MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • ரோகிணிக்கு பயந்து மனோஜை சிக்கலில் மாட்டிவிடும் விஜயா - சிறகடிக்க ஆசை சீரியலில் சரவெடி ட்விஸ்ட்

ரோகிணிக்கு பயந்து மனோஜை சிக்கலில் மாட்டிவிடும் விஜயா - சிறகடிக்க ஆசை சீரியலில் சரவெடி ட்விஸ்ட்

சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜை ரோகிணியிடம் இருந்து பிரிக்க வேண்டும் என்கிற முனைப்பில் விஜயா முட்டாள்தனமான முடிவை எடுத்துள்ளார். அதைப்பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Feb 12 2026, 08:52 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Siragadikka Aasai Serial Today Episode
Image Credit : jiohotstar

Siragadikka Aasai Serial Today Episode

சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ் தொடர்ந்த டைவர்ஸ் வழக்கை டம்மி பீஸ் ஆக்கி இருக்கிறார் ரோகிணி. அவருக்கு எதிராக சாட்சி சொல்ல வந்தவர்களை வைத்தே அந்த வழக்கை செல்லாதது போல் காட்டி உள்ளார். குறிப்பாக மனோஜ் காசு கொடுத்து கறிக்கடை மணியை அழைத்து வந்திருப்பதாக ரோகிணி சொல்ல, அதன்பின் மனோஜின் போனை செக் பண்ணி பார்த்தபோது அவருக்கு காசு அனுப்பப்பட்டு இருந்ததை பார்த்த நீதிபதி, இந்த சாட்சிகள் எல்லாம் செல்லாது என கூறி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
மனோஜிடம் சவால்விடும் ரோகிணி
Image Credit : jiohotstar

மனோஜிடம் சவால்விடும் ரோகிணி

ரோகிணி மனோஜின் ஷோரூமுக்கு செல்ல, அவரை வாசலிலேயே தடுத்து நிறுத்தும் சந்தோஷ் மற்றும் ஜீவா, உங்களை பாஸ் உள்ளே விடக் கூடாது என சொல்லி இருக்கிறார் என கூறுகிறார்கள். ஆனால் அவர்களை மீறி ரோகிணி உள்ளே செல்ல முயல அவர் கையை பிடித்து நிறுத்துகிறார் சந்தோஷ். அதை வீடியோ எடுக்கும் ரோகிணி, என்னை துன்புறுத்துவதாக போலீஸில் புகார் கொடுப்பேன் என மிரட்டுகிறார். அதற்கு பயந்து ரோகிணியை உள்ளே விடுகிறார். பின்னர் ரோகிணியை திட்டிதீர்க்கும் மனோஜ், இனி நீ இங்க வரக்கூடாது என உத்தரவிடுவதோடு, வாங்குன கடனை எல்லாம் நானே அடைத்துக் கொள்கிறேன் என கூறுகிறார். உன்னை என்கிட்ட இருந்து யாராலும் பிரிக்க முடியாது பிரிக்கவும் விடமாட்டேன் என சவால்விட்டு அங்கிருந்து கிளம்புகிறார் ரோகிணி.

35
சிந்தாமணியிடம் கடன் கேட்கும் விஜயா
Image Credit : jiohotstar

சிந்தாமணியிடம் கடன் கேட்கும் விஜயா

இதையடுத்து பார்வதியின் வீட்டிற்கு செல்கிறார் விஜயா. அங்கு அவருக்கு அவார்டு கொடுக்க உள்ளதாக ஒரு மீடியாவில் இருந்து வந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதன்பின்னர் சிந்தாமணியும் சிறிது நேரத்தில் அங்கு வருகிறார். அப்போது சிந்தாமணியிடம் தனக்கு பணம் தேவைப்படுவதாக சொல்கிறார் விஜயா. எவ்வளவு என கேட்கும்போது 7 லட்சம் வேணும் என கூறுகிறார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடையும் சிந்தாமணி, உங்களுக்கு கடன் கொடுத்த பைனான்சியரிடம் இருந்தே அந்த பணத்தை வாங்கலாம், ஆனால் அதில் ஒரு சிக்கல் இருப்பதாக கூறுகிறார் சிந்தாமணி.

45
மனோஜ் - விஜயா எடுத்த முட்டாள்தனமான முடிவு
Image Credit : jiohotstar

மனோஜ் - விஜயா எடுத்த முட்டாள்தனமான முடிவு

உடனே என்ன சிக்க என விஜயா கேட்க, அந்த பைனான்சியர் உங்க வீட்டுக்கான கடனை எல்லாம் பேங்கில் கட்டிவிட்டார். தற்போது வீட்டின் பத்திரம் உங்கள் கையில் இருக்கிறது. அதை அவரிடம் கொடுத்தால் தான் அவர் உங்களுக்கு கடன் கொடுப்பார் என சிந்தாமணி கூறுகிறார். பின்னர் இது தொடர்பாக பேச மனோஜின் ஷோரூமுக்கு செல்கிறார் விஜயா. அங்கு மனோஜிடம் விஷயத்தை சொல்ல, அவரும் பத்திரத்தை கொடுத்து கடன் வாங்கலாம் என சொல்கிறார். அதற்கு உன்னுடைய அப்பா கையெழுத்து வேண்டுமே என விஜயா சொல்ல, அதை நானே போடுகிறேன் என கூறுகிறார் மனோஜ். இந்த முடிவால் இருவரும் சீக்கிரமே பிரச்சனையில் சிக்குவார்கள் என்பது உறுதியாக தெரிகிறது.

55
செல்வத்துக்காக அருணிடம் சமாதானம் பேசப்போகும் முத்து
Image Credit : jiohotstar

செல்வத்துக்காக அருணிடம் சமாதானம் பேசப்போகும் முத்து

மறுபுறம் செல்வத்தை ஜாமினில் எடுத்துள்ள முத்து, வக்கீலை சந்தித்து இந்த வழக்கில் இருந்து செல்வத்தை எப்படி வெளியே கொண்டு வருவது என்பது பற்றி ஆலோசிக்கிறார். அதற்கு அந்த வக்கீல், அவ்வளவு சீக்கிரம் வெளியே வந்துவிட முடியாது. அதற்கு ஒரே வழி தான் இருக்கிறது. எதிர்தரப்பினரிடம் சுமூகமாக பேசி, கேஸை வாபஸ் வாங்கினால் மட்டுமே செல்வத்தால் வெளியே வர முடியும் என சொல்கிறார். இதனால் அருணிடம் சமாதானம் பேச முடிவு செய்திருக்கிறார் முத்து. ஆனால் அருண் இந்த வழக்கை வாபஸ் வாங்க மாட்டார் என்பது ஊர் அறிந்த விஷயம். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சிறகடிக்க ஆசை
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Bigg Boss : வைல்டு கார்டில் பிக் பாஸ் வைத்த ட்விஸ்ட்... TTF வாசன் உடன் வீட்டுக்குள் எண்ட்ரியாகும் அந்த 2 பேர் யார்?
Recommended image2
Siragadikka Aasai Salary : முத்து vs மீனா... அதிக சம்பளம் யாருக்கு? சிறகடிக்க ஆசை சீரியல் நட்சத்திரங்களின் சம்பள விவரம் இதோ
Recommended image3
Bigg Boss-ல் டபுள் எவிக்‌ஷன்... இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு ஜூட் விடப்போகும் அந்த 2 போட்டியாளர்கள் யார்?
Related Stories
Recommended image1
சாட்சிகளை செல்லாக்காசு ஆக்கிய ரோகிணி... புதுகுண்டை தூக்கிப்போட்ட மனோஜ் - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
Recommended image2
கோர்ட்டில் மனோஜை ஆதாரத்துடன் சிக்க வைத்த ரோகிணி... சாட்சி சொல்ல வந்தவர்களுக்கு சிக்கல் - சிறகடிக்க ஆசை அப்டேட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved