5 Disease: 40 வயதைக் கடந்த ஆண்களே உஷார்: இந்த 5 நோய்கள் உங்களைத் தாக்கலாம்!
40 வயதைத் தாண்டிய ஆண்களைத் தாக்கும் சில நோய்களுக்கு, வீட்டிலுள்ள மூலிகைப் பொருட்களை பயன்படுத்தி, எவ்வாறு பாட்டி வைத்தியம் செய்யலாம் எனப் பார்ப்போம்.
நம் இல்லத்தில் இருக்கும் சிறுவர்கள் மற்றும் பெரியவர்களுக்கு அடிக்கடி சிறுசிறு உடல்நிலைக் கோளாறுகள் ஏற்படுவது இயல்பானது தான். காலநிலை மாற்றமும் இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இது போன்ற சிறுசிறு உடல்நலக் குறைவுக்காக மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. அதற்குப் பதிலாக வீட்டில் உள்ள சில பொருட்களை கொண்டே சில நிமிடங்களில் நிரந்தரமாக தீரக்க முடியும். அவ்வகையில் 40 வயதைத் தாண்டிய ஆண்களைத் தாக்கும் சில நோய்களுக்கு, வீட்டிலுள்ள மூலிகைப் பொருட்களை பயன்படுத்தி, எவ்வாறு பாட்டி வைத்தியம் செய்யலாம் எனப் பார்ப்போம்.
ஆண்களை தாக்கும் ஐந்து வகையான நோய்கள்
மூலநோய்
இயல்பாக வயதில் மூத்தவர்களுக்கு மூலநோய் இருக்கும். இவர்கள் வெளியில் போவதற்கு கூட அதிகமாக கஷ்டப்படுவார்கள். இந்நோய்த் தீர கருணைக் கிழங்கை சிறிதளவு எடுத்துக் கொண்டு, இதனோடு சிறிதளவு துவரம் பருப்பைச் சேர்த்து சாம்பார் வைத்து சாப்பிட வேண்டும். தொடர்ந்து இவ்வாறு செய்வதால் காலப்போக்கில் மூலநோய்ப் பிரச்சனை குணமாகும்.
மூக்கடைப்பு
நமது நெஞ்சுப் பகுதியில் சளி அதிகமாகும் போது மூக்கடைப்பு பிரச்சனை ஏற்படுகிறது. இதன் காரணமாக சிலர் மூச்சை வெளியேற்றுவதற்கு கூட கடும் சிரமத்திற்கு உள்ளாவார்கள். இந்தப் பிரச்சினை உள்ளவர்கள், தோல் நீக்கிய சுக்குத் துண்டு ஒன்றை எடுத்து, அரை லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்து அதனுடன் சிறிதளவு நாட்டு சர்க்கரை கலந்து குடித்து வர வேண்டும். இவ்வாறு செய்வதனால் மூக்கடைப்பு பிரச்சனை முற்றிலுமாக நீங்கும்.
வரட்டு இருமல்
சிலருக்கு அதிகமான புகைப்பிடித்தல் காரணமாகவும், நெஞ்சுப் பகுதியில் அதிகளவில் சளி சேர்ந்து வரட்டு இருமல் ஏற்படும். இந்தப் பிரச்சினை அதிகமாகும் போது, இரத்தம் சிந்துவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இதற்குப் பயந்து சிலர் மருத்துவர்களை நாடிச் செல்கின்றனர். ஆனால் இது ஒரு சரியான தீர்வல்ல. ஆகையால், வீட்டில் இருக்கும் எலுமிச்சையை எடுத்து, அதன் சாற்றைப் பிழிந்து, தேன் கலந்து தினந்தோறும் குடித்து வந்தால், காலப்போக்கில் வரட்டு இருமல் பிரச்சினை குணமாகி விடும்.
தோல்களில் ஏற்படும் தேமல்
தேமல் பிரச்சனை பொதுவாக ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலருக்கும் இருக்கும். இதன் காரணமாக இவர்களின் தோற்றம் வெளியில் உள்ளவர்கள் மத்தியில் அறுவருக்கப்பட வாய்ப்புள்ளது. தோல்களின் மீது வரும் ஒரு வகை ஃபங்கசான தேமலை அகற்ற வேண்டும் எனில், வெள்ளைப் பூண்டை வெற்றிலையுடன் சேர்த்து அரைத்து, தேமல் இருக்கும் இடங்களில் பூச வேண்டும். சிறிது நேரத்திற்குப் பிறகு கழுவி விடலாம். இவ்வாறு செய்து வந்தால், ஏறக்குறைய 2 வாரங்களில் தேமல் பிரச்சனை இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும்.
Black colour Fruits: உங்கள் ஆரோக்கியத்தை மீட்டெடுக்க இந்த 7 கருப்பு பழங்களை சாப்பிடுங்கள்!
மூச்சிப்பிடிப்புத் தொல்லை
மூச்சிப்பிடிப்புத் தொல்லைப் பிரச்சனை 40 வயதைக் கடந்த ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலருக்கும் ஏற்படும். இது மிக கடினமான பொருட்களை, அதிக பலம் கொடுத்து தூக்குவதால் ஏற்படும். மேலும், வழுக்கி விழுந்தாலும் இவ்வாறு முதுகுப்பகுதி பிடித்துக் கொள்ளும். இதற்காகவே, மருந்தகங்களில் மூச்சிப்பிடி வில்லை என்ற மருந்து விற்கப்பட்டு வருகிறது. இந்த மருந்து தற்போதைக்கு மட்டுமே நோயை கட்டுபாட்டில் வைக்க உதவி செய்யும். இதனை நிரந்தரமாக நீக்க வேண்டும் எனில் சூடம், சுக்கு, சாம்பிராணி மற்றும் பெருங்காயம் ஆகியனவற்றை சம அளவில் எடுத்துக் கொண்டு, வடித்த கஞ்சியில் சேர்த்து மீண்டும் சுட வைக்க வேண்டும். இதனை, மூச்சிப்பிடிப்பு தொல்லை இருக்கும் இடத்தில் தினசரி மூன்று வேளைகளும் தடவி வந்தால் காலப்போக்கில் இந்தப் பிரச்சினை குணமாகும்.