பிரசவ கால தழும்புகள்; வயிற்றில் வரிக்குதிரை பதற்றம் வேண்டாம்; ஈஸியாக போக்கலாம்!!

பெண்களுக்கு பிரசவத்திற்கு பின்னர் தசைகள் விரிவடைவதால் தழும்பு ஏற்படுகிறது. இதுமட்டுமின்றி, எடை அதிகரிப்பு காரணமாகவும் இளம்வயதில் தொடை , கழுத்து, தோள்பட்டை ஆகிய இடங்களில் தழும்புகள் உருவாகிறது. இதை எப்படி போக்குவது என்று பார்க்கலாம்.

Home remedies: How to removes stretch marks after pregnancy

சருமத்தில் இருக்கும் கொலஜன், எலாஸ்டின் புரதங்கள் சருமத்தை பாதுகாக்கின்றன. வயிறு விரிவடைந்து சுருங்கும்போது, டெர்மிஸ் படிமம் உடைக்கப்பட்டு, தழும்பு விழுகிறது. இதேபோல் தான் கால், கைகளிலும் ஏற்படுகிறது.


வயிற்றில் தழும்புகள்:
பெண்களுக்கு பிரசவத்திற்கு பின்னரும் உடல் எடை அதிகரித்து பின்னர் ஒல்லியானாலும் இந்த தழும்புகள் வரும். கர்ப்பமாக இருக்கும் போது, ர சருமத்தின் எலாஸ்டிக் தன்மை விரிவடைந்து, குழந்தை பிறந்த பின்பு மீண்டும் சுருங்குகிறது. அப்போது தழும்புகள் போன்ற கோடுகள் ஏற்படும். 


கற்றாழை ஜெல்:
கற்றாழை ஜெல்லை, குளித்த பின்னர் தழும்புகள் உள்ள இடத்தில் தடவினால், தழும்புகள் படிப்படியாக மறையும். தேங்காய் எண்ணெய்  சருமத்திற்கு ஏற்றது ஆரோக்கியமானது. தேங்காய் எண்ணெயை தழும்புகள் மீது தடவி, சிறிது நேரம் மசாஜ் செய்து கழுவினால் தழும்புகள் படிப்படியாக மறையும். 

காலையில் ஒருமுறை இப்படி முட்டையை வைத்து டேஸ்டான டிபன் செய்ங்க.. ரொம்பவே சத்தானது..

விளக்கெண்ணெய்:
பிரசவ தழும்புகளை விளக்கெண்ணெய் நீக்கும் தன்மை கொண்டது.  தழும்புகள் உள்ள அடிவயிறு, தோள்பட்டைகளில் இரவில்  விளக்கெண்ணெய தடவி மசாஜ் செய்து வந்தால் எளிதில் மறையும்.

பாதாம் எண்ணெய்:
சர்க்கரையுடன் சம அளவு பாதாம் எண்ணெயை எடுத்து இரண்டையும் கலக்க வேண்டும். அதை தழும்புகள் உள்ள இடத்தில் தேய்த்த பிறகு சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவ வேண்டும். தழும்புகள் மெல்ல மெல்ல மறையும். இதை வாரத்திற்கு 2அல்லது 3 முறை செய்ய வேண்டும்.

மணமான பெண்கள்.. கூகுளில் அதிகம் எதை பற்றி தேடுகிறார்கள் தெரியுமா?

லாவெண்டர் ஆயில்:
லாவெண்டர் ஆயில் தழும்புகளை நீக்குவதற்கு சிறந்தது. தழும்பின் மீது தினமும் மூன்று முறை தடவி மசாஜ் செய்தால், புதிய செல்கள் உருவாகி, தழும்பு மறையும். அவோகேடோ, பாதாம் எண்ணெய்களைப் பயன்படுத்தினால் நாளடைவில் தழும்புகள் மறைந்து விடும்.

வெள்ளரிக்காய் மஞ்சள் பேஸ்ட்:
வெள்ளரிக்காயை பேஸ்ட் போல அரைத்து அத்துடன் கஸ்தூரி மஞ்சள் கலந்து தழும்புகள் மீது பூசி சிறிது நேரம் உலர விட்டு கழுவ வேண்டும். வாரம் மூன்று முறை இதை செய்தால் தழும்புகள் மறையும்.

வைட்டமின் E ஆயில் மசாஜ்
ஆலிவ் ஆயிலை தழும்புகள் மீது மசாஜ் செய்து வர படிப்படியாக மறையும். அதே போல வைட்டமின் E ஆயிலும் நல்ல பலனைக் கொடுக்கும். 

உடற் பயிற்சி அவசியம்:
கருவுற்றிருக்கும்போது நீர்ச்சத்து, நார்சத்துள்ள காய்கறிகளை அதிகமாக சாப்பிட வேண்டும். மருத்துவர்களின் பரிந்துரையின் கீழ் க்ரீம்களை தடவலாம். பிரசவத்துக்குப் பிறகு, ஃபிட்னெஸ் பயிற்சி செய்தால் 50 சதவிகிதத் தழும்புகள் மறைந்துவிடும். சிசேரியன் செய்த பெண்களும், நடைப்பயிற்சி, ட்ரெட் மில் போன்ற எளிய பயிற்சிகளில் ஈடுபடலாம். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios