MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • விஜயாவின் ஃபிராடு வேலையை கண்டுபிடித்த மீனா; சண்டையில் முடிந்த அருணின் சமாதானப் பேச்சு - சிறகடிக்க ஆசை அப்டேட்

விஜயாவின் ஃபிராடு வேலையை கண்டுபிடித்த மீனா; சண்டையில் முடிந்த அருணின் சமாதானப் பேச்சு - சிறகடிக்க ஆசை அப்டேட்

சிறகடிக்க ஆசை சீரியலில் விஜயாவும் மனோஜும் பைனான்சியர் அலுவலகத்துக்கு சென்று கடன் வாங்கி உள்ள விஷயம் மீனாவுக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Feb 14 2026, 09:06 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Siragadikka Aasai Serial Today Episode
Image Credit : jiohotstar

Siragadikka Aasai Serial Today Episode

சிறகடிக்க ஆசை சீரியலில் செல்வத்தை வழக்கில் இருந்து தப்பிக்க வைக்க அருணிடம் சமாதானம் பேச முடிவெடுத்திருக்கிறார் முத்து. இதற்காக வக்கீலிடம் பேசி அருணையும் சமாதானம் பேச வரச் சொல்லி உள்ளார்கள். அதேபோல் சிந்தாமணியிடம் விஜயா யாருக்கும் தெரியாமல் கடன் கேட்டிருந்த நிலையில், அவர் அதற்காக சொத்துப் பத்திரம் இருந்தால் தான் கடன் தருவார்கள் என்று சொல்லி உள்ளார். இதனால் சொத்துப் பத்திரத்தைக் கொடுத்து கடன் வாங்க முடிவெடுத்திருக்கிறார் விஜயா. மனோஜும் இதற்கு சம்மதித்துள்ளார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

25
சொத்து பத்திரத்தை வாங்கிய பைனான்சியர்
Image Credit : jiohotstar

சொத்து பத்திரத்தை வாங்கிய பைனான்சியர்

பணம் வாங்க பைனான்சியரின் அலுவலகத்துக்கு மனோஜும், விஜயாவும் சென்றிருந்த நிலையில், அங்கு அவர் சொத்துப் பத்திரத்தை கேட்கிறார். அதோடு சில டாக்குமெண்டிலும் கையெழுத்து போடச் சொல்கிறார். அதில் விஜயா கையெழுத்து போடப் போகும் போது கரெண்ட் கட் ஆகிறது. இதனால் ஏதாச்சும் அபசகுணமாக இருக்குமோ என பதறுகிறார் விஜயா. பின்னர் மனோஜ் தன்னுடைய கையெழுத்தை போடுவது மட்டுமின்றி தனது அப்பாவின் கையெழுத்தையும் திருட்டுத்தனமாக போட்டுக் கொடுக்கிறார். அதன்பின்னர் அந்த பைனான்சியர் அவர்கள் கேட்ட பணத்தை கையில் கொடுக்கிறார்.

Related Articles

Related image1
ரோகிணியை தூண்டிவிட்ட சிந்தாமணி... மனோஜை நம்பி ஏமாந்துபோன அண்ணாமலை - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
Related image2
ரோகிணிக்கு பயந்து மனோஜை சிக்கலில் மாட்டிவிடும் விஜயா - சிறகடிக்க ஆசை சீரியலில் சரவெடி ட்விஸ்ட்
35
மீனாவிடம் சிக்கும் விஜயா
Image Credit : jiohotstar

மீனாவிடம் சிக்கும் விஜயா

நம்ம நினைச்சது நடந்துவிட்டது என்கிற சந்தோஷத்தில் இருக்கிறார் சிந்தாமணி. விஜயாவின் சொத்துக்களை ஆட்டையப் போட வேண்டும் என்பதற்காக சிந்தாமணி விரித்த வலை தான் இது. அதில் விஜயாவும், மனோஜும் வசமாக சிக்கி இருக்கிறார்கள். பூ கொடுக்கும் வேலையாக அந்த பக்கம் சென்றிருந்த மீனா, விஜயாவும் மனோஜும் பைனான்சியர் அலுவலகத்தில் இருப்பதை பார்த்துவிடுகிறார். அவர்களுடன் சிந்தாமணியும் இருப்பதால், கடன் வாங்க தான் அவர்கள் இங்கு வந்திருப்பார்கள் என்பதை மீனா கண்டுபிடித்துவிடுகிறார். இதனால் விஜயாவின் ஃபிராடு வேலை விரைவில் அம்பலமாகப்போகிறது.

45
ரவியை பிளாக்மெயில் பண்ணும் நீத்து
Image Credit : jiohotstar

ரவியை பிளாக்மெயில் பண்ணும் நீத்து

மறுபுறம் ஸ்ருதியின் ரெஸ்டாரண்டில் ரவி வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது அவருக்கு நீத்துவிடம் இருந்து போன் கால் வருகிறது. அதுவும் வீடியோ காலில் அழைக்கிறார் நீத்து. அப்போது அதை எடுத்து பேசும் ரவி, தான் வேலையாக இருப்பதாகவும், பிறகு அழைக்கிறேன் என்றும் கூறுகிறார். ஆனால் நீத்து, தான் உடனே உன்னிடம் நேரில் பேச வேண்டும் என சொல்ல, ரவி அதற்கு மறுக்கிறார். உடனே அங்கிருந்த தூக்க மாத்திரைகளை எடுத்து ஒவ்வொன்றாக போடத் தொடங்கும் நீத்து, நீ இங்க வரலேனா நான் ஒவ்வொரு மாத்திரையா போடுவேன் என சொல்லி மிரட்டுகிறார். இதனால் வேறு வழியின்றி வேலையை பாதியிலேயே விட்டுவிட்டு கிளம்புகிறார் ரவி.

55
சண்டை போட்ட அருண் - முத்து
Image Credit : jiohotstar

சண்டை போட்ட அருண் - முத்து

அருணின் அம்மா விபத்தில் இறந்தது தொடர்பான வழக்கில் செல்வத்தை மீட்க, சமாதானம் பேச்சுவார்த்தை நடக்கிறது. இதற்காக அருண் அவர் தரப்பு வக்கீல் உடன் வர, செல்வம், மீனா மற்றும் முத்து உடன் வந்திருக்கிறார். அப்போது இந்த கேஸில் செல்வம் தரப்பில் எல்லா பேப்பர்ஸும் பக்காவாக இருப்பதால் அவருக்கு கடைசியில் அபராதம் தான் விதிக்க வாய்ப்பு உள்ளது என வக்கீல் கிருஷ்ணா சொல்ல, அந்த பணம் எவ்வளவு வேண்டும் என நீங்கள் கேட்டால் இப்போவே சமாதானமாக பேசி முடித்துக் கொள்ளலாம் என கூறுகிறார். அதற்கு அருண் அவர் எவ்வளவு தருவார் என கேட்க, செல்வம், முத்துவிடம் பேசி மாதம் 5 ஆயிரம் தருவதாக சொல்கிறார். அதற்கெல்லாம் செவிசாய்க்காத அருண், நான் உன் அப்பாவை கார் ஏற்றி கொன்றால் இப்படி தான் வந்து காசு கொடுப்பியா என முத்துவிடம் கேட்க, அவரோ கடுப்பாகி அருணின் சட்டையை பிடிக்கிறார். இதனால் சமாதானப் பேச்சு சண்டையில் முடிந்துள்ளது. இதையடுத்து என்ன நடந்தது என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சிறகடிக்க ஆசை

Latest Videos
Recommended Stories
Recommended image1
ரேவதியை பழிவாங்க துடிக்கும் சந்திரகலா! கார்த்திக்கின் காதலர் தின சர்ப்ரைஸ்; கார்த்திகை தீபம் சீரியலில் மெகா ட்விஸ்ட்!
Recommended image2
சிறைக்கு செல்லும் ரேவதி? ஆதிரை குடும்பத்தில் அடுத்த பூகம்பம்! அன்பு வடிவின் சதி அம்பலமாகுமா? இன்றைய மெகா அப்டேட்!
Recommended image3
தெரு தெருவாக அலைந்து ஆனந்தியை கண்டுபிடிக்கும் அன்பு! சிங்கப்பெண்ணே சீரியலில் இன்று நெஞ்சை உலுக்கும் திருப்பம்!
Related Stories
Recommended image1
ரோகிணியை தூண்டிவிட்ட சிந்தாமணி... மனோஜை நம்பி ஏமாந்துபோன அண்ணாமலை - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
Recommended image2
ரோகிணிக்கு பயந்து மனோஜை சிக்கலில் மாட்டிவிடும் விஜயா - சிறகடிக்க ஆசை சீரியலில் சரவெடி ட்விஸ்ட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved