ஐயப்பனும் கோஷியும்.. தமிழில் ரீமேக் செய்ய ஆசைப்பட்டேன்.. அதுவும் அந்த இரு தமிழ் நடிகர்களை வைத்து - லோகேஷ்!
Ayyappanum Koshiyum : கடந்த 2020 ஆம் ஆண்டு மலையாள மொழியில் வெளியாகி மாபெரும் ஹிட்டான திரைப்படம் தான் ஐயப்பனும் கோஷியும். 2022ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட தேசிய விருது வழங்கும் விழாவில், சிறந்த இயக்குனர் உட்பட நாலு தேசிய விருதுகளை இந்த திரைப்படம் வென்றது குறிப்பிடப்பட்டது.
Prithviraj
பிரபல மலையாள நடிகர்கள் பிஜு மேனன் மற்றும் பிரித்திவிராஜ் ஆகிய இருவரும் நடித்து, சச்சி என்பவருடைய இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் இந்திய திரை உலகில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது என்றால் அது நிச்சயம் மிகையல்ல. இரு வெவ்வேறு குணாதிசயங்கள் கொண்ட கதாபாத்திரங்களுக்கு இடையே நடக்கும் ஒரு மிக அழகான கதையாக இது அமைக்கப்பட்டது.
Director Lokesh Kanagaraj
பல்வேறு மொழிகளில் இந்த திரைப்படத்தை எடுக்கவும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த திரைப்படம் குறித்த ஒரு சுவாரசியமான தகவலை பகிர்ந்து இருந்தார் லோகேஷ் கனகராஜ். லியோ திரைப்பட ப்ரோமோஷன் பணிகளுக்காக பல இடங்களுக்கு சென்று வரும் லோகேஷ் கனகராஜ், ஐயப்பனும் கோஷியும் பற்றி பேசியுள்ளார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
Karthi and Suriya
அதில், தமிழில் இந்த திரைப்படத்தை ரீமேக் செய்ய தான் விரும்பியதாகவும், அதில் சூர்யா மற்றும் அவருடைய தம்பி நடிகர் கார்த்தி ஆகிய இருவரையும் நடிக்க வைக்க முடிவு செய்ததாகவும் அவர் கூறியுள்ளார். ஆனால் அதன் பிறகு பல்வேறு பணிகள் காரணமாக அந்த திரைப்படம் அப்படியே கிடப்பில் போடப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். மீண்டும் அந்த திரைப்படத்தை அவர் கையில் எடுப்பாரா என்பது லோகேஷ் கனகராஜ் அவர்களுக்கு மட்டுமே வெளிச்சம்.