- Home
- Cinema
- தொலைக்காட்சி
- கோர்ட்டில் மனோஜை ஆதாரத்துடன் சிக்க வைத்த ரோகிணி... சாட்சி சொல்ல வந்தவர்களுக்கு சிக்கல் - சிறகடிக்க ஆசை அப்டேட்
கோர்ட்டில் மனோஜை ஆதாரத்துடன் சிக்க வைத்த ரோகிணி... சாட்சி சொல்ல வந்தவர்களுக்கு சிக்கல் - சிறகடிக்க ஆசை அப்டேட்
சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ் தாக்கல் செய்த விவாகரத்து வழக்கு விசாரணைக்கு வந்துள்ள நிலையில், ரோகிணி தன் தரப்பு வாதத்தை தொடங்கி உள்ளார். இதையடுத்து என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.

Siragadikka Aasai Serial Today Episode
சிறகடிக்க ஆசை சீரியல் மனோஜ் - ரோகிணியின் விவாகரத்து வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது. இதில் ரோகிணிக்கு எதிராக சாட்சி சொல்ல அவரது தோழி வித்யா வந்துள்ளார். அதுமட்டுமின்றி மலேசியா மாமாவையும் சாட்சி சொல்வதற்காக முத்து அழைத்து வந்திருக்கிறார். இதையெல்லாம் முன்கூட்டியே அறிந்துகொண்ட ரோகிணி, தனக்கு ஆதரவாக ஆதாரங்களையும் திரட்டி வைத்திருக்கிறார். இந்த முறை சாட்சிகள் இருப்பதால் தனக்கு ஈஸியாக டைவர்ஸ் கிடைத்துவிடும் என மிதப்பில் இருக்கிறார் மனோஜ். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
வழக்கு விசாரணை
கோர்ட்டில் விசாரணை ஆரம்பமானது, வழக்கம்போல் நீதிபதியும் மனோஜ் தரப்பு வக்கீலும் கலகலப்பாக பேசிக் கொள்கிறார்கள். உன் வீட்டுக்காரருக்கு கையில அடிபட்டிருச்சாமே... உனக்கு யாரு சாப்பாடு செஞ்சி கொடுப்பா.. நீ எப்படி சாப்பிடுற என நீதிபதி கிண்டலடிக்கிறார். இதையெல்லாம் பார்த்த ஸ்ருதி, என்ன கோர்ட்ல இப்படியெல்லாமா பேசுவாங்க என கேட்கிறார். சினிமாவுல பாக்குற மாதிரிலாம் இல்லை. இதுதான் ரியல். கோர்ட்ல இப்படி தான் நடக்கும் என சொல்கிறார் முத்து. இதன்பின்னர் விவாகரத்து வழக்கின் விசாரணையை தொடங்குகிறார்கள்.
சாட்சி சொன்ன வித்யா
ரோகிணிக்கு எதிராக அவருடைய தோழியே சாட்சி சொல்ல போறாங்கனு மனோஜுடைய வக்கீல் சொல்ல, அதன்பின்னர் வித்யா வந்த நடந்த எல்லாவற்றையும் சொல்கிறார். இதையடுத்து பதிலடி கொடுக்கும் ரோகிணி, வித்யா அவளுடைய வீட்டுக்காரர் சொல்லி தான் இப்படியெல்லாம் தப்பு தப்பா என்னைப்பற்றி பேசுறா, அவளுடைய வீட்டுக்காரரிடம் நான் விசாரிக்க வேண்டும் என சொல்கிறார். இதையடுத்து வித்யாவின் கணவர் முருகனை கூண்டில் ஏற்றுகிறார் ரோகிணி. அவரிடம் அடுக்கடுக்கான கேள்விகளை முன் வைக்கிறார் ரோகிணி.
முருகனை லாக் பண்ணிய ரோகிணி
நீங்க முத்துவுக்காக என்ன வேண்டுமானாலும் செய்வீங்க தான என ரோகிணி கேட்க, அதற்கு முருகன், ஆமா எங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வச்சதே முத்து அண்ணனும், மீனா அண்ணியும் தான், அதனால அவங்க என்ன சொன்னாலும் நான் கேட்பேன். என் உயிரையே கூட குடுப்பேன்னு முருகன் சொல்கிறார். பார்த்தீங்களா ஐயா, அவங்க என்ன சொன்னாலும் இவங்க கேட்பாங்க. ஆகமொத்தத்துல அவங்க பொய் சொல்ல சொல்லிருக்காங்க. அதனால் தான் இவங்க இங்க வந்து பொய் சொல்லிகிட்டு இருக்காங்கனு ஒரே போடாக போடுகிறார் ரோகிணி.
சாட்சி சொல்லும் கறிக்கடைக்காரர்
அதன்பின்னர் கறிக்கடைக் காரர் மணி சாட்சி சொல்ல வருகிறார். அவரும் நடந்த உண்மையெல்லாம் கூறுகிறார். இவளுக்கு கல்யாணம் ஆனது மனோஜுக்கெல்லாம் தெரியாது. இந்த பொண்ணு தான் ஃபிராடு வேலைகளை பண்ணுதுனு சொல்கிறார். அவரின் குற்றச்சாட்டுகளையும் திட்டவட்டமாக மறுக்கும் ரோகிணி. இவரையும் பொய் சொல்ல சொல்லி தான் கூட்டிட்டு வந்திருக்காங்க. வேண்டுமென்றால் அவருடைய மொபைலை வாங்கி செக் பண்ணுங்க. நேத்து தான் மனோஜ் இவருக்கு பணம் அனுப்பி இருக்கிறார் என சொல்கிறார் ரோகிணி.
ரோகிணி வைத்த ட்விஸ்ட்
இங்கு தான் ரோகிணி செய்த ராஜதந்திரம் வெளிச்சத்துக்கு வருகிறது. நேற்று ஷோரூமுக்கு சென்றிருந்த ரோகிணி, தான் பிடித்துக் கொடுத்த ஆர்டருக்காக ஒருவருக்கு 10 ஆயிரம் பணம் அனுப்ப வேண்டும் என சொன்னதும், மக்கு மனோஜ் தன் போனை அவரிடம் கொடுத்தார். ரோகிணியும் அதிலிருந்து பணத்தை அனுப்பிவிட்டு மனோஜிடம் திருப்பிக் கொடுத்துவிட்டார். அந்த ரோகிணி அப்போது பணம் அனுப்பியது வேறு யாருக்குமில்லை, கறிக்கடைக்காரருக்கு தான். அதையே தற்போது தனக்கான ஆதாரமாக முன்வைத்திருக்கிறார் ரோகிணி.
மாட்டிக்கொண்ட மனோஜ்
உடனே நீதிபதியிடம் தன்னுடைய போனை கொடுக்கிறார் மனோஜ். அப்போது போனை வாங்கி செக் பண்ணிய பிறகு தான் மனோஜ் போனில் இருந்து கறிக்கடைக்காரருக்கு 10 ஆயிரம் பணம் அனுப்பப்பட்டிருக்கும் விஷயம் தெரியவருகிறது. அப்போ பணம் கொடுத்து தான் இவரை நீ சாட்சியா கூட்டிட்டு வந்தியா என மனோஜை பார்த்து நீதிபதி கேட்க, மனோஜும், ரோகிணி தான் என்னுடைய போனை வாங்கி அனுப்பிவிட்டா என சொல்ல, அதற்கு ஆதாரம் இருக்கா என நீதிபதி கேட்க, திருதிருவென முழிக்கிறார் மனோஜ். ஆகமொத்தம் ரோகிணி இந்த கேஸில் இருந்து கிட்டத்தட்ட எஸ்கேப் ஆகிவிட்டது. இதையடுத்து என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

