தலை முடிக்கு அதிகமாக ஷாம்பு பயன்படுத்தினால் என்ன ஆகும் என்று இந்த பதிவில் காணலாம்.
பலரும் நீளமான அடர்த்தியான மற்றும் கருப்பாக முடி வளர வேண்டும் என்று விரும்புகிறார்கள். இதற்காக முடி சார்ந்த பலவிதமான பராமரிப்பு முறைகளை பின்பற்றுகின்றனர். இன்னும் சிலரோ முடி சுத்தமாக இருக்க வேண்டும் என்று அடிக்கடி ஷாம்பு போட்டு குளிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர்.
ஷாம்பு தலையில் குவிந்து இருக்கும் அழுக்கு, தூசிகள் மற்றும் எண்ணெயை சுத்தம் செய்வது மட்டுமல்லாமல் முடி துளைகளையும் திறக்கும். ஆனால் அளவுக்கு அதிகமாக ஷாம்பு பயன்படுத்துவது நல்லதல்ல என்கின்றனர் நிபுணர்கள். அப்படி தலைமுடிக்கு அதிகமாக ஷாம்பு போடுவதால் ஏற்படும் தீமைகள் குறித்து இந்த பதிவில் காணலாம்.
தலைமுடிக்கு அதிகமாக ஷாம்பு போடுவதால் ஏற்படும் தீமைகள் :
1. முடி வறட்சியாக்கும்
தலைமுடிக்கு அதிகமாக ஷாம்பு போடுவதால் உச்சந்தலையை வறட்சியாக்கிவிடும், முடியின் அமைப்பு பாதிக்கப்படும், உச்சந்தலையில் இருக்கும் இயற்கையான எண்ணெயை இழந்துவிடும் மற்றும் முடி உடைவதற்கு வழிவகுக்கும். இது தவிர சருமத்தில் எரிச்சல் அரிப்பு போன்ற பிரச்சனைகளையும் அதிகரிக்கும்.
2. பொடுகுத் தொல்லை
அதிகமாக தலை முடிக்கு ஷாம்பு போட்டால் உச்சந்தலையில் வறட்சி எரிச்சலை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், பொடுகு பிரச்சனையையும் அதிகரிக்க செய்யும். அதாவது அடிக்கடி தலைக்கு ஷாம்பு போட்டு குளிக்கும் போது உச்சந்தலையில் எண்ணெய் பசை குறைந்து விடும். மேலும் நீரிழப்பும் ஏற்படும். இதனால் பொடுகு பிரச்சனை ஏற்படும்.
3. பலவீனமான முடி
அடிக்கடி தலை முடிக்கு ஷாம்பு போட்டு குளித்தால் முடி பலவீனமாகும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும் உச்சந்தலையில் உள்ள துளைகள் மற்றும் முடியின் வேர்களை சேதப்படுத்தி முடி வளர்ச்சியை தடுக்கும். இதனால் முடி நீளமாக வளராது மற்றும் முடி உதிர்தல் பிரச்சனையும் அதிகமாக இருக்கும்.
4. முடியின் இயற்கை எண்ணெய் பாதிப்பு
ஷம்பு தலைமுடியில் பதிந்திருக்கும் அழுக்கு மற்றும் எண்ணெய்யை சுத்தம் செய்வதற்காக தான் பயன்படுத்துகிறோம். ஆனால் அதில் இருக்கும் சில கடினமான ரசாயனங்கள் முடியின் துளைகளுக்கு தீங்கு விளைக்கும். எனவே அடிக்கடி ஷாம்பு பயன்படுத்தினால் உச்சந்தலையில் இருக்கும் இயற்கையான எண்ணெய் பசையை இழந்துவிடுவோம்.
5. முடி மந்தமாகும்
நாம் பயன்படுத்தும் பெரும்பாலான ஷாம்புக்கள் சில பாதுகாப்பு பொருட்கள் இருக்கிறது. அவை அனைத்தும் முடியிலிருந்து இருப்பதத்தை முற்றிலும் நீக்கிவிட்டு, முடியை மந்தமாக மாற்றிவிடும்.
வாரத்திற்கு எத்தனை முறை ஷாம்பு போடணும்?
ஒரு வாரத்திற்கு அதிகபட்சமாகவே இரண்டு முறை மட்டும் ஷாம்பு போட்டால் போதும் அதைவிட அதிகமாக போட்டால் முடியும் வேர்கள் சேதமாகும் மற்றும் முடியும் அமைப்பு மாறிவிடும். பயன்படுத்துங்கள் இது முடியும் ஆரோக்கியத்தை பெரிதாக பாதிக்காது.
