- Home
- Cinema
- தொலைக்காட்சி
- அதிக வியூஸ்களை வாரிசுருட்டிய சன் டிவி, ஜீ தமிழ், விஜய் டிவியின் டாப் 5 சீரியல்கள் என்னென்ன?
அதிக வியூஸ்களை வாரிசுருட்டிய சன் டிவி, ஜீ தமிழ், விஜய் டிவியின் டாப் 5 சீரியல்கள் என்னென்ன?
சன் டிவி, விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சி ஆகியவற்றில் அதிக வியூஸ்களை பெற்ற டாப் 5 சீரியல்களையும், அதற்கு கிடைத்துள்ள டிஆர்பி ரேட்டிங்கையும் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Top 5 Most Watched Tamil Serials
சினிமாவை விட மக்கள் விரும்பி பார்க்கும் களமாக சின்னத்திரை மாறி வருகிறது. சினிமா நிகரான விறுவிறுப்போடும், ட்விஸ்டுகளோடும் ஒளிபரப்பாகி வருவதால் சின்னத்திரை சீரியல்களை மக்கள் ஆர்வத்துடன் பார்க்கின்றனர். இதனால் சீரியல்களுக்கான டிஆர்பி ரேட்டிங்கும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் 2025-ம் ஆண்டின் 50வது வார நிலவரப்படி, சன் டிவி, விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சி ஆகியவற்றில் மக்களால் அதிகம் விரும்பிப் பார்க்கப்பட்ட டாப் 5 சீரியல்கள் என்னென்ன என்பதை இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
சன் டிவி டாப் 5 சீரியல்கள்
சன் டிவியில் அதிகம் பார்க்கப்பட்ட சீரியல்கள் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் உள்ளது. இந்த சீரியல் 8.57 டிஆர்பி ரேட்டிங் உடன் 5-ம் இடத்தில் உள்ளது. இதற்கு அடுத்தபடியாக மருமகள் சீரியல் 8.67 புள்ளிகளுடன் 4-ம் இடத்தை பிடித்திருக்கிறது. சைத்ரா ரெட்டி நடித்த கயல் சீரியல் மூன்றாம் இடத்தில் உள்ளது. இந்த சீரியலுக்கு 9.07 புள்ளிகள் கிடைத்துள்ளன. இதையடுத்து இரண்டாம் இடத்தில் சிங்கப்பெண்ணே சீரியல் உள்ளது. அந்த சீரியல் 9.89 புள்ளிகள் பெற்றுள்ளது. முதலிடத்தை மூன்று முடிச்சு சீரியல் பிடித்திருக்கிறது. அதற்கு 10.34 டிஆர்பி ரேட்டிங் கிடைத்துள்ளது.
டாப் 5 விஜய் டிவி சீரியல்கள்
விஜய் டிவியில் அதிக வியூஸ் அள்ளிய சீரியல்கள் பட்டியலில் முதலிடத்தை அய்யனார் துணை சீரியல் பிடித்துள்ளது. அந்த சீரியலுக்கு 8.42 புள்ளிகள் கிடைத்துள்ளன. இதையடுத்து 8.00 டிஆர்பி ரேட்டிங் உடன் சிறகடிக்க ஆசை சீரியல் இரண்டாம் இடத்தில் உள்ளது. மூன்றாவது இடத்தை பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் பிடித்திருக்கிறது. அந்த சீரியலுக்கு 7.79 புள்ளிகள் கிடைத்துள்ளன. சின்ன மருமகள் சீரியல் 6.37 டிஆர்பி ரேட்டிங் உடன் நான்காம் இடத்தில் உள்ளது. ஐந்தாம் இடத்தில் சிந்து பைரவி சீரியல் உள்ளது. இந்த சீரியலுக்கு 4.82 டிஆர்பி ரேட்டிங் கிடைத்துள்ளது.
ஜீ தமிழ் டாப் 5 தொடர்கள்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் அதிக வியூஸ்களை வாரிசுருட்டிய டாப் 5 சீரியல்கள் பட்டியலில் ஐந்தாம் இடத்தில் அண்ணா சீரியல் உள்ளது. அந்த சீரியல் 4.88 புள்ளிகளை பெற்றுள்ளது. இதன்பின்னர் நான்காம் இடத்தை ஆல்யா மானசாவின் பாரிஜாதம் சீரியல் பிடித்திருக்கிறது. அந்த சீரியலுக்கு 4.96 டிஆர்பியை பெற்றிருக்கிறது. இதற்கு அடுத்தபடியாக 4.99 புள்ளிகள் உடன் திருமாங்கல்யம் சீரியல் மூன்றாம் இடத்தில் உள்ளது. இரண்டாம் இடத்தை அயலி சீரியல் பிடித்துள்ளது. அந்த சீரியலுக்கு 5.26 புள்ளிகள் கிடைத்துள்ளன. முதலிடத்தில் உள்ள கார்த்திகை தீபம் சீரியல் 5.96 புள்ளிகள் பெற்றிருக்கிறது.

