- Home
- Cinema
- தொலைக்காட்சி
- நாங்க காதலிச்சு கல்யாணம்லாம் பண்ணல... அவன் ஒரு ஃபிராடு..! விஜய் டிவி சீரியல் நடிகை ஸ்வேதா குமுறல்
நாங்க காதலிச்சு கல்யாணம்லாம் பண்ணல... அவன் ஒரு ஃபிராடு..! விஜய் டிவி சீரியல் நடிகை ஸ்வேதா குமுறல்
விஜய் டிவி சின்ன மருமகள் சீரியல் ஹீரோயின் ஸ்வேதா, தனது பெயரை பயன்படுத்தி ஒருவர் கட்டுக்கதைகளை சொல்லி வருவதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்து உள்ளார்.

Chinna Marumagal Swetha Shocking Allegation
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள் சீரியலில் நாயகியாக நடித்து வருபவர் ஸ்வேதா. இவரின் காதலர் எனக்கூறி ஆதி என்கிற நபர் யூடியூப் சேனல்களுக்கு பேட்டியளித்து வந்தார். அவர் தனக்கும் ஸ்வேதாவுக்கு கடந்த 2023-ம் ஆண்டே பதிவுத் திருமணம் ஆகிவிட்டதாகவும் இருவரும் அதை வெளியிடாமல் சீக்ரெட்டாக வைத்திருந்ததாகவும் கூறி இருந்தார். அவரின் இந்த பேட்டி வைரலான நிலையில், நடிகை ஸ்வேதா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் அந்த நபர் ஒரு ஃபிராடு என்றும் அவருக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.
ஸ்வேதாவின் இன்ஸ்டா பதிவு
ஸ்வேதா போட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது: “ஒரு விஷயத்தை மிகவும் தெளிவாகச் சொல்ல விரும்புகிறேன். ஒரு குறிப்பிட்ட நபர், தன்னை எனது கணவர் என்று பொது இடங்களில் கூறி வருகிறார். அவர் ஒரு ஃபிராடு என்பதைத் தெரியப்படுத்த விரும்புகிறேன். அவருக்கு எதிராக ஏற்கனவே பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, மேலும் காவல்துறை அவரை தேடி வருகின்றது.
அவர் சமீபத்தில் என் பெயரை பயன்படுத்தி, நாங்கள் காதலித்து திருமணம் செய்துகொண்டோம் என்று பொய்யான கதையை ஒரு பேட்டியில் கூறியுள்ளார். துரதிர்ஷ்டவசமாக, நான் அவரை மிகவும் நம்பியிருந்தேன், ஆனால் பின்னர் தான் அவரது உண்மையான முகம் மற்றும் குற்றச் செயல்கள் குறித்து அறிந்தேன்.
சட்ட நடவடிக்கை எடுக்கும் ஸ்வேதா
தற்போது அவர் என்னுடைய எதிர்காலத்தை கெடுக்காமல் இருக்க தேவையான அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறேன். நாங்கள் முழுவதுமாக பிரிந்து விட்டோம். இருப்பினும், என் அனுமதி இன்றி, அவர் என்னுடைய புகைப்படங்களையும் வீடியோக்களையும் சமூக ஊடகங்களிலும், பேட்டிகளிலும் பயன்படுத்தி, நாங்கள் இன்னும் சேர்ந்து இருப்பதாகக் காட்டி, தவறான கதை கட்டுகிறார். இதன் மூலம், அவர் மக்களிடையே பரிதாபத்தைப் பெறவும், என் நல்ல பெயரை கெடுக்கவும் முயல்கிறார்.
எனக்கு அவருடன் இனி எந்தவிதமான தொடர்பும் இல்லை. மேலும், யார் இவருக்கு ஆதரவு அளித்தாலும் அல்லது என் பெயர், புகைப்படங்கள், படங்களை தவறாக பயன்படுத்த உதவினாலும், அவர்களுக்கும் எதிராக சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
ஸ்வேதா எச்சரிக்கை
என் மீது பழிபோட முயன்றாலும், உண்மையை மாற்றிப் பேசினாலும், அவர்களையும் நான் விடமாட்டேன். நான் மனதளவிலும் உடல் நிலைமையிலும் மிகவும் கஷ்டங்களை சந்தித்துள்ளேன். இவற்றை எல்லாம் தனியாக சமாளித்தாலும், இந்த கடினமான நேரத்தில் என் குடும்பம் எனக்கு துணையாக இருப்பதற்கு நான் நன்றியுள்ளவளாக இருக்கிறேன். ஆகையால், அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்: தேவையற்ற வதந்திகள் அல்லது நாடகங்களை ஊக்குவிக்காமல் இருக்கவும். என் நிலைமையைப் புரிந்துகொள்ளவும். உங்கள் ஆதரவுக்கு நன்றி” என குறிப்பிட்டுள்ளார்.