- Home
- Cinema
- தொலைக்காட்சி
- Kayal Serial : முடிவுக்கு வருகிறதா கயல் சீரியல்? ஹீரோ சஞ்சீவ் திடீரென விலகியது ஏன்?
Kayal Serial : முடிவுக்கு வருகிறதா கயல் சீரியல்? ஹீரோ சஞ்சீவ் திடீரென விலகியது ஏன்?
Sanjeev Quits From Kayal Serial : சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் இருந்து நாயகன் சஞ்சீவ் திடீரென விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதைப்பற்றி பார்க்கலாம்.

Sanjeev Quits From Kayal Serial
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரைம் டைம் சீரியல் கயல். இந்த சீரியலில் சஞ்சீவ் ஹீரோவாகவும், சைத்ரா ரெட்டி ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். இந்த சீரியல் கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டது. ஆயிரம் எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல், தற்போது திங்கள் முதல் சனிக்கிழமை வரை தினந்தோறும் 1 மணிநேரம் ஒளிபரப்பாகி வருகிறது. கயல் சீரியலுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அதற்கு ஏற்றார் போல் இதன் கதைக்களமும் விறுவிறூப்பாக நகர்ந்து வருகிறது.
டிஆர்பியில் கலக்கும் கயல்
சன் டிவியில் அதிக டிஆர்பி ரேட்டிங்கை வாரி சுருட்டும் சீரியல்களில் கயல் சீரியலும் ஒன்று. மூன்று முடிச்சு, சிங்கப்பெண்ணே சீரியல்களுக்கு அடுத்தபடியாக அதிக டிஆர்பியை பெறும் சீரியலாக கயல் இருந்து வருகிறது. இந்த சீரியலில் கடந்த சில எபிசோடுகளாக அதன் நாயகன் சஞ்சீவ் கோமா நிலையில் இருப்பது போல காட்சிகள் இடம்பெற்றிருந்தது. கதைக்களத்தின் படி அப்படி இருக்கும் என பலரும் நினைத்து வந்த நிலையில், தற்போது கயல் சீரியல் ரசிகர்களுக்கு ஒரு ஷாக்கிங் நியூஸ் தெரியவந்துள்ளது.
விலகிய சஞ்சீவ்
அதன்படி கயல் சீரியலில் இருந்து நாயகன் சஞ்சீவ் விலகி உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. அண்மையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஒரு பிரச்சனை ஏற்பட்டதாகவும் அதிலிருந்து சஞ்சீவ் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே வருவதில்லை என்றும் சீரியலில் பணியாற்றும் சிலர் கூறி உள்ளனர். இருப்பினும் என்ன பிரச்சனை என்பது தெளிவாக தெரியவில்லை. ஆனால் இனி சஞ்சீவ் சீரியலில் வரமாட்டார் என்பது மட்டும் கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது. அதன்காரணமாகவே அவர் கோமா நிலையில் இருப்பது போல் கதைக்களம் நகர்ந்து வருகிறதாம்.
முடிவுக்கு வருகிறதா கயல்?
இதேபோல தான் சன் டிவியின் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலிலும், அதில் நாயகியாக நடித்து வந்த கனிகா, அந்த சீரியலை விட்டு விலகிய பின்னரும், அவர் கோமா நிலையில் இருப்பதாக கூறி 6 மாதங்களுக்கு மேலாக இழுத்தடித்தனர். அதே கான்செப்டை தற்போது கயல் சீரியலிலும் பின்பற்றி வருகிறார்கள். சஞ்சீவ் கோமா நிலையில் இருப்பது போன்ற காட்சிகளை வைத்தே சீரியலை நகர்த்துவார்களா அல்லது அவருக்கு பதில் வேறு ஹீரோவை களமிறக்குவார்களா அல்லது கயல் சீரியலை முடிவுக்கு கொண்டுவருவார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

