Dark legs: கால்கள் நிறம் மாறி கருப்பாக இருக்கிறதா? இதோ அசத்தலான டிப்ஸ்!
வெயில் மற்றும் சுற்றுப்புறத்தின் மாசு காரணமாக அதிகமாக பாதிக்கப்படும் உடல் உறுப்புகளில் முக்கியமானது நம் பாதங்கள். அந்நேரத்தில், கால்கள் கருமை நிறமாக இருக்கும். இந்த கருமையை நீக்குவதற்கு, பெண்கள் விலை உயர்ந்த கிரீம்களைப் பயன்படுத்தி வருகிறார்கள்.
தற்போதைய காலகட்டத்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலரும் தங்களை அழகாக காட்டிக் கொள்வதில் அதிக ஆர்வம் உடையவர்களாக இருக்கின்றனர். ஆனால், நம்மில் பலருக்கும் முகம் ஒரு நிறத்திலும், கைகள் மற்றும் கால்கள் வேறு நிறத்திலும் காட்சியளிக்கும். அதிலும் குறிப்பாக, வெயில் மற்றும் சுற்றுப்புறத்தின் மாசு காரணமாக அதிகமாக பாதிக்கப்படும் உடல் உறுப்புகளில் முக்கியமானது நம் பாதங்கள். அந்நேரத்தில், கால்கள் கருமை நிறமாக இருக்கும். இந்த கருமையை நீக்குவதற்கு, பெண்கள் விலை உயர்ந்த கிரீம்களைப் பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் வீட்டு வைத்தியத்தின் மூலம் செலவில்லாமல் கை, கால் மற்றும் பாதங்களின் பளபளப்பை நம்மால் மிக எளிதாக மீட்க முடியும். தற்போது இந்த எளிய முறைகளை இங்கே காண்போம்.
கை, கால்களின் கருமையை நீக்க
ஒரு வாளியில் வெதுவெதுப்பான தண்ணீரை ஊற்றி, அதில் ஒரு தேக்கரண்டி சிகைக்காய் பவுடர், 200 மில்லி பால் மற்றும் ஒரு கைப்பிடி அளவு ரோஜா இதழ்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்தக் கலவையில் கால்களை 15 முதல் 20 நிமிடங்கள் வரை ஊற வைத்துக் கொள்ளவும். பால் சருமத்தை மிருதுவாக்கி இயற்கையான முறையில் கருமையைப் போக்குகிறது.
2 தேக்கரண்டி திரிபலா சூரணம், கடலை மாவு மற்றும் மஞ்சள் ஆகியவற்றை ரோஸ் வாட்டருடன் நன்றாக கலந்து கொள்ள வேண்டும். பிறகு, கருமை நிறமுள்ள கால் பகுதிகளில் இந்தக் கலவையை தடவ வேண்டும். சுமார் 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரைக் கொண்டு, ஒரு காட்டன் துணியில் துடைத்து எடுக்க வேண்டும். இப்படிச் செய்வதன் மூலமாக பளிச்சிடும் அழகிய கால்களை பெற முடியும். இரவில் தூங்க செல்வதற்கு முன்பாக, இதனை கால்களில் தடவி, கால்களுக்கு மிகவும் லேசான மசாஜ் செய்வதன் மூலம், கால்களுக்கு நல்ல ரிலாக்ஸ் கிடைப்பது மட்டுமின்றி, கால்களில் உள்ள கருமையை நீக்கும்.
5 Disease: 40 வயதைக் கடந்த ஆண்களே உஷார்: இந்த 5 நோய்கள் உங்களைத் தாக்கலாம்!
1 தேக்கரண்டி ஆரஞ்சு பழத்தோல் பேஸ்டுடன், ஒரு தேக்கரண்டி கடல் உப்பை சேர்த்து, இதனுடன் தேங்காய் எண்ணெய் கலந்து கால்களின் சருமத்தில் ஸ்க்ரப் செய்ய வேண்டும். இந்த வழிமுறையை செய்வதனால், இறந்த சரும செல்களை அகற்ற முடியும். மேலும், இது சருமத்தை பிரகாசமாகவும் மற்றும் தெளிவாகவும் மாற்றுகிறது.
ஒரு டம்ளர் பழுத்த பப்பாளியுடன், ஒரு தேக்கரண்டி தேன் கலந்து இரு கால்களிலும் தடவி நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். சுமார் 10 நிமிடங்கள் கழித்து, சுத்தமான தண்ணீரில் கால்களை கழுவி கொள்ளுங்கள். ஒரு வாரத்திற்கு ஒரு முறை இந்த வழிமுறையைச் செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.
ஒரு டம்ளர் வாழைப்பழ துண்டுகளுடன், ஒரு தேக்கரண்டி தேன் மற்றும் ஒரு தேக்கரண்டி பால் அல்லது பால் ஏடு சேர்த்து பிசைந்து கொள்ளுங்கள். இந்த பேஸ்டை கால்களில் தடவி சுமார் 15 நிமிடங்கள் கழித்து துடைத்து எடுத்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படிச் செய்வதால் உங்களின் கால்கள் பிரகாசமாகும்.