- Home
- Gallery
- வெல்லம் சமையலுக்கு மட்டுமல்ல சருமத்திற்கும் தான்.. இப்படி யூஸ் பண்ணுங்க முகம் பளபளக்கும்!
வெல்லம் சமையலுக்கு மட்டுமல்ல சருமத்திற்கும் தான்.. இப்படி யூஸ் பண்ணுங்க முகம் பளபளக்கும்!
சமையலறையில் இருக்கும் வெல்லத்தை முகத்திற்கும் பயன்படுத்தலாம் தெரியுமா? இது முகத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.

முகம் பார்ப்பதற்கு அழகாக இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு பெண்களும் விரும்புகிறார்கள். இதற்காக அவர்கள் விலை உயர்ந்த பொருட்களை வாங்கி பயன்படுத்துகிறார்கள். ஆனால், அது பக்க விளைவுகளை ஏற்படுத்தும். இதற்கு பதிலாக வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தினால், எந்த பக்க விளைவுகளும் இல்லை.
அந்த வகையில், உங்கள் முகம் பார்ப்பதற்கு அழகாகவும், பளபளப்பாக்கவும் வெல்லத்தை பயன்படுத்தலாம் தெரியுமா? ஆம், இதுவரை நீங்கள் வெல்லத்தை ஏதாவது ஒரு ரெசிபி செய்வதற்கு தான் பயன்படுத்தி இருப்பீர்கள். ஆனால், இது சருமன் தொடர்பான பல பிரச்சினைகளையும் நீக்குவது முக்கிய பங்கு வகிக்கிறது.
வெல்லம் ஒரு இயற்கையான மருந்து. இது சரும ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது. இதனை நீங்கள் உங்கள் சருமத்திற்கு பயன்படுத்துவதன் மூலம் பளபளப்பான சருமத்தை நீங்கள் எளிதில் பெறலாம். வெல்லத்தில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இது வயதான செயல்முறையை மெதுவாக்குகிறது, முகத்தில் உள்ள பருக்கள் மற்றும் கரும்புள்ளிகளை நீக்குகிறது.
மேலும், வெல்லத்தில் ஈரப்பதமூட்டும் பண்புகள் நிறைந்துள்ளது. இது சருமத்தை எப்போதும் நீரேற்றமாக வைத்திருக்கும். இது தவிர வெல்லம் முகத்தில் உள்ள சுருக்கங்கள் மற்றும் கோடுகளை சரி செய்கிறது. அதுமட்டுமின்றி, வெல்லம் முகத்தில் இருக்கும் வறட்சி மற்றும் அரிப்புகளை நீக்குகிறது. எனவே உங்கள் முகத்தில் பொலிவைக் கொண்டு வர வெல்லதில் ஃபேஸ்பேக் போடுங்கள்.
இதையும் படிங்க: முகம் கண்ணாடி மாதிரி பளபளக்க வேண்டுமா? காபி பொடியில் 'இந்த' பொருட்களை கலந்து ஸ்கரப் பண்ணுங்க..
வெல்லத்தில் ஃபேஸ்பேக்:
வெல்லம் மற்றும் கடலை மாவு: இந்த ஃபேஸ் பேக் செய்ய ஒரு ஸ்பூன் வெல்லத்தில், ஒரு ஸ்பூன் கடலை மாவு மற்றும் பால் சேர்த்து நன்கு கலந்து, அந்த பேஸ்ட்டை உங்கள் முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவுங்கள்.
இதையும் படிங்க: இரவு தூங்கும் முன் 'இத' மட்டும் செய்ங்க.. காலையில முகம் பளபளப்பாக இருக்கும்..!
வெல்லத்தில் ஸ்க்ரப்: இதற்கு ஒரு ஸ்பூன் வெல்லத்தில் ஒரு ஸ்பூன் தேன் மற்றும் எலுமிச்சை சாறு நன்கு கலக்கி அதை முகத்தில் தடவி மெதுவாக மசாஜ் செய்யவும். பிறகு அதை 5 நிமிடம் நன்கு காய வைத்து முகத்தை கழுவுங்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D