முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் விரைவில் நிரந்தரமாக மறைய சில வீட்டு வைத்தியங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
முகத்தில் சிறிய குறைபாடுகள் கூட அழகை விகாரமாக காட்டிவிடும். அதுவும் குறிப்பாக கரும்புள்ளிகள். கரும்புள்ளிகள் தோன்றுவதற்கு பல காரணங்கள் இருந்தாலும் அவற்றை நிரந்தரமாக நீக்க சில எளிய வீட்டு வைத்திய முறைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
கரும்புள்ளிகளை நிரந்தரமாக நீக்க எளிய வீட்டு வைத்தியங்கள் :
1. நார்ச்சத்து மற்றும் சரிவிகித ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொண்டால் கரும்புள்ளிகள் வருவதை தவிர்க்கலாம் என்று பியூட்டிஷின்கள் பரிந்துரைக்கின்றன.
2. முருங்கை இலை சாறுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து முகத்தில் தடவி நன்கு காய்ந்ததும் முகத்தை தண்ணீரில் கழுவ வேண்டும். தொடர்ந்து செய்து வந்தால் கரும்புள்ளிகள் விரைவில் மறையும்.
3. ஒரு தக்காளி மற்றும் ஒரு வெள்ளரிக்காய் இரண்டையும் தனித்தனியாக அரைத்து ஒன்றாக கலந்து அதை முகத்தில் தடவி நன்கு காயும் வரை அப்படியே வைத்து விட்டு பிறகு முகத்தை கழுவ வேண்டும். இந்த முறையை தொடர்ந்து செய்து வந்தால் கரும்புள்ளிகள் நாளடைவில் மறைந்துவிடும்.
4. நன்கு முக்கிய ஒரு கைப்பிடி வேப்பிலையை தண்ணீரில் போட்டு நீராவியாக ஆவி பிடித்து வந்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் விரைவில் மறைந்துவிடும்.
5. ஒரு கிண்ணத்தில் வெள்ளரி சாறு, புதினா சாறு மற்றும் எலுமிச்சை சாறு மூன்றையும் சம அளவு எடுத்து நன்கு கலந்து கரும்புள்ளிகள் மீது தடவி பத்து நிமிடம் கழித்து முகத்தை கழுவ வேண்டும். சில நாட்கள் இதை தொடர்ந்து செய்து வந்தால் கரும்புள்ளிகள் நாளடைவில் மறைய ஆரம்பிக்கும்.
6. ஒரு கிண்ணத்தில் சந்தன பொடி மற்றும் மஞ்சள் தூள் இரண்டையும் சம அளவு எடுத்து அதனுடன் பச்சை பால் கலந்து அந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி சில நிமிடங்கள் அப்படியே வைத்து விட்டு பிறகு கழுவ வேண்டும். இதை தொடர்ந்து செய்து வந்தால் கரும்புள்ளிகள் மறையும்.
7. நன்கு பழுத்த வாழைப்பழத்தை மசித்து அதனுடன் பால் கலந்து பேஸ்ட் போலாக்கி அதை முகத்தில் பூசி சில நிமிடங்கள் அப்படியே வைத்து விட்டு பிறகு மிதமான சூட்டில் இருக்கும் தண்ணீரால் முகத்தை கழுவ வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் கரும்புள்ளிகள் கொஞ்சம் கொஞ்சமாக மறையும் மற்றும் முகமும் பொலிவாக மாறும்.
8. நன்கு பழுத்த பப்பாளி பழத்தை மசித்து அதனுடன் சிறிதளவு தேன் கலந்து முகத்தில் தடவி பத்து நிமிடம் அப்படியே வைத்து விட்டு பிறகு மிதமான சூட்டில் இருக்கும் தண்ணீரில் முகத்தை கழுவ வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் சில நாட்களிலே கரும்புள்ளிகள் மறையும், முகமும் நல்ல பொலிவுடன் காணப்படும்.
9. முல்தானி மட்டியுடன் வெள்ளரி சாறு கலந்து அந்த பேஸ்டை முகத்தில் கரும்புள்ளிகள் இருக்கும் இடத்தில் தடவி சிறிது நேரம் அப்படியே வைத்து விட்டு பிறகு மிதமான சூட்டில் இருக்கும் தண்ணீரால் முகத்தை கழுவ வேண்டும். இந்த டிப்ஸை வாரத்திற்கு ஒருமுறை செய்து வந்தாலே போதும். நாளடைவில் கரும்புள்ளிகள் மறைந்துவிடும்.
10. அரிசி மாவில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போலக்கி அதை முகத்தில் பூசி சிறிது நேரம் அப்படியே வைத்துவிட்டு கழுவி வந்தால் கரும்புள்ளிகள் மறையும்.
11. ரெண்டு ஸ்பூன் தயிருடன் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து முகத்தில் தடவி வந்தால் கரும்புள்ளிகள் சீக்கிரமாகவே மறைந்து விடும்.
12. உருளைக்கிழங்கை வெட்டி கரும்புள்ளிகள் மீது தேய்த்து வந்தால் கரும்புள்ளிகள் மறைய ஆரம்பிக்கும்.
13. மஞ்சள் கொடியில் கருவேப்பிலை சாறு சேர்த்து அதை முகத்தில் தடவி வந்தால் கரும்புள்ளிகள் விரைவில் மறையும்.
