- Home
- Cinema
- தொலைக்காட்சி
- கிரிஷ் மீது பாசமழை பொழியும் மனோஜ்... ரோகிணி ஹேப்பி; விஜயாவுக்கு ஏறும் பிபி - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
கிரிஷ் மீது பாசமழை பொழியும் மனோஜ்... ரோகிணி ஹேப்பி; விஜயாவுக்கு ஏறும் பிபி - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
சிறகடிக்க ஆசை சீரியலில் கிரிஷ் மீது திடீரென அன்பை பொழிகிறார் மனோஜ். இதைப்பார்த்த ரோகிணிக்கு மனசு குளிர்கிறது. ஆனால் விஜயாவுக்கு செம டென்ஷன் ஆகிறது. இதன்பின் என்ன ஆனது என்பதை பார்ப்போம்.

Siragadikka Aasai Serial Today Episode
சிறகடிக்க ஆசை சீரியலில் மீனாவை ரியாலிட்டி ஷோ ஒன்றில் ஜோடியாக கலந்துகொள்ள அழைக்கிறார் முத்து. ஆனால் மீனா வரவே முடியாது என முரண்டு பிடித்ததால், வேறுவழியின்றி அந்த ஷோவுக்கு போகும் முடிவை கைவிடுகிறார் முத்து. இதையடுத்து செம சந்தோஷத்தில் வீட்டுக்கு வரும் மனோஜ், ரோகிணியை கட்டிப்பிடித்து தான் ரொம்ப ஹேப்பியாக இருப்பதாக கூறுகிறார். தற்போது சீர்வரிசை ஆர்டர் அதிகளவில் வருவதாகவும் அதனால் பிசினஸ் டெவலப் ஆகி இருப்பதாகவும் மனோஜ் கூறுகிறார். இதையெல்லாம் கேட்டு சந்தோஷப்படாமல் ரோகிணி சைலண்டாகவே இருக்கிறார்.
கல்யாணியாக மாறிய ரோகிணி
பின்னர் மனோஜை திரும்பி பார்த்து முறைக்கிறார் ரோகிணி. என்ன ஆச்சு ரோகிணி என அவர் கேட்டதும், நான் ரோகிணி இல்லடா கல்யாணி என சொல்கிறார். நான் தான் கிரிஷோட அம்மா என கூறுகிறார். பின்னர் தான் ரோகிணி உடம்பில் கிரிஷின் ரியல் அம்மா கல்யாணியின் ஆவி புகுந்ததை கண்டுபிடிக்கிறார் மனோஜ். கல்யாணியின் ஆவியாக மாறி மனோஜுக்கு பல கண்டிஷன் போடுகிறார் ரோகிணி. அதன்படி தன் மகன் கிரிஷ் மீது நீ பாசமாக நடந்துகொள்ள வேண்டும் என்றும், அவன் தற்போது பசியில் இருப்பதால் அவனுக்கு நீ சாப்பாடு ஊட்டிவிடு எனவும் கூறுகிறார் ரோகிணி.
மனோஜ் கொடுத்த அதிர்ச்சி
பேய்க்கு பயந்து, வெளியே செல்லும் மனோஜ், கிரிஷை அழைத்து சாப்பிட்டியா என கேட்கிறார். அவன் இல்லை என்றதும், சரி வா உனக்கு நானே சாப்பாடு ஊட்டி விடுறேன் என சொல்லி அவனுக்கு இட்லி ஊட்டிவிடுகிறார். இதைப்பார்த்த ரோகிணி, ஸ்ருதி, ரவி மற்றும் முத்து அனைவரும் ஷாக் ஆகிறார்கள். அப்போது அங்கு எண்ட்ரி கொடுக்கும் விஜயா, மனோஜின் செயலை பார்த்து செம கடுப்பாகிறார். என்னடா பண்ணிகிட்டு இருக்க, என கேட்க அதற்கு அவன் பசியில் இருந்ததால் அவனுக்கு இட்லி ஊட்டி விடுகிறேன் என சொல்கிறார். எதற்காக இப்படி செய்யுற என மனோஜிடம் விஜயா கேட்கிறார்.
டென்ஷனில் விஜயா
அதற்கு அவர் தான் கோவிலுக்கு சென்றதாகவும், அங்கு ஒரு சாமியார், பசியில் இருக்கும் குழந்தைக்கு ஊட்டிவிட்டால், பிசினஸ் நல்லா டெவலப் ஆகும் என சொன்னதால் இதைச் செய்வதாக சொல்கிறார். அதைக்கேட்ட முத்து, இப்பவும் நீ பிசினஸுக்காக தான் இப்படி செய்யுறியா, பாசத்துனால இல்லையா என கேட்கிறார். எவனோ ஏதாவது சொன்னா அதை அப்படியே நம்பிடுவியா நிறுத்துடா என விஜயா காட்டமாக சொல்ல, அதற்கு மீனா, முத்து பதிலடி கொடுக்கிறார்கள். இதையடுத்து கோபத்தில் அங்கிருந்து கிளம்புகிறார் விஜயா. இதன்பின் என்ன நடந்தது என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.

