சீரகம் பயன்படுகிறது. அதிலும் பெருஞ்சீரம் பல மருத்துவ நன்மைகள் நிறைந்தது. பெருஞ்சீரகம் செரிமான மண்டலத்தின் தசைகளை தளர்த்தி, சீரான செரிமானத்திற்கு உதவும். தூங்க செல்வதற்கு பெருஞ்சீரக தேநீர் குடிப்பதன் மூலம் செரிமான அமைப்பு இரவில் சரியாக செயல்பட இது உதவுகிறது. 

நிம்மதியான தூக்கம்

ஒரு மனிதனுக்கு நிம்மதியான தூக்கம் என்பது என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். இரவில் ஓமம் மற்றும் பெருஞ்சீரகத்தை டீயில் சேர்த்து மன அழுத்தம் குறைந்து பதட்டத்தை தணிக்கிறது. இதனால் மனம் அமைதி அடைந்து நம்மால் எளிதில் நிம்மதியாக தூங்க முடியும். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios