- Home
- Cinema
- தொலைக்காட்சி
- டிஆர்பி ரேஸில் விஜய் டிவி சீரியல்களை வாஷ் அவுட் பண்ணிய சன் டிவி தொடர்கள் - டாப் 10 சீரியல் லிஸ்ட் இதோ
டிஆர்பி ரேஸில் விஜய் டிவி சீரியல்களை வாஷ் அவுட் பண்ணிய சன் டிவி தொடர்கள் - டாப் 10 சீரியல் லிஸ்ட் இதோ
டிஆர்பி ரேஸில் கடந்த வாரம் சன் டிவி பின் வாங்கி இருந்த நிலையில், இந்த வாரம் விஜய் டிவி சீரியல்களை அடிச்சு தூக்கி அதிரடியாக முன்னேறி இருக்கிறது.

Top 10 Tamil Serial TRP Rating
சின்னத்திரை சீரியல்கள் சினிமாவுக்கு நிகரான பரபரப்புடனும், விறுவிறுப்புடனும் இருப்பதால் அதற்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சின்னத்திரை சீரியல்களை விரும்பிப் பார்க்க ஆரம்பித்துவிட்டனர். இதன்காரணமாக தற்போது வாரத்தின் 7 நாட்களும் சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள். சீரியல்களின் வெற்றியை தீர்மானிப்பது அதன் டிஆர்பி ரேட்டிங் தான். அந்த வகையில் 2025-ம் ஆண்டின் 32வது வாரத்திற்கான டாப் 10 தமிழ் சீரியல்களின் டிஆர்பி ரேட்டிங் நிலவரம் வெளியாகி உள்ளது. அதில் சில அதிரடி மாற்றங்களும் ஏற்பட்டு இருக்கிறது.
டாப் 10 ரேஸில் அதிரடி மாற்றம்
இந்த வாரத்திற்கான டாப் 10 தமிழ் சீரியல்களுக்கான டிஆர்பி ரேட்டிங்கில் 10வது இடத்தில் ராமாயணம் சீரியல் உள்ளது. சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலை பின்னுக்கு தள்ளி 10வது இடத்தை பிடித்துள்ளது. இந்த சீரியலுக்கு 7.07 டிஆர்பி ரேட்டிங் கிடைத்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக 9-வது இடத்தில் சின்ன மருமகள் சீரியல் உள்ளது. கடந்த வாரம் 6.68 புள்ளிகளுடன் 10-வது இடத்தில் இருந்த இந்த சீரியல் இந்த வாரம் ஒரு இடம் முன்னேறி 9-ம் இடத்தை பிடித்திருக்கிறது. இந்த சீரியலுக்கு 7.61 டிஆர்பி புள்ளிகளும் கிடைத்திருக்கிறது.
வாஷ் அவுட் ஆன விஜய் டிவி சீரியல்கள்
விஜய் டிவியை பொறுத்தவரை டிஆர்பியில் சக்கைப்போடு போடும் சீரியல்கள் என்றால் அது சிறகடிக்க ஆசை மற்றும் அய்யனார் துணை தான். இந்த இரண்டு சீரியல்களும் கடந்த வாரம் 5 மற்றும் 6வது இடத்தை பிடித்திருந்தன. ஆனால் இந்த வாரம் அதையெல்லாம் சன் டிவி சீரியல்கள் அடிச்சு துரத்தி உள்ளன. அதன்படி சிறகடிக்க ஆசை சீரியல் 8.34 புள்ளிகளுடன் 7-ம் இடத்திலும், அய்யனார் துணை சீரியல் 8.02 புள்ளிகளுடன் 8-ம் இடத்தையும் பிடித்துள்ளன. இந்த வாரம் டாப் 5 பட்டியலில் ஒரு விஜய் டிவி சீரியல் கூட இடம்பெறவில்லை. அதில் முதல் ஆறு இடங்களையும் சன் டிவி சீரியல்கள் ஆக்கிரமித்து உள்ளன.
தட்டிதூக்கிய சன் டிவி சீரியல்கள்
கடந்த வாரம் 7.88 புள்ளிகளுடன் 8-ம் இடத்தில் இருந்த சன் டிவியின் அன்னம் சீரியல், இந்த வாரம் கட கடவென முன்னேறி 8.61 புள்ளிகளுடன் 6-ம் இடத்தை பிடித்துள்ளது. அதேபோல் 8.11 புள்ளிகளுடன் கடந்த வாரம் 7ம் இடத்தை பிடித்திருந்த மருமகள் சீரியல் இந்த வாரம் கெத்தாக 5-ம் இடத்தை தட்டிதூக்கி இருக்கிறது. அந்த சீரியலுக்கு 8.81 டிஆர்பி புள்ளிகள் கிடைத்திருக்கிறது. அடுத்தபடியாக கடந்த வாரத்தை போல் இந்த வாரமும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் 4-ம் இடத்தில் நீடிக்கிறது. அந்த சீரியலுக்கு 8.91 டிஆர்பி ரேட்டிங் கிடைத்துள்ளது.
டாப் 3 சீரியல்களின் டிஆர்பி
வழக்கம்போல் சன் டிவியின் சிங்கப்பெண்ணே, மூன்று முடிச்சு மற்றும் கயல் ஆகிய சீரியல்கள் தான் இந்த வாரமும் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளது. இதில் மூன்றாவது இடத்தில் உள்ள கயல் சீரியலுக்கு 9.68 டிஆர்பியும், 2ம் இடத்தில் உள்ள மூன்று முடிச்சு சீரியலுக்கு 10.24 டிஆர்பியும், முதலிடத்தில் உள்ள சிங்கப்பெண்ணே சீரியலுக்கு 10.55 டிஆர்பி ரேட்டிங்கும் கிடைத்திருக்கிறது.