MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • பாண்டியன் ஸ்டோர்ஸ் 2-ம் பாகம் வந்தாச்சு... சுஜிதாவை நீக்கிவிட்டு 90ஸ் ஹீரோயினை களமிறக்கிய விஜய் டிவி

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2-ம் பாகம் வந்தாச்சு... சுஜிதாவை நீக்கிவிட்டு 90ஸ் ஹீரோயினை களமிறக்கிய விஜய் டிவி

விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் முதல் பாகம் முடிவுக்கு வந்ததை அடுத்து அதன் இரண்டாம் பாகத்துக்கான புரோமோ வெளியாகி உள்ளது.

2 Min read
Ganesh A
Published : Oct 15 2023, 08:44 AM IST| Updated : Oct 15 2023, 08:45 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
pandian stores

pandian stores

விஜய் டிவியில் பிளாக்பஸ்டர் ஹிட் ஆன சீரியல்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலும் ஒன்று. கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சீரியல் அண்ணன் - தம்பி பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. இதில் நடிகர் ஸ்டாலின், மூர்த்தி என்கிற முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக நடிகை சுஜிதா தனுஷ் நடித்திருந்தார். மூர்த்தியின் சகோதரர்களாக வெங்கட், குமரன், சரவண விக்ரம் ஆகியோர் நடித்திருந்தனர்.

24
Pandian Stores 1

Pandian Stores 1

அதேபோல் வெங்கட்டுக்கு ஜோடியாக மீனா கதாபாத்திரத்தில் ஹேமாவும், குமரன் நடித்த கதிர் கதாபாத்திரத்திற்கு ஜோடியாக முல்லை என்கிற ரோலில் முதலில் விஜே சித்ரா நடித்து வந்தார். அவர் நடித்தவரை இந்த சீரியல் டிஆர்பியில் சக்கைப்போடு போட்டது. கடந்த 2020-ம் ஆண்டு அவர் தற்கொலை செய்துகொண்டதை அடுத்து இந்த சீரியல் டல் அடிக்க தொடங்கியது. பின்னர் அந்த கேரக்டரில் காவ்யா நடித்தார். பின்னர் அவரும் விலகியதை அடுத்து கடைசியாக லாவண்யா நடித்தார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

34
Pandian stores serial

Pandian stores serial

இப்படி குடும்ப பாசத்தையும், கூட்டுக் குடும்பத்தின் முக்கியத்துவத்தையும் உணர்த்தும் விதமாக அமைந்திருந்த இந்த சீரியல் கடந்த 5 ஆண்டுகளாக சக்கைப்போடு போட்டு வந்தது. இந்நிலையில், தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முடிவுக்கு வந்துள்ளது. அந்த சீரியல் முடிந்த கையோடு, அதன் இரண்டாம் பாகத்தை ஆரம்பித்துள்ளனர். இதற்கான புரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

44
pandian stores 2

pandian stores 2

பாண்டியன் ஸ்டோர்ஸ் இரண்டாம் பாகத்தில் ஸ்டாலின் தவிர மற்ற அனைவருமே மாற்றப்பட்டு உள்ளனர். ஸ்டாலின் வழக்கம்போல் மூர்த்தியாக நடிக்க, அவருக்கு ஜோடியாக 90-களில் கலக்கிய நடிகை நிரோஷா நடிக்கிறார். முதல் பாகம் அண்ணன் தம்பி பாசத்தை மையமாக வைத்து உருவானதை போல் அதன் இரண்டாம் பாகத்தை தந்தை மகன் பாசத்தை மையமாக வைத்து உருவாக்க உள்ளனர். இதில் மூர்த்தியின் மகன்களாக 3 பேர் நடிக்கின்றனர். இந்த சீசன் விரைவில் தொடங்க உள்ளது.

இதையும் படியுங்கள்... ஐயப்பனும் கோஷியும்.. தமிழில் ரீமேக் செய்ய ஆசைப்பட்டேன்.. அதுவும் அந்த இரு தமிழ் நடிகர்களை வைத்து - லோகேஷ்!

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved