முடியை பட்டு போல மென்மையாக மாற்றுவது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

தற்போது நிறைய பேரின் முடி தேங்காய் நார் போல வறண்டு இருக்கிறது. இது பார்ப்பதற்கு அழகாக இருக்காது. இப்படி வெடிப்பு விழுந்து வறண்டு இருக்கும் முடியை சரி செய்ய இந்த பதிவில் இரண்டு குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவை இரண்டையும் நீங்கள் தொடர்ந்து 7 நாட்கள் பின்பற்றி வந்தால் உங்களது தலைமுடி பட்டு போல மென்மையாக மாறும். பார்ப்பதற்கு ஷைனிங் ஆகவும் இருக்கும். சரி எப்போது அந்த இரண்டு குறிப்புகளை பற்றி பார்க்கலாம்.

டிப்ஸ் 1:

நன்கு பழுத்த ஒரு வாழைப்பழத்தை தோலுரித்து சின்ன சின்னதாக வெட்டி அதை ஒரு மிக்ஸி ஜாரில் போடவும். அதனுடன் 2 ஸ்பூன் தயிர் சேர்த்து நன்கு பேஸ்ட் போல் அரைத்து அதை ஒரு கிண்ணத்தில் ஊற்றவும். இதனுடன் 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெயும் சேர்த்து நன்றாக கலக்கவும். இப்போது இந்த பேஸ்ட்டை உங்களது உச்சந்தலை முதல் நுனி வரை தடவி 20-30 அப்படியே வைத்துவிட்டு பிறகு ஹெர்பல் ஷாம்பு போட்டு தலைக்கு குளிக்கவும். வாரத்திற்கு ஒரு முறை இந்த ஹேர் பேக்கை போட்டு வந்தால் முடியின் வறண்ட தன்மை கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும். பட்டு போல மென்மையாக மாறும்.

டிப்ஸ் 2 :

ஆளி விதைகளைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். இது தலைமுடியை அழகாக பராமரிக்க உதவுகிறது. இதற்கு ஒரு அகலமான பாத்திரத்தில் 1 கப் ஆளி விதைகளை போட்டு 4 கப் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க வைக்கவும். கொழ கொழவென வரும் ரொம்பவே திக்காக இருக்க கூடாது. பிறகு அது ஆற வைத்து ஒரு துணியில் ஊற்றி வடிகட்டி அதிலிருந்து ஒரு ஜெல் கிடைக்கும். அந்த ஜெல்லை தொடர்ந்து 7 நாட்கள் உச்சம் தலை முதல் நுனிவரை தடவி 30 நிமிடங்கள் அப்படியே வைத்துவிட்டு பிறகு தலைக்கு ஷாம்பு, சீயக்காய் போட்டு குளிக்க கூடாது. வெறும் தண்ணீரில் தான் குளிக்க வேண்டும்.

இப்படி குளித்தால் தலைமுடி பிசுபிசு பார்க்க தான் இருக்கும். ஆனால் ஏழாவது நாளில் நீங்களே நம்ப முடியாத அளவிற்கு நல்ல ரிசல்ட்டை பார்ப்பீர்கள். அந்த அளவிற்கு உங்களது தலை முடி வளர்ச்சி தன்மை குறைந்திருக்கும். முடியில் இருக்கும் வெடிப்புகளும் குறைந்து விடும்.

மேலே செல்லப்பட்டுள்ள 2 டிப்ஸ்கள் தொடர்ந்து ஏழு நாட்கள் நீங்கள் பின்பற்றி வந்தால் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள். அந்த அளவிற்கு உங்களது தலைமுடி வறட்சி நீங்கி பட்டு போல மென்மையாக இருக்கும். கண்டிப்பாக ட்ரை பண்ணி பாருங்க.