MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • TRP ரேஸில் தடாலடி மாற்றம்... சன் டிவியிடம் சம்மட்டி அடிவாங்கிய விஜய் டிவி சீரியல்கள்

TRP ரேஸில் தடாலடி மாற்றம்... சன் டிவியிடம் சம்மட்டி அடிவாங்கிய விஜய் டிவி சீரியல்கள்

டிஆர்பி ரேஸில் விஜய் டிவி சீரியல்கள் படிப்படியாக சரிவை சந்தித்து உள்ள போதிலும், சன் டிவி சீரியல்கள் அடிச்சு தூள் கிளப்பி இருக்கின்றன. இந்த வாரம் எந்தெந்த சீரியல்கள் டாப் 10ல் உள்ளது என்பதை பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Mar 21 2026, 02:52 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Top 10 Tamil Serial TRP Rating
Image Credit : instagram

Top 10 Tamil Serial TRP Rating

சின்னத்திரை சீரியல்கள் மீதான மவுசு எகிறிய வண்ணம் உள்ளது. சன் டிவிக்கு நிகராக விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சிகளும் போட்டிபோட்டு சீரியல்களை ஒளிபரப்பி வருகின்றன. கடந்த சில வாரங்களாக சன் டிவி சீரியல்களுக்கு விஜய் டிவி தொடர்கள் தண்ணிகாட்டி வந்தன. இதனால் டிஆர்பி ரேஸில் தொடர்ந்து விஜய் டிவி தொடர்கள் முன்னேறி வந்தன. ஆனால் தற்போது, 2026-ம் ஆண்டின் 10வது வாரத்திற்கான டாப் 10 சீரியல்களின் பட்டியல் வெளியாகி உள்ளது. இதில் விஜய் டிவி சீரியல்கள் கடும் சரிவை சந்தித்து உள்ளன. இந்த பட்டியலில் என்னென்ன சீரியல்கள் இடம்பெற்றுள்ளது என்பதை பார்க்கலாம்.

25
டாப் 10ல் அழகே அழகு சீரியல்
Image Credit : instagram

டாப் 10ல் அழகே அழகு சீரியல்

கடந்த வாரம் 10வது இடத்தில் இருந்த விஜய் டிவியின் சின்ன மருமகள் சீரியல் இந்த வாரம் டாப் 10 லிஸ்டிலேயே இடம்பெறவில்லை. அதற்கு பதிலாக இந்த வாரம் 10வது இடத்தில் இரண்டு சீரியல்கள் இடம்பிடித்துள்ளன. அதில் ஒன்று, விஜய் டிவியில் புதிதாக தொடங்கப்பட்ட அழகே அழகு சீரியல். அன்ஷிதா, நக்‌ஷத்ரா நடிப்பில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் 5.50 டிஆர்பி உடன் 10ம் இடத்தில் உள்ளது. இதனுடன் ஜீ தமிழ் தொலைக்காட்சியின் பிரைம் டைம் சீரியலான கார்த்திகை தீபம் சீரியலும் 5.50 புள்ளிகளை பெற்று 10ம் இடத்தை பகிந்துகொண்டுள்ளது.

Related Articles

Related image1
ரோகிணிக்கு கொம்புசீவி விட்ட சிந்தாமணி... சத்யாவின் காதலுக்கு ஓகே சொன்னாரா முத்து? சிறகடிக்க ஆசை சீரியல்
Related image2
தாலியை தொலைத்த சீதா... தடபுடலாக கொண்டாடப்படும் அண்ணாமலை பர்த்டே - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
35
சரியும் எதிர்நீச்சல் டிஆர்பி
Image Credit : youtube/suntv

சரியும் எதிர்நீச்சல் டிஆர்பி

கடந்த வாரத்தை போல் இந்த வாரமும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் தான் 9ம் இடத்தில் உள்ளது. இந்த சீரியலுக்கு கடந்த வாரம் 6.13 டிஆர்பி கிடைத்திருந்த நிலையில், இந்த வாரம் வெறும் 5.85 புள்ளிகள் மட்டுமே கிடைத்து சரிவை சந்தித்து உள்ளது. இதற்கு அடுத்தபடியாக விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் கடந்த வாரத்தை போல் இந்த வாரமும் 8-ம் இடத்திலேயே நீடிக்கிறது. அந்த சீரியலுக்கு 6.70 டிஆர்பி கிடைத்துள்ளது. இந்த பட்டியலில் 7-ம் இடத்தை சன் டிவியின் அன்னம் சீரியல் பிடித்திருக்கிறது. கடந்த வாரம் 6-ம் இடத்தில் இருந்த இந்த சீரியல் இந்த வாரம் 7-ம் இடத்துக்கு தள்ளப்பட்டு 6.86 புள்ளிகளை பெற்றுள்ளது.

45
சரிவை சந்தித்த விஜய் டிவி சீரியல்கள்
Image Credit : instagram

சரிவை சந்தித்த விஜய் டிவி சீரியல்கள்

விஜய் டிவியின் பிரைம் டைம் சீரியல்களான சிறகடிக்க ஆசை மற்றும் அய்யனார் துணை இரண்டுமே சரிவை சந்தித்து உள்ளது. இதில் சிறகடிக்க ஆசை சீரியல் கடந்த வாரத்தோடு ஒப்பிடுகையில் ஒரு இடம் முன்னேறி 6-ம் இடத்தை பிடித்திருந்தாலும், கடந்த வாரம் 7.03 டிஆர்பியும், இந்த வாரம் வெறும் 6.98 டிஆர்பியும் பெற்றிருக்கிறது. அதேபோல் விஜய் டிவியின் நம்பர் 1 சீரியலாக திகழ்ந்து வரும் அய்யனார் துணை, கடந்த வாரம் 7.79 புள்ளிகள் உடன் 3-ம் இடத்தில் இருந்த நிலையில், இந்த வாரம் மளமளவென சரிந்து 7.41 புள்ளிகளுடன் 5-ம் இடத்துக்கு தள்ளப்பட்டு இருக்கிறது.

55
டாப்பில் சன் டிவி சீரியல்கள்
Image Credit : youtube/suntv

டாப்பில் சன் டிவி சீரியல்கள்

பல வாரங்களுக்கு பின்னர் முதல் நான்கு இடங்களை சன் டிவி சீரியல்கள் கைப்பற்றி உள்ளன. இதில் நான்காம் இடத்தில் சைத்ரா ரெட்டி நடித்த கயல் சீரியல் உள்ளது. அந்த சீரியலுக்கு 7.60 டிஆர்பி ரேட்டிங் கிடைத்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தை மருமகள் சீரியல் பிடித்துள்ளது. கடந்த வாரம் 5ம் இடத்தில் இருந்த இந்த சீரியல், இந்த வாரம் 3ம் இடத்துக்கு முன்னேறி 7.73 புள்ளிகளை பெற்றிருக்கிறது. இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் சிங்கப்பெண்ணே சீரியலும், முதலிடத்தில் மூன்று முடிச்சு சீரியலும் உள்ளன. இதில் சிங்கப்பெண்ணே சீரியலுக்கு 8.27 புள்ளிகளும், மூன்று முடிச்சுக்கு 9.68 புள்ளிகளும் கிடைத்துள்ளன.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சன் தொலைக்காட்சி
விஜய் தொலைக்காட்சி
ஜீ தமிழ் தொலைக்காட்சித் தொடர்கள்
Latest Videos
Recommended Stories
Recommended image1
என்கிட்ட பிரியாணி கேட்காதீங்க... வைரலாகும் மணிமேகலையின் ரம்ஜான் செலிபிரேஷன் போஸ்ட்
Recommended image2
தாலியை தொலைத்த சீதா... தடபுடலாக கொண்டாடப்படும் அண்ணாமலை பர்த்டே - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
Recommended image3
கதையை முடிக்க சொன்ன ஆலிவர்... ஜனனிக்காக கழுகு போல் காத்திருக்கும் ரவுடிகள் - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
Related Stories
Recommended image1
ரோகிணிக்கு கொம்புசீவி விட்ட சிந்தாமணி... சத்யாவின் காதலுக்கு ஓகே சொன்னாரா முத்து? சிறகடிக்க ஆசை சீரியல்
Recommended image2
தாலியை தொலைத்த சீதா... தடபுடலாக கொண்டாடப்படும் அண்ணாமலை பர்த்டே - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved