- Home
- Cinema
- தொலைக்காட்சி
- சன் டிவி vs விஜய் டிவி : டிஆர்பி வேட்டையில் யார் டாப்பு? இந்த வார டாப் 10 சீரியல் பட்டியலில் அதிரடி மாற்றம்
சன் டிவி vs விஜய் டிவி : டிஆர்பி வேட்டையில் யார் டாப்பு? இந்த வார டாப் 10 சீரியல் பட்டியலில் அதிரடி மாற்றம்
சன் டிவி மற்றும் விஜய் டிவி போட்டிபோட்டு சீரியல்களை ஒளிபரப்பி வரும் நிலையில், 2025-ம் ஆண்டின் 48-வது வாரத்திற்கான டாப் 10 தமிழ் சீரியல்களின் டிஆர்பி நிலவரம் வெளியாகி உள்ளது.

This Week Top 10 Tamil Serial TRP Rating
சின்னத்திரையில் டிஆர்பி வைத்து தான் ஒரு சீரியலோ அல்லது நிகழ்ச்சிகளின் வெற்றி, தோல்விகள் முடிவு செய்யப்படுகின்றன. இந்த டிஆர்பி ரேட்டிங் வார வாரம் வியாழக்கிழமை வெளியிடப்படும். அதில் சின்னத்திரையில் அதிக பார்வைகளை பெற்ற டாப் 10 சீரியல்கள் பட்டியல் பிரத்யேகமாக வெளியாகும். அந்த வகையில் 2025-ம் ஆண்டின் 48-வது வாரத்திற்கான டாப் 10 தமிழ் சீரியல்களின் டிஆர்பி ரேட்டிங் விவரம் வெளியாகி இருக்கின்றன.
சின்ன மருமகள்
விஜய் டிவியின் சின்ன மருமகள் சீரியல் கடந்த வாரத்தை போல் இந்த வாரமும் 10-வது இடத்தை தக்க வைத்து உள்ளது. இந்த சீரியல் கடந்த வாரம் 7.22 டிஆர்பி ரேட்டிங்கை பெற்றிருந்தது. ஆனால் இந்த வாரம் 7.55 புள்ளிகளை பெற்றுள்ளது. இது கடந்த வாரத்தைக் காட்டிலும் அதிகமாகும்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
ஸ்டாலின் மற்றும் நிரோஷா நடிப்பில் விஜய் டிவியில் வெற்றிநடை போட்டு வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் கடந்த வாரம் 7.62 புள்ளிகளுடன் 8-வது இடத்தில் இருந்த நிலையில், இந்த வாரம் ஒரு இடம் பின்னுக்கு தள்ளப்பட்டு 9-வது இடத்தில் உள்ளது. இந்த வாரம் இந்த சீரியலுக்கு 7.91 புள்ளிகள் கிடைத்துள்ளன.
அய்யனார் துணை
கடந்த சில வாரங்களாக சிறகடிக்க ஆசை சீரியலை ஓவர்டேக் செய்து முன்னிலை வகித்து வந்த அய்யனார் துணை சீரியல், இந்த வாரம் 8-வது இடத்துக்கு தள்ளப்பட்டு இருக்கிறது. கடந்த வாரம் 6-வது இடத்தில் இருந்த இந்த சீரியலுக்கு 8.41 புள்ளிகள் கிடைத்திருந்தது. ஆனால் அது இந்த வாரம் 8.28 ஆக சரிந்துள்ளது.
சிறகடிக்க ஆசை
விஜய் டிவியின் பிரைம் டைம் சீரியலான சிறகடிக்க ஆசை கடந்த வாரத்தை போல் இந்த வாரமும் 7-ம் இடத்தை தக்க வைத்து உள்ளது. இந்த சீரியல் கடந்த வாரம் 8.38 புள்ளிகளையும் இந்த வாரம் 8.41 புள்ளிகளையும் பெற்றிருக்கிறது.
அன்னம்
எஞ்சியுள்ள 6 இடங்களையும் சன் டிவி சீரியல்கள் தான் ஆக்கிரமித்து உள்ளன. அதன்படி 6-வது இடத்தில் அன்னம் சீரியல் உள்ளது. இந்த சீரியலுக்கு கடந்த வாரம் 8.41 புள்ளிகளும், இந்த வாரம் 8.51 டிஆர்பி ரேட்டிங்கும் கிடைத்திருக்கிறது.
மருமகள்
கேபி நடிப்பில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மருமகள் சீரியல் கடந்த வாரத்தைக் காட்டிலும் இந்த வாரம் சற்று சரிவை சந்தித்து உள்ளது. கடந்த வாரம் 8.55 புள்ளிகள் உடன் 4-ம் இடத்தில் இருந்த இந்த சீரியல், இந்த வாரம் 8.99 டிஆர்பி உடன் 5-ம் இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளது.
கயல்
சன் டிவியின் கயல் சீரியலும் டாப் 10 பட்டியலில் பின்னுக்கு தள்ளப்பட்டு இருக்கிறது. கடந்த வாரம் 9.09 புள்ளிகள் உடன் மூன்றாம் இடத்தில் இருந்த இந்த சீரியல், இந்த வாரம் 9.36 டிஆர்பி ரேட்டிங் பெற்றும் 4-ம் இடத்துக்கு பின் தங்கி உள்ளது.
எதிர்நீச்சல் தொடர்கிறது
சன் டிவியின் மற்றுமொரு பிரைம் டைம் சீரியலான எதிர்நீச்சல் தொடர்கிறது, தற்போது விறுவிறுப்பான கட்டத்தை நெருங்கி இருப்பதால் அதற்கான டிஆர்பி ரேட்டிங்கும் அதிகரித்துள்ளது. அதன்படி கடந்த வாரம் 8.44 புள்ளிகள் உடன் 5-ம் இடத்தில் இருந்த இந்த சீரியல், இந்த வாரம் 9.41 புள்ளிகள் உடன் 3-ம் இடத்திற்கு ஜம்ப் ஆகி உள்ளது.
சிங்கப்பெண்ணே
மனிஷா மகேஷ் நடிப்பில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர் தான் சிங்கப்பெண்ணே. கடந்த வாரம் 9.19 புள்ளிகள் உடன் 2ம் இடத்தை பிடித்திருந்த இந்த சீரியல், இந்த வாரம், 9.67 புள்ளிகளைப் பெற்று அதே இடத்தில் நீடித்து வருகிறது.
மூன்று முடிச்சு
வழக்கம்போல் சன் டிவியின் சூப்பர் ஹிட் சீரியலான மூன்று முடிச்சு இந்த வாரமும் முதலிடத்தை தக்கவைத்து இருக்கிறது. கடந்த வாரம் 9.65 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்த இந்த சீரியல், இந்த வாரம் 10.62 புள்ளிகள் உடன் அதே இடத்தில் நீடிக்கிறது.

