MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • ரோகிணியை தூண்டிவிட்ட சிந்தாமணி... மனோஜை நம்பி ஏமாந்துபோன அண்ணாமலை - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்

ரோகிணியை தூண்டிவிட்ட சிந்தாமணி... மனோஜை நம்பி ஏமாந்துபோன அண்ணாமலை - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்

சிறகடிக்க ஆசை சீரியலில் சொத்துப் பத்திரத்தில் அண்ணாமலையில் கையெழுத்தை தவறில்லாமல் போடுவதற்காக மனோஜ் ஒரு திருட்டு வேலை பார்த்திருக்கிறார். இதைப்பற்றி விரிவாக பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Feb 13 2026, 09:09 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Siragadikka Aasai Serial Today Episode
Image Credit : jiohotstar

Siragadikka Aasai Serial Today Episode

சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ் பிசினஸுக்காக மேலும் கடன் வாங்கிய விஷயம் அறிந்த விஜயா, அதை அடைக்க மனோஜுடன் சேர்ந்து திட்டம் போடுகிறார். இதற்காக சிந்தாமணியிடம் விஜயா கடன் கேட்க, அவரோ, சொத்து பத்திரம் இருந்தால் தான் கடன் தருவார்கள் என நைசாக பேசிவிடுகிறார். அண்ணாமலையின் கையெழுத்து இல்லாமல் சொத்து பத்திரத்தை அடமானம் வைக்க முடியாது என்பதால், அவரது கையெழுத்தை நானே போடுகிறேன் என கூறுகிறார் மனோஜ். இதற்கு விஜயாவும் சம்மதம் தெரிவிக்கிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

26
மனோஜை நம்பி கையெழுத்து போடும் அண்ணமாலை
Image Credit : jiohotstar

மனோஜை நம்பி கையெழுத்து போடும் அண்ணமாலை

அண்ணாமலையின் கையெழுத்தை அச்சுபிசுறாமல் போடுவதற்காக, அவரிடம் பொய் சொல்லி, பேங்கில் ஒரு அக்கவுண்ட் ஓபன் பண்ணனும் அதற்காக உங்களின் கையெழுத்து வேண்டும் என்று கேட்டு அண்ணாமலையிடம் கையெழுத்து வாங்குகிறார். அண்ணாமலையும் கையெழுத்து போட போக மீனா தும்முகிறார். ஏதோ அபசகுணமாக இருக்கிறது என சொல்லி கையெழுத்து போடாமல் நிறுத்துகிறார். பின்னர் அதெல்லாம் ஒன்னும் இல்லை என சொல்லிவிட்டு, மனோஜ் கையெழுத்து போட சொல்லி பேனாவை கொடுக்க, பேனா எழுதாமல் போகிறது. இதனால் அண்ணாமலைக்கு மேலும் சந்தேகம் ஆகிறது. இதையடுத்து வேறு ஒரு பேனாவை கொடுத்து கையெழுத்து வாங்குகிறார்.

Related Articles

Related image1
விஜயாவை ஏமாற்றி வீட்டை எழுதி வாங்கிய சிந்தாமணி.! நடுத்தெருவுக்கு வரப்போகும் முத்து குடும்பம்.! சிறகடிக்க ஆசை அப்டேட்.!
Related image2
ரோகிணிக்கு பயந்து மனோஜை சிக்கலில் மாட்டிவிடும் விஜயா - சிறகடிக்க ஆசை சீரியலில் சரவெடி ட்விஸ்ட்
36
தப்பித்த மனோஜ்
Image Credit : jiohotstar

தப்பித்த மனோஜ்

இதன்பின்னர் அந்த பேப்பரை எடுத்துக் கொண்டு ரூமுக்குள் செல்லும் மனோஜ், அவரது கையெழுத்தை போட்டு பழகுகிறார். கையெழுத்து போட்டு பழகிய பேப்பரை, கசக்கி கீழே போடுகிறார் மனோஜ். அந்த பேப்பர் ஹாலில் இருக்கும் முத்து கையில் சிக்குகிறது. அதை முத்து பிரித்துப் பார்க்க திறக்கும் போது அவருக்கு செல்வத்திடம் இருந்து போன் வருகிறது. சமாதானம் பேச அழைத்திருக்கிறார்கள். அதனால் நீயும் வா என அழைக்கிறார். உடனே முத்துவும் கிளம்புகிறார். செல்லும் போது தன் கையில் உள்ள பேப்பரை பிரித்து பார்க்காமல் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு செல்கிறார் முத்து. இதனால் ஜஸ்ட் மிஸ்ஸில் எஸ்கேப் ஆகி உள்ளார் மனோஜ்.

46
சிந்தாமணியிடம் உதவி கேட்கும் ரோகிணி
Image Credit : jiohotstar

சிந்தாமணியிடம் உதவி கேட்கும் ரோகிணி

மறுபுறம் ரோகிணி வீட்டுக்கு செல்லும்போது அங்கு கிரிஷுக்கு காய்ச்சல் அடிப்பதாக ரோகிணியின் அம்மா சொல்ல, உடனே ஆஸ்பத்திரி போவதற்காக கேப் புக் பண்ணுகிறேன் என கூறும் ரோகிணி, அதற்காக டிரை பண்ணுகிறார். ஆனால் கேப் எதுவுமே கிடைக்கவில்லை. இதனால் சிந்தாமணிக்கு போன் போட்டு ஏதாச்சும் கார் இருந்தால் அனுப்புமாறு கேட்கிறார். சிந்தாமணியோ, எனக்கு தெரிஞ்ச டாக்டர் இருக்காங்க, அவங்களை கூட்டிட்டு உன் வீட்டுக்கே வர்றேன் என கூறுகிறார் சிந்தாமணி. பின்னர் வீட்டுக்கு டாக்டருடன் வரும் சிந்தாமணி, ரோகிணியை தனியாக அழைத்து பேசுகிறார்.

56
ரோகிணிக்கு ஹிண்ட் கொடுக்கும் சிந்தாமணி
Image Credit : jiohotstar

ரோகிணிக்கு ஹிண்ட் கொடுக்கும் சிந்தாமணி

சிந்தாமணி செய்த உதவிக்காக நன்றி சொல்கிறார் ரோகிணி, அவரிடம் மனோஜ் என்ன சொல்கிறார் என கேட்கிறார் சிந்தாமணி. நான் எவ்வளவோ சொல்லி பார்த்தேன் அவர் என் பேச்சை கேட்க மாட்டேங்குறார் என கூறுகிறார் ரோகிணி. மனோஜை உன் வழிக்கு கொண்டுவரப் பாரு, இல்லேனா விஜயா அவனுக்கு வேற கல்யாணம் பண்ணி வச்சிருவாங்க என சிந்தாமணி சொல்ல, அதற்கு நான் ஒருபோதும் விடமாட்டேன் என கூறுகிறார் ரோகிணி. உன் புருஷன உன்னோட கண்ட்ரோலுக்கு கொண்டுவரப் பாரு. அப்பதான் நீ நினைச்சது நடக்க்கும் என கூறிவிட்டு செல்கிறார் சிந்தாமணி.

66
சமாதானம் பேச போகும் முத்து
Image Credit : jiohotstar

சமாதானம் பேச போகும் முத்து

மறுபுறம் வக்கீல் கிருஷ்ணா ஆபிஸில் சமாதானப் பேச்சு நடக்க இருப்பதால் செல்வத்துக்காக நான் செல்லப் போகிறேன் என முத்து சொல்கிறார். அதற்கு மீனா, நீங்க அங்கு போனா பிரச்சனை வரும், அதனால் நானும் கூட வருகிறேன் என கூறுகிறார். அதேபோல் சீதாவும் வருவதாக முத்து சொல்ல, உடனே சீதாவுக்கு போன் போட்டு பேசுகிறார் மீனா. அப்போது அருண் தன்னை வரச் சொன்னதாகவும், அங்கு வந்து உங்க மாமா எவ்வளவு மோசமானவர் என்பதை பாரு என சொன்னதாகவும் கூறுகிறார். இதனால் நிச்சயம் இந்த சமாதானப் பேச்சின் போது பிரச்சனை வெடிக்கும் என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது. இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை இனி வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சிறகடிக்க ஆசை

Latest Videos
Recommended Stories
Recommended image1
கூட்டி பெருக்குவதற்கு பதிலாக எஸ்கேப் ஆக நினைத்த சந்திரகலா – வீட்டை சுத்தி காவல் காத்த கார்த்திக் அண்ட் கோ!
Recommended image2
கவினின் அம்மா ஏக்கம் தீருமா? விஜி - விக்ரம் சந்திப்பில் நடந்த மாற்றம்! செல்லமே செல்லமே இன்றைய மெகா எபிசோட்
Recommended image3
சத்யா - ரோகினி கல்யாணம்: நிலைகுலைந்து போன ஆதிரை! கதையை புரட்டிப் போடும் மிரட்டல் சவால்-மருமகள் சீரியலில் திருப்பம்!
Related Stories
Recommended image1
விஜயாவை ஏமாற்றி வீட்டை எழுதி வாங்கிய சிந்தாமணி.! நடுத்தெருவுக்கு வரப்போகும் முத்து குடும்பம்.! சிறகடிக்க ஆசை அப்டேட்.!
Recommended image2
ரோகிணிக்கு பயந்து மனோஜை சிக்கலில் மாட்டிவிடும் விஜயா - சிறகடிக்க ஆசை சீரியலில் சரவெடி ட்விஸ்ட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved