Beauty tips for Face: பட்டுப்போல முகத்தில் முத்துப்போல பருக்கள்.. பட்டுன்னு போக நச்சுன்னு 4 டிப்ஸ்!!
முகத்தில் ஆங்காங்கே முத்து முத்தாக பருக்கள் வந்து பாடாய் படுத்தும். உங்களுக்காகவே சில வீட்டு டீஸ் சிகிச்சை இருக்கு. செலவு இல்லாமல் ஈஸியா எந்த பக்க விளைவும் இல்லாமல் முகப்பருக்களை போக்கலாம்.
கிச்சனில் மருந்து இருக்கு
எண்ணெய் பசை அதிகம் உள்ள சருமத்தில் முகப்பருக்கள் அதிகம் வரும். முகத்தை நன்றாக கழுவி துடைத்து இரண்டு சொட்டு விளக்கெண்ணெய் முகத்தில் நன்றாக பூசி லேசாக மசாஜ் செய்யவும். இது முகப்பருவை உண்டாக்கும் பாக்டீரியாவை அழிக்கும். இது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
விளக்கெண்ணெய் மசாஜ்
முகத்தில் தடிப்புகள், அலர்ஜியால் பாதிப்பு வரலாம். இவற்றை விளக்கெண்ணெய் சரிபடுத்தும். சிலருக்கு முகம், கழுத்து, முதுகுப்பகுதியில் இருக்கும் பருக்கள் எரிச்சலை ஏற்படுத்தும். விளக்கெண்ணெய்யை பஞ்சில் எடுத்து முகம், கழுத்து பகுதியில் நேரடியாக தடவி 5 நிமிடங்கள் ஊறவிடவும். பின்னர் நன்றாக மசாஜ் செய்து ஃபேஸ் வாஷ் மூலம் கழுவினால் பருக்களின் தாக்கம் படிப்படியாக குறையும்.
வயசு 20.. ஆனா பார்ப்பதற்கு வயசான மாதிரி தெரிறீங்களா..? காரணம் 'இந்த' நாலுல ஏதாவது ஒன்னு தாங்க..
சாப்பிடவே சாப்பிடாதீங்க
எண்ணெய்யில் பொரித்த உணவுகள் தவிர்க்க வேண்டும். அதிகமாக மேக்அப் போடக்கூடாது. மன அழுத்தம், மன இறுக்கம் இருந்தாலும் அதிக அளவில் எண்ணெய் பசை சுரக்கும். தியானம் செய்வதன் மூலம் முகம் பொலிவடையும். புன்னகையுடன் இருங்கள். மன அழுத்தம் குறையும் செயற்கை மேக் அப் இல்லாமல் முகம் பளிச்சென்று இருக்கும்.
பால் + கடலை மாவு
கடலை மாவுடன் பசும்பால் கலந்து பேக் போல செய்து முகத்தில் பூசி குளிக்கலாம். கை கால்கள் முகத்திலும் பூசி குளிக்க சருமம் மென்மையாகும் பருக்கள் படிப்படியாக குறைந்து பளிச் என்று மாறும்.
பச்சை பாலில் இந்த மூணுல ஏதாவது ஒன்னு கலந்து யூஸ் பண்ணுங்க.. முகம் பளபளப்பாகுமாம்..!