Beauty tips for Face: உலர்ந்த சருமமா? இதோ உங்களுக்கான டிப்ஸ்!!
சரும பராமரிப்புக்கு வீட்டில் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும் பொருட்களை வைத்தே ஜொலிக்க வைக்கலாம்.
தக்காளி தயிர்
தக்காளி பழத்தை அரைத்து தயிர் கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவவும். ஆரஞ்சு, தேன் சரும பாதுகாப்புக்கு ஏற்றவை. கார்ன் ப்ளவருடன் தயிர் கலந்த கலவையை தினசரி உடம்பில் தடவி, காயவிட்டு பின்னர் குளிக்கலாம். சருமம் பளபளக்கும்.
வைட்டமின் சத்துக்கள்
பன்னீருடன் தேன் கலந்து முகத்திற்கும், சருமத்திற்கும் தடவி ஃபேஸ்பேக் போடலாம். அரைமணி நேரம் கழித்து முகம் கழுவினால் முகம் ஜொலிக்கும். வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ சத்துள்ள உணவுகளை, பழங்களை அதிகம் சாப்பிடலாம்.
வெண்ணெய் இருக்க பயமேன்
உதடு வெடிப்பு, சரும வெடிப்புக்கு வெண்ணெய் தடவலாம். ரசாயன கலப்பு உள்ள மாய்ச்சரைசர்களை தவிர்த்து விடுவது நல்லது. ஆவகேடோ பழமும் ஆலிவ் ஆயிலும் சருமத்தை பராமரிக்க உதவும்.
முல்தானி மிட்டியை தினமும் யூஸ் பண்ணா என்ன ஆகும்? அவசியம் 'இத' தெரிஞ்சுக்கோங்க..
கற்றாழை, பப்பாளி
காலை நேரத்தில் முகத்திலும் சருமத்திலும் கற்றாழையை தடவி குளிக்க வறட்சி நீங்கும். நன்கு கனிந்த பப்பாளி பழத்தை கூழ் போல அரைத்து முகத்திலும் உடம்பிலும் தேய்த்து குளிக்க சருமம் பொலிவடையும்.
வறட்சி நீக்கும் வேப்பிலை:
வேப்ப இலைகளை அரைத்து குளிக்கும் நீரில் வாரம் ஒருமுறை கலந்து குளிக்கலாம். வேப்ப எண்ணெய் சரும வறட்சியை நீக்கும்.
வெல்லம் சமையலுக்கு மட்டுமல்ல சருமத்திற்கும் தான்.. இப்படி யூஸ் பண்ணுங்க முகம் பளபளக்கும்!
மென்மையான சருமத்திற்கு:
வெள்ளரிக்காயை வட்டமாக வெட்டி கை கால்களில் வைத்து வறட்சியை தடுக்கலாம். எலுமிச்சை ஜூஸ் ஒரு டீ ஸ்பூன், பால் பவுடர் ஒரு டீ ஸ்பூன், பாதாம் பவுடர் ஒரு டேபிள் ஸ்பூன் சேர்த்து பேஸ்ட் போல வைத்துக்கொள்ளவும். வறட்சியான முகம், கழுத்து கைகளில் தடவி பேக் போட்டு குளிக்க சருமம் மென்மையடையும்.
எண்ணெய் மசாஜ்:
தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய், பாதாம் எண்ணெய் ஆகியவை சருமத்திற்கு நல்லது. இந்த மூன்று எண்ணெய்களையும் நன்றாக கலந்து சருமத்தில் தடவி ஊறவைத்து சில நிமிடங்கள் கழித்து குளிக்கலாம். சரும வறட்சி நீங்கும். குளிர்கால பிரச்சினைகளும் தீரும்.
கேரட், பால் சிகிச்சை:
வறட்சியான சருமம் கொண்டவர்கள், கேரட், பால் அரைத்து முகம், சருமத்தில் தடவி வந்தால் முகமும், சருமமும் பளபளப்பாகும். வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் சரும செல்களை புதுப்பிக்கும்.
தண்ணீர் மகத்துவம்:
விளக்கெண்ணெய், எலுமிச்சை, கிளிசரின் சேர்த்து உதட்டில் தடவ வறட்சி, வெடிப்பு நீங்கும். சருமம் வறட்சியை தடுக்க அதிகம் தண்ணீர் குடிக்க வேண்டும். எந்த அளவிற்கு நாம் தண்ணீர் குடிக்கிறோமோ அந்த அளவிற்கு சரும வறட்சி நீங்கும். மோர் குடித்து வந்தால் அதில் உள்ள சத்துக்கள் சரும பராமரிப்புக்கு நல்லது.