- Home
- Cinema
- தொலைக்காட்சி
- சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர் கைது.. போலீசை எதிர்த்து கேள்வி கேட்டதால் நடவடிக்கை..!
சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர் கைது.. போலீசை எதிர்த்து கேள்வி கேட்டதால் நடவடிக்கை..!
விஜய் டிவி சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஸ்ரீ தேவா என்பவரை போலீசார் கைது செய்துள்ள வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Siragadikka Aasai Serial Actor Arrested
விஜய் டிவியில் சக்கைப்போடு போட்டு வரும் பிரைம் டைம் சீரியல்களில் ஒன்று தான் சிறகடிக்க ஆசை. இந்த சீரியல் கடந்த 2023ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகிறது. 850 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த சீரியல் தான் சிட்டிகளில் அதிகம் பார்க்கப்படும் சீரியலாக உள்ளது. இந்த சீரியலுக்கு இளசுகள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். விஜய் டிவியில் அதிக டிஆர்பி ரேட்டிங்கை பெறும் சீரியலாக சிறகடிக்க ஆசை சீரியல் அமைந்துள்ளது. இந்த நிலையில், இந்த சீரியலில் நடிக்கும் ஸ்ரீதேவா தன்னை போலீசார் கைது செய்யும் வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
போலீசிடம் வாக்குவாதம் செய்த ஸ்ரீதேவா
சிறகடிக்க ஆசை சீரியல் நாயகன் முத்துவின் அண்ணனாக மனோஜ் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் ஸ்ரீதேவா. அந்த சீரியலில் நகைச்சுவை கலந்த கதாபாத்திரத்தில் தன்னுடைய நடிப்பால் அனைவரையும் கவரும் ஸ்ரீதேவா, தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் போட்டுள்ள வீடியோவில், ரொம்ப நேரமாக தன்னுடைய வீட்டின் அருகே நடு ரோட்டில் போலீஸ் ஜீப் ஒன்ற் நிற்பதாகவும், அவர்கள் எதற்காக இங்கு நிற்கிறார்கள் என்பதையும் அவர்களிடையே கேட்டு தெரிந்துகொள்வோம் என கூறிவிட்டு அந்த போலீஸ் ஜீப் அருகே செல்கிறார். அப்போது அதில் அமர்ந்திருந்த போலீஸ் ஒருவரிடம் எதுக்கு இங்க நிக்குறீங்க என கேட்கிறார்.
நடுரோட்டில் சண்டைபோட்ட ஸ்ரீதேவா
அதற்கு அந்த போலீஸ், டேய் யார்ரா நீ இது ஏன் ஏரியா.. இங்க பிரச்சனை போயிட்டு இருக்கு. நீபாட்டு வந்துகிட்டு கேக்குற, போடா என சொல்கிறார். இதனால் டென்ஷன் ஆன ஸ்ரீதேவா, என்ன பிரச்சனைனு சொன்னீங்கனா நானும் தெரிஞ்சுப்பேன்ல, நானும் இந்த ஏரியாக்காரன் தான். நீங்க சொன்னா நாங்களும் அலர்டா இருப்போம்ல என எகிறுகிறார். அதற்கு அந்த போலீஸ் மரியாதையா இங்க இருந்து போயிடு என சொல்ல, அவரை செல்ல விடாமல் தடுக்கும் ஸ்ரீதேவா, நடுரோட்ல வண்டிய நிப்பாட்டி வச்சிருக்கீங்கனு தான் கேக்குறோம். நீங்க ஓரமா வண்டிய நிப்பாட்டுனா நாங்க ஏன் கேட்க போறோம்.
ஸ்ரீ தேவாவை கைது செய்த போலீஸ்
எங்களுக்கென்ன வேலையைவிட்டுட்டு வந்து உங்ககிட்ட கேட்கணும்னு எதாவது அவசியமா... என ஸ்ரீதேவா கேட்டதும், பொருமை இழந்த போலீஸ், அவனை அரெஸ்ட் பண்ண சொல்கிறார். இதையடுத்து காரில் இருந்து இறங்கி வரும் போலீஸ் இது ஏன் ஏரியா என சொல்ல, அதற்கு ஸ்ரீ தேவாவும் இது என் வீடு, வேறுயாரு கேப்பாங்க என சொல்கிறார். உடனே கடுப்பான அந்த போலீஸ், இவனை தூக்கி உள்ள ஏத்துங்க என சொல்ல, அங்கிருந்த சக போலீசார் ஸ்ரீ தேவாவை குண்டுக்கட்டாக தூக்கி ஜீப்பில் ஏற்றுகிறார்கள். இந்த வீடியோ இணையத்தில் செம வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த ரசிகர்கள், இது உண்மை அல்ல பிராங்க் என்பது அப்பட்டமாக தெரிவதாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.

