- Home
- Cinema
- தொலைக்காட்சி
- ஆரம்பித்த வேகத்தில் இழுத்து மூடப்படும் விஜய் டிவி சீரியல்... அதிர்ச்சியில் ரசிகர்கள்
ஆரம்பித்த வேகத்தில் இழுத்து மூடப்படும் விஜய் டிவி சீரியல்... அதிர்ச்சியில் ரசிகர்கள்
விஜய் டிவியில் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்ட மதிய நேர சீரியல் ஒன்று, ஆரம்பித்த 8 மாதங்களிலேயே முடிவுக்கு கொண்டுவரப்பட இருக்கிறது. அதைப்பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Vijay TV Serial End Soon
சின்னத்திரையில் சன் டிவிக்கு போட்டியாக சீரியல்களை ஒளிபரப்பி வரும் சேனல் என்றால் அது விஜய் டிவி தான். காலை முதல் இரவு வரை போட்டிபோட்டு சீரியல்களை ஒளிபரப்பி வரும் இந்த சேனலில் ஆண்டுதோறும் சில புத்தம் புது சீரியல்களும் களமிறக்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் விஜய் டிவியில் தொடங்கப்பட்ட புத்தம் புது சீரியல் ஒன்று தொடங்கிய 8 மாதங்களில் முடிவுக்கு வர இருக்கிறது. அந்த சீரியலின் கிளைமாக்ஸ் ஷூட்டிங் நடைபெற்று வருகிறதாம். அது என்ன சீரியல்? எதற்காக முடிவுக்கு கொண்டுவரப்படுகிறது என்பதை இங்கே விரிவாக காணலாம்.
முடிவுக்கு வரும் விஜய் டிவி சீரியல்
அந்த சீரியல் வேறெதுவுமில்லை கடந்த ஏப்ரல் 28-ந் தேதி விஜய் டிவியில் தொடங்கப்பட்ட பூங்காற்று திரும்புமா தொடர் தான். இந்த தொடரில் ஷோபனா நாயகியாக நடித்து வருகிறார். இவர் விஜய் டிவியில் ஏற்கனவே முத்தழகு என்கிற சீரியலில் நாயகியாக நடித்தவர் ஆவார். சமீர் அகமது ஹீரோவாக நடித்து வந்தார். மேலும் இதில் ஆனந்த் பாபு, ஷ்யாம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியல் ஆரம்பத்தில் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வந்தது. அதன் பின்னர் இந்த சீரியலை மதியம் 3 மணிக்கு மாற்றினார்கள்.
பூங்காற்று திரும்புமா சீரியல் கிளைமாக்ஸ்
நேரம் மாற்றத்துக்கு பின்னர் பூங்காற்று திரும்புமா சீரியலின் டிஆர்பி ரேட்டிங் மளமளவென குறைந்தது. இதன் காரணமாக தற்போது அந்த சீரியலை முடிவுக்கு கொண்டுவர முடிவெடுத்துள்ளார்களாம். அந்த சீரியலின் கிளைமாக்ஸ் தற்போது படமாக்கப்பட்டு வருகிறதாம். ஜனவரி மாதம் பூங்காற்று திரும்புமா சீரியல் முடிவடைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த சீரியலின் முடிவுக்கு பின்னர் புது சீரியலை களமிறக்கவும் விஜய் டிவி திட்டமிட்டுள்ளது. நடிகை ஷோபனா நடிப்பில் இந்த ஆண்டு ஏற்கனவே ஒரு சீரியல் முடிவடைந்த நிலையில், இரண்டாவது சீரியலாக பூங்காற்று திரும்புமா தொடரும் முடிவுக்கு வர உள்ளது.
ஷோபனா ரசிகர்கள் ஏமாற்றம்
முன்னதாக நடிகை ஷோபனா நடிப்பில் இந்த ஆண்டு தொடங்கப்பட்ட மற்றொரு சீரியலான மீனாட்சி சுந்தரம், தொடங்கப்பட்ட 100 நாட்களிலேயே முடிவுக்கு வந்தது. அந்த சீரியல் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்தது. அந்த சீரியலும் பூங்காற்று திரும்புமா சீரியல் தொடங்கிய அதே நாளில் தான் தொடங்கப்பட்டது. இப்படி ஷோபனா நடித்த இரண்டு சீரியல்கள் அடுத்தடுத்து முடிவடைந்து உள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். விரைவில் ஒரு சூப்பர் ஹிட் சீரியலுடன் ஷோபனா கம்பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

