அடிக்கடி பாதாம் பருப்பை சாப்பிட்டு வந்தால், நமக்கு பல நன்மைகள் கிடைக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. இருப்பினும், அதன் நன்மைகளை முழுவதுமாக அறிந்து கொள்ள வேண்டியது அவசியம் ஆகும். 

நமது உடலுக்கு மிகச் சிறந்த ஊட்டச்சத்தை அளிக்க இயற்கையாகவே பல வகையான உணவுப் பொருட்கள் உள்ளன. அதில் முக்கியமான இயற்கை உணவு தான் பாதாம். பாதாம் பருப்பை அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள். ஏனெனில் அதன் சுவை, அனைவரையும் இழுத்து விடும். அடிக்கடி பாதாம் பருப்பை சாப்பிட்டு வந்தால், நமக்கு பல நன்மைகள் கிடைக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. இருப்பினும், அதன் நன்மைகளை முழுவதுமாக அறிந்து கொள்ள வேண்டியது அவசியம் ஆகும்.

பாதாம் பருப்பு

ஆயுர்வேத மருத்துவத்திலும் பாதாம் பருப்பு ஒரு மிகச் சிறந்த உணவு மற்றும் மருந்தாக கருதப்படுகிறது. வாதம், பித்தம் மற்றும் கபம் போன்றவற்றை சமநிலையில் பராமரிப்பதற்கு பாதாம் பருப்பு உதவி புரிகிறது. பாதாம் பருப்பை ஊறவைத்து தோல் நீக்கியோ அல்லது அப்படியோ கூட சாப்பிடலாம். நாள்தோறும் பாதம் பருப்பை சாப்பிடுவதால் ஆரோக்கியமாகவும், நலமாகவும் இருக்கலாம்.

பாதாம் பருப்பின் பயன்கள்

பாதாம் பருப்புகளை இரவு நேரத்தில் தண்ணீரில் ஊறவைத்து, அடுத்த நாள் காலையில் சாப்பிட்டு வந்தால் உடல் பலவீனம் மற்றும் நீரிழிவு நோய் போன்ற பல சிக்கல்களைத் தடுக்க முடியும்.

ஈரப்பதம்

ப்ரீடியாபயாட்டீஸ் மெட்டபாலிக் சிண்ட்ரோம் போன்ற மருத்துவ கோளாறுகளுடன் தொடர்பு கொண்ட பல நோய்களில் இருந்து பாதாம் பருப்பு நமது உடலைப் பாதுகாக்கிறது. தினந்தோறும் பாதாம் பருப்பை சாப்பிடுவதால் உடல் திசுக்களுக்கு ஈரப்பதத்தை அளிக்கிறது. நம் சருமத்தின் நிறம் மங்காமல் இருப்பது மட்டுமன்றி, ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்வதற்கும் பாதாம் பருப்பு உதவி செய்கிறது.

சருமத்திற்கு சிறந்தது பாதாம்

நமது சருமத்தை பளபளப்பாக வைத்திருப்பதில் மிக முக்கிய பங்காற்றுகிறது பாதாம். சரும ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாமல், தலைமுடிக்கும் உறுதியை அளிக்கிறது. பாதாம் பருப்பை தினசரி 4 என்ற வீதத்தில் சாப்பிட்டு வந்தால், முகத்தின் அழகு மேம்படும். முடி உதிர்தல் மற்றும் இளநரை போன்ற பல பிரச்சனைகள் தடுக்கப்படுகிறது.

சப்பாத்திக்கு சூப்பரான சைட் டிஷ் "மஷ்ரூம் பட்டர் மசாலா"

சருமத்தை பாதுகாக்க பலரும், கடைகளில் கிடைக்கும் கண்ட கண்ட கெமிக்கல்களை பயன்படுத்தி வருகின்றனர். அவர்களுக்கு எல்லாம், பாதாம் மிகச் சிறந்த பலனைத் தரும். மேலும், தலைமுடி பராமரிப்பிற்கு கண்டதையும் பயன்படுத்தாமல், பாதாமை சாப்பிட்டு வாருங்கள். இதனால், தலைமுடியும் வளர்ச்சி அடையும்; அதோடு உடல் நலமும் மேம்படும். இயற்கையில் கிடைக்கும் பாதாமின் விலை அதிகம் என்பதால், பலரும் வாங்கத் தயங்குகின்றனர். ஆனால், விலையைப் பார்க்காமல் உடல் நலத்திற்கு நல்லது என்பதை உணர்ந்து பாதாம் பருப்பை தினமும் வாங்கி சாப்பிட வேண்டும்.