MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • Sun TV vs Vijay TV : சன் டிவியின் சாதனைக்கு ஃபுல் ஸ்டாப் வைக்கும் விஜய் டிவி... இனி நம்பர் 1 இந்த சீரியல் தான்

Sun TV vs Vijay TV : சன் டிவியின் சாதனைக்கு ஃபுல் ஸ்டாப் வைக்கும் விஜய் டிவி... இனி நம்பர் 1 இந்த சீரியல் தான்

Siragadikka Aasai vs Kayal Serial : சன் டிவியின் கயல் சீரியல் விரைவில் முடிவுக்கு வர உள்ளதால், சிறகடிக்க ஆசை சீரியல் புது சாதனை படைக்க உள்ளது. அதைப்பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Oct 06 2026, 07:21 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Sun TV vs Vijay TV
Image Credit : Instagram

Sun TV vs Vijay TV

சின்னத்திரையில் போட்டிபோட்டு சீரியல்களை ஒளிபரப்பி வரும் சேனல்கள் என்றால் அது சன் டிவி மற்றும் விஜய் டிவி தான். இதில் டிஆர்பி ரேஸில் சன் டிவி சீரியல்கள் தான் ஆதிக்கம் செலுத்தும். கடந்த சில மாதங்களாக சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் விஜய் டிவி சீரியல்களும் டிஆர்பி ரேஸில் பட்டைய கிளப்பி வருகின்றன. இந்த நிலையில் சன் டிவி தக்க வைத்திருந்த சாதனையை தற்போது விஜய் டிவி சீரியல் தட்டிப் பறிக்க உள்ளது. அது என்ன சாதனை என்பதை இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

சிறகடிக்க ஆசை vs பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 : ஜெராக்ஸ் எடுத்ததுபோல் ரெண்டு சீரியலுக்கும் இவ்ளோ ஒற்றுமையா?

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
முடிவுக்கு வரும் கயல் சீரியல்
Image Credit : instagram

முடிவுக்கு வரும் கயல் சீரியல்

சன் டிவியில் தற்போது ஒளிபரப்பாகும் சீரியல்களில் அதிக எபிசோடுகள் ஓடிய சீரியல் என்றால் அது கயல் சீரியல் தான். கடந்த 2021-ம் ஆண்டு தொடங்கப்பட்ட கயல் சீரியல், கடந்த 5 ஆண்டுகளாக சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் சஞ்சீவ் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சைத்ரா ரெட்டி நடித்து வருகிறார். இந்த சீரியல் ஆரம்பத்தில் விறுவிறுப்பாக இருந்தாலும் போகப் போக ஜவ்வாக இழுக்கத் தொடங்கியது. இதனால் அப்செட் ஆன ரசிகர்கள். இந்த சீரியலை எப்போ முடிவுக்கு கொண்டு வருவீங்க என கேள்வி எழுப்ப தொடங்கினர்.

35
கயல் சீரியல் எப்போ முடிகிறது?
Image Credit : youtube

கயல் சீரியல் எப்போ முடிகிறது?

ரசிகர்களின் கோரிக்கைக்கு ஒரு வழியாக செவி சாய்த்துள்ள சன் டிவி, அந்த சீரியலை இழுத்து மூட முடிவு செய்துள்ளது. தற்போது கயல் சீரியல் கிளைமாக்ஸை நோக்கி நகர்ந்து வருகிறது. அந்த சீரியல் வருகிற அக்டோபர் 24ந் தேதி உடன் முடிவடைய உள்ளது. அந்த சீரியல் முடிந்த கையோடு பராசக்தி என்கிற புத்தம்புது சீரியலை சன் டிவியில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்ப உள்ளனர். இந்த கயல் சீரியல் இதுவரை 1500 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. தற்போதை சூழலில் இதுதான் அதிக எபிசோடுகளுடன் ஓளிபரப்பாகும் சீரியல் என்கிற சாதனையை படைத்து இருக்கிறது.

45
சாதனைக்கு முடிவு கட்டும் சிறகடிக்க ஆசை
Image Credit : instagram

சாதனைக்கு முடிவு கட்டும் சிறகடிக்க ஆசை

கயல் சீரியல் இம்மாதத்துடன் முடிவடைய உள்ளதால், அதன்பின் அதிக எபிசோடுகள் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் என்கிற சாதனை சிறகடிக்க ஆசை சீரியலுக்கு சொந்தமாகிவிடும். விஜய் டிவியின் பிரைம் டைம் சீரியலான சிறகடிக்க ஆசை கடந்த 2023-ம் ஆண்டு தொடங்கப்பட்டு, தற்போது 1100 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல் தற்போதைக்கு மூடுவிழா காண வாய்ப்பில்லை என்பதால், அசால்டாக 2000 எபிசோடுகளை தாண்டிவிடும் என்கிற பேச்சும் சின்னத்திரை வட்டாரத்தில் உள்ளது. சிறகடிக்க ஆசை சீரியலுக்கு அடுத்தபடியாக சன் டிவியின் சிங்கப்பெண்ணே 957 எபிசோடுகளுடனும், விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 910 எபிசோடுகளுடனும் ஒளிபரப்பாகி வருகிறது.

55
கார்த்திகை தீபம் லிஸ்ட்டில் இருக்கா?
Image Credit : youtube/zeetamil

கார்த்திகை தீபம் லிஸ்ட்டில் இருக்கா?

ஜீ தமிழில் கடந்த 2022-ம் ஆண்டு தொடங்கப்பட்ட கார்த்திகை தீபம் சீரியல் தற்போது வரை அதே பெயருடன் ஒளிபரப்பாகி வந்தாலும், இடையே அதன் கதைக்களம் அதில் நடிக்கும் நடிகர்கள் என டோட்டலாக மாற்றப்பட்டு, புத்தம் புதிய தொடர் போல தான் ஒளிபரப்பினார்கள். இருப்பினும் அவர்கள் இரண்டு பாகங்களையும் சேர்த்து தான் எபிசோடு எண்ணிக்கையை போட்டு வருகின்றனர். தற்போது 1300 எபிசோடுகளை கடந்து அந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இதன் காரணமாக இதனை மற்ற சீரியல்களோடு ஒப்பிடவில்லை.

Karthigai Deepam : ரேவதிக்கு மீண்டும் திருமணம் செய்ய பிளான் போடும் சாமுண்டீஸ்வரி.. வயதான மாப்பிள்ளையை தேடும் சந்திரகலா!

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சன் தொலைக்காட்சி
விஜய் தொலைக்காட்சி
சிறகடிக்க ஆசை
கயல் (தொலைக்காட்சித் தொடர்)
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Bigg Boss கொடுத்த புதிய டாஸ்க்கால் வெடிக்கும் சண்டை! லட்சுமி பிரியாவை கதறவிட்ட முனியம்மாள்... செம நோஸ் கட் வாங்கிய முத்தழகி
Recommended image2
Azhagae Azhagu Promo: அம்மாவை தள்ளிவிட்ட தங்கராஜ்..கொந்தளித்த மலர்! மன்னிப்பு கேட்கணும் என சுரேஷிடம் அதிரடி கண்டிஷன்!
Recommended image3
TTF vasan vs Jason : அடாவடி செய்த ஜேசன்... அடிதடியில் இறங்கிய டிடிஎஃப் வாசன்! போர்களமாக மாறிய பிக் பாஸ் வீடு
Related Stories
Recommended image1
Kayal Serial : முடிவுக்கு வருகிறதா கயல் சீரியல்? ஹீரோ சஞ்சீவ் திடீரென விலகியது ஏன்?
Recommended image2
Siragadikka Aasai Salary : சிறகடிக்க ஆசை சீரியலில் யாருக்கு அதிக சம்பளம் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved