கழுத்துக்கு பின்னால் உருவாகும் கரும்புள்ளிகள்- என்ன செய்யலாம்?
பல காரணங்களால் கழுத்தின் நிறம் மங்க துவங்குகிறது. இதுபோன்ற பிரச்சனைகளுக்கு வீட்டிலேயே தீர்வுகள் உள்ளன. அதுகுறித்து விரிவாக தெரிந்துகொள்வோம்.
கழுத்தின் நிற வேறுபாடு சிலருக்கு எரிச்சலூட்டும். ஆனால், சிலருக்கு கழுத்தில் உள்ள கருப்பு நிறப் பிரச்சனையாக மாறிவிடும். ஒழுங்காக தேய்த்து குளிக்காததால் கழுத்து கருப்பு நிறமாகிறது என்று கூறுபவர்கள் பலர் உண்டு. அதேபோல வெயிலின் அதிக நேரம் அலைவதும் மற்றும் வியர்வை வெளியேறும் போது துடைக்காமல் விட்டுவிடுவதும் போன்ற காரணங்களால் கழுத்தின் பின்பகுதி கருப்பு நிறத்தில் காட்சியளிப்பதாக சொல்லப்படுவதுண்டு. எனினும் இதுவொரு சாதாரண பிரச்னை தான். கொஞ்சும் முயற்சி செய்தால் போது, விரைவாக தீர்வு கிடைக்கும்.
தயிர்
கழுத்தில் உள்ள கருமையைப் போக்க தயிர் உதவுகிறது. ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறுடன் இரண்டு தேக்கரண்டி தயிர் சேர்க்கவும். இப்போது அந்த கலவையை கழுத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து தண்ணீரில் கழுவ வேண்டும். இதை தொடர்ந்து 10 நாட்கள் வரை செய்து வந்தால், அடுத்தடுத்து மாற்றங்கள் தெரியும்.
உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கில் சருமத்தில் உள்ள கரும்புள்ளிகளை அகற்ற உதவும் பொருட்கள் உள்ளன. அவை கரும்புள்ளிகளை நீக்கி, சருமத்திற்கு இயற்கையான பொலிவை அளிக்கும். இதற்கு ஒரு சிறிய உருளைக்கிழங்கை எடுத்து தோலுரித்த பின் சாறு தயார் செய்யவும். பிறகு அந்த சாற்றை கழுத்தில் தடவ வேண்டும். அது உலர்ந்ததும், வெதுவெதுப்பான நீரில் கழுவினால் போதும்.
எண்டிங்கே இல்லாமல் உடலுக்கு நன்மைகளை வாரி வழங்கும் பெருங்காயம்..!!
மஞ்சள்
மஞ்சள் கழுத்தின் நிறமாற்றத்தை நீக்கி இயற்கையான பொலிவைத் தருகிறது. அதற்கு இரண்டு தேக்கரண்டி கடலை மாவு, ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், அரை டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் சிறிது ரோஸ் வாட்டர் சேர்த்து கலவையாக்க வேண்டும். அந்த கலவையை கழுத்தில் 15 நிமிடங்கள் தடவவும். பின்னர் வெதுவெதுப்பான நீரில் நன்கு கழுவ வேண்டும். இதை வாரத்திற்கு இரண்டு முறை வரை பயன்படுத்துவது நல்ல பலனை தரும்.
பாதாம் எண்ணெய்
கற்றாழை ஜெல்லை ஒரு ஸ்பூன் தயிருடன் கலந்து கழுத்தில் தடவுவதும், இந்த பிரச்னைக்கு நல்ல தீர்வை தரும். பாதாம் எண்ணெயில் வைட்டமின் ஈ மற்றும் ப்ளீச்சிங் ஏஜெண்டுகள் உள்ளன. இவை கரும்புள்ளிகளைப் போக்க உதவும். அதற்கு இரண்டு துளிகள் பாதாம் எண்ணெயை எடுத்து கழுத்தில் நன்றாக மசாஜ் செய்யவும். 25 நிமிடங்களுக்குப் பிறகு, உங்கள் கழுத்தை தண்ணீரில் கழுவலாம். இவ்வாறு மாதம் இருமுறை செய்து வந்தால், விரைவிலேயே மாற்றம் தெரிய துவங்கும்.