- Home
- Cinema
- தொலைக்காட்சி
- மகாநதி சீரியலை ஓட ஓட விரட்டிய சிந்து பைரவி... இந்த வார டாப் 5 விஜய் டிவி சீரியல்களின் டிஆர்பி நிலவரம் இதோ
மகாநதி சீரியலை ஓட ஓட விரட்டிய சிந்து பைரவி... இந்த வார டாப் 5 விஜய் டிவி சீரியல்களின் டிஆர்பி நிலவரம் இதோ
விஜய் டிவியில் இந்த வாரம் டாப் 5 இடம்பிடித்த சீரியல்களின் பட்டியலில் மகாநதி சீரியலை பின்னுக்கு தள்ளி சிந்து பைரவி சீரியல் மாஸ் காட்டி உள்ளது.

Top 5 Vijay TV Serials TRP Rating
சின்னத்திரை சீரியல்களை ஒளிபரப்புவதில் டாப்பாக இருப்பது சன் டிவி தான். அதற்கு செம டஃப் கொடுத்து வரும் சேனல் என்றால் அது விஜய் தொலைக்காட்சி தான். அதில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் விறுவிறுப்பான கதைக்களத்துடன் இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. விஜய் டிவி சீரியல்களின் டிஆர்பி நிலவரம் வார வாரம் வெளியிடப்படும். கடந்த வாரத்தைக் காட்டிலும் இந்த வாரம் வெளியாகி இருக்கும் டிஆர்பியில் மகாநதி சீரியல் டாப் 5 ரேஸில் இருந்து பின்னுக்கு தள்ளப்பட்டு இருக்கிறது. இந்த வாரம் எந்தெந்த சீரியல்கள் டாப் 5 இடம்பிடித்துள்ளன என்பதை பார்க்கலாம்.
டிஆர்பியில் தட்டிதூக்கிய சிந்து பைரவி
இந்த வாரம் டாப் 5 விஜய் டிவி சீரியல்களின் பட்டியலில் ஐந்தாவது இடத்தை சிந்து பைரவி சீரியல் பிடித்துள்ளது. திரவியம் ஹீரோவாக நடித்துள்ள இந்த சீரியல் கடந்த ஜனவரி மாதம் தொடங்கப்பட்டது. திங்கள் முதல் வெள்ளி வரை தினந்தோறும் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகும் சிந்து பைரவி சீரியல் இந்த வாரம் 4.92 புள்ளிகளுடன் ஐந்தாம் இடத்தை பிடித்துள்ளது. இந்த சீரியல் கடந்த வாரம் 4.08 புள்ளிகளை மட்டுமே பெற்றிருந்த நிலையில், இந்த வாரம் அதைவிட 0.92 புள்ளிகள் கூடுதலாக பெற்று முதன்முறையாக டாப் 5 பட்டியலில் இடம்பிடித்து இருக்கிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலை ஓவர்டேக் செய்த சின்ன மருமகள்
கடந்த வாரம் 3ம் இடத்தில் இருந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் இந்த வாரம் நான்காம் இடத்துக்கு தள்ளப்பட்டு இருக்கிறது. இதற்கு காரணம் சின்ன மருமகள் சீரியல் தான். அந்த சீரியல் கடந்த வாரம் 6.68 புள்ளிகளுடன் நான்காம் இடத்தில் இருந்த நிலையில், இந்த வாரம் 7.61 புள்ளிகளை பெற்று 3ம் இடத்துக்கு ஜம்ப் ஆகி இருக்கிறது. கடந்த வாரம் 6.71 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தில் இருந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் இந்த வாரம் வெறும் 6.38 புள்ளிகளை மட்டுமே பெற்று 4-ம் இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளது.
முதலிடத்தில் சிறகடிக்க ஆசை
வழக்கம்போல் விஜய் டிவியின் பிரைம் டைம் சீரியலான சிறகடிக்க ஆசை தான் இந்த வாரமும் முதலிடத்தை பிடித்திருக்கிறது. கடந்த வாரம் 8.46 புள்ளிகளை பெற்றிருந்த இந்த சீரியல், இந்த வாரம் 8.34 புள்ளிகளை பெற்றிருக்கிறது. டிஆர்பியில் சற்று சரிவை சந்தித்தாலும் முதலிடத்தை விட்டுக்கொடுக்கவில்லை. அதேபோல் கடந்த வாரம் 8.12 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தை பிடித்திருந்த அய்யனார் துணை சீரியல் இந்த வாரமும் அதே இடத்தில் நீடிக்கிறது. இந்த சீரியலுக்கு இந்த வாரம் 8.02 டிஆர்பி புள்ளிகள் கிடைத்திருக்கின்றன.