முகத்தின் அழகை மேம்படுத்த ரோஸ் வாட்டர் பயன்படுத்த சரியான முறை எது என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

ரோஸ் வாட்டர் என்பது பன்னீர் ரோஜா இதழ்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இதை பெரும்பாலும் நாம் ஃபேஸ் மாஸ்க், ஃபேஸ் பேக் போன்றவற்றில் கலப்பது வழக்கம். இது சருமத்தை குளிர்ச்சியாக வைக்கும். இதில் ஆன்டி மைக்ரோஃபியல் பண்புகள் ஆன்டிபாக்டிகல் பண்புகள் மற்றும் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் அதிகமாக உள்ளதால், அவை சருமத்தில் இருக்கும் அலர்ஜி மற்றும் பாக்டீரியா தொற்றுக்களை எதிர்த்து போராடும். 

இத்தகைய சூழ்நிலையில், சிலர் ரோஸ் வாட்டரை நேரடியாக முகத்தில் பயன்படுத்துவார்கள். இப்படி பயன்படுத்துவது உண்மையில் நல்லதா? அதன் முழுமையான பலன்களை பெற அதை எப்படி பயன்படுத்துவது என்பதை பொறுத்து அமையும். இந்த பதிவில் முக அழகை மேம்படுத்த ரோஸ் வாட்டர் பயன்படுத்துவது எப்படி என்று பார்க்கலாம்.

ரோஸ் வாட்டர் பயன்படுத்த சரியான வழி முறைகள் :

1. ஹைட்ரேட்டிங்

சருமத்தின் உள் மற்றும் வெளிப்புறம் இரண்டுமே ஹைட்ரேடிங்காக இருப்பதற்கு ரோஸ் வாட்டர் பயன்படுத்தலாம். இதில் இருக்கும் வைட்டமின் சி, வைட்டமின் ஈ மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் சருமத்தின் துளைகளுக்குள் சென்று பருக்களை வேரோடு அழித்துவிடும். சரும நீரிழிப்பு பிரச்சினையை சரி செய்யும். இதனால் சருமம் பளபளப்பாக மாறும்.

2. சருமத்தின் பிஹெச்ஐ பராமரிக்கும்

ரோஸ் வாட்டர் சருமத்தில் இருக்கும் அதிகப்படியான எண்ணெய் பசை மற்றும் அழுக்குகளை வெளியேற்றுவதற்கு முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் சருமத்தின் இயற்கையான பிஹெச்ஐ பாதிக்காது.

3. இளமையாக வைக்க உதவும்

வயது ஆக ஆக முதுமை முகத்தில் தெரியும். ஆனால் சருமம் முதுமை அடையாமல் இளமையாக வைக்க ரோஸ் வாட்டர் உதவுகிறது. ரோஸ் வாட்டரை தொடர்ந்து சருமத்தில் பயன்படுத்தி வந்தால் முக சுருக்கங்கள், கோடுகள் மறைந்து இளமையாக இருப்பீர்கள்.

4. பொடுகை விரட்ட

இது கேட்பதற்கு உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம் ஆனால் உண்மையில் பொடுகை விரட்ட ரோஸ் வாட்டர் பயன்படுத்தலாம். உச்சந்தலையில் பாக்டீரியா தொற்றுகள் ஏற்படாமல் இது பாதுகாக்கும். மேலும் உச்சந்தலையை மாய்ஸ்ச்சரைசிங் செய்ய உதவுகிறது. அதனுடன் ரோஸ் வாட்டர் கலந்து உச்சந்தலையில் தடவி 15 நிமிடங்கள் கழித்து ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும்.

நினைவில் கொள் :

- ரோஸ் வாட்டர் முகத்திற்கு பயன்படுத்துவது பல நன்மைகளை வழங்கும். இதை முகத்தில் நேரடியாக பயன்படுத்தலாம். இல்லையெனில் ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ரோஸ் வாட்டர் ஊற்றி அவ்வப்போது பயன்படுத்தலாம். இப்படி பயன்படுத்தினால் சருமத்திற்கு அதிக நன்மைகள் கிடைக்கும். குறிப்பாக தூசிகள், அழுக்குகள், மாசுக்கள் சருமத்தில் படியாமல் இருக்கும். சருமம் எப்போதுமே அதிக புத்துணர்ச்சியுடன் காணப்படும்.

- அதுபோல கிரீன்கள், மாய்ஸ்ரைசர் பயன்படுத்துவதற்கு முன் ரோஸ் வாட்டர் பயன்படுத்தினால் அதிக பலன்கள் பெறுவீர்கள்.