MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • Siragadikka Aasai : ரோகிணி வீட்டுக்குள் வந்ததும் வெடித்த பூகம்பம்... மனோஜுக்கு காத்திருக்கும் அடுத்த சிக்கல்!

Siragadikka Aasai : ரோகிணி வீட்டுக்குள் வந்ததும் வெடித்த பூகம்பம்... மனோஜுக்கு காத்திருக்கும் அடுத்த சிக்கல்!

Siragadikka Aasai Serial Twist : சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ், ரோகிணியை வீட்டிற்கு அழைத்து வந்ததை பார்த்த பாட்டி அவரிடம் சரமாரி கேள்விகளை கேட்டிருக்கிறார். அதைப்பற்றி பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Sep 09 2026, 04:58 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Siragadikka Aasai Serial Twist
Image Credit : jiohotstar

Siragadikka Aasai Serial Twist

சிறகடிக்க ஆசை சீரியலின் அடுத்தடுத்த காட்சிகள் ரசிகர்களுக்கு செம ட்விஸ்ட்டாக அமையப்போகிறது. கோர்ட் உத்தரவை அடுத்து, ரோகிணி மீண்டும் விஜயா வீட்டிற்கே வருவதால், வீட்டில் அடுத்தடுத்து பரபரப்பான சம்பவங்கள் அரங்கேற உள்ளன. ரோகிணி மனோஜின் வீட்டிற்கு வரவிருக்கும் நிலையில், அந்த விஷயம் குறித்து பாட்டிக்கு எதுவுமே தெரியாமல் இருக்கிறது. இதை சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் முத்துவும் மீனாவும், பாட்டியிடம் உண்மையை சொல்லாமல் வேறு ஒரு கதையை உருவாக்குகின்றனர்.

Siragadikka Aasai : ரோகிணியை நம்பி சிக்கலில் மாட்டிய மனோஜ்... முத்துவின் கையில் சிக்கிய முக்கிய ஆதாரம்!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
மனோஜுக்கு அறைவிட்ட பாட்டி
Image Credit : jiohotstar

மனோஜுக்கு அறைவிட்ட பாட்டி

அதாவது, மனோஜ் யாருக்கும் தெரியாமல் ரோகிணி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக பாட்டியை நம்ப வைக்கின்றனர். இதைக் கேட்டதும் கோபமடையும் பாட்டி, உடனே மனோஜை அழைத்து அவருடைய கன்னத்தில் அறைந்து, தனக்குத் தெரியாமல் திருமணம் செய்துகொண்டது ஏன் என்று கேட்கிறார். இதனால் மனோஜ் அதிர்ச்சியில் உறைந்து போகிறார். தான் ஏற்கனவே செய்திருக்கும் திருமண விஷயம் பாட்டிக்கு தெரிந்துவிட்டதோ என்ற பயமும் அவருக்கு வருகிறது. ஆனால் சிறிது நேரத்திலேயே பாட்டி சொல்வது ரோகிணியைப் பற்றிதான் என்பது மனோஜுக்கு புரிகிறது.

Siragadikka Aasai : மனோஜுக்கு அடித்த ஜாக்பாட்... விஜயாவுக்கு வந்த சந்தேகம்! அடுத்து என்ன நடக்கப்போகுது?

Related Articles

Related image1
Siragadikka Aasai : சிந்தாமணியின் சதி வலையில் சிக்கும் சத்யா... அருணுக்கு அதிர்ச்சி கொடுத்த சீதா..!
Related image2
Siragadikka Aasai : ரேகாவின் தந்தைக்கு ஹார்ட் அட்டாக்.... சீதாவுக்கு வந்த டவுட்; சிந்தாமணியின் சதி அம்பலமாகுமா?
34
ரோகிணியை வரவேற்ற விஜயா
Image Credit : jiohotstar

ரோகிணியை வரவேற்ற விஜயா

இதன் பின்னர்தான் முத்துவும் மீனாவும் தன்னை வைத்து விளையாடியிருப்பது மனோஜுக்கு தெரிய வருகிறது. இதனால் அவர்களுக்கிடையே மீண்டும் பிரச்சனை வெடிக்கும் சூழல் உருவாகிறது. இதற்கிடையில், ரோகிணி நேராக மனோஜை சந்திக்க வருகிறார். புதுமணத் தம்பதியாக வீட்டிற்கு வந்தபோது விஜயா எப்படி ஆரத்தி எடுத்து வரவேற்றாரோ, அதேபோல இப்போதும் வீட்டிற்குள் தங்களை வரவேற்க வேண்டும் என்று ரோகிணி கூறுகிறார். இதனால் வேறு வழியில்லாமல் விஜயாவும் இருவருக்கும் ஆரத்தி எடுத்து வீட்டிற்குள் அழைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்.

Siragadikka Aasai : பந்தா பண்ணும் சத்யா; அதிருப்தியில் மீனா... ரொமான்ஸ் பண்ணிய முத்துவுக்கு செம டோஸ் கொடுத்த பாட்டி

44
ரோகிணியை வம்பிழுத்த மீனா
Image Credit : jiohotstar

ரோகிணியை வம்பிழுத்த மீனா

பாட்டியின் முன்னிலையில் நடக்கும் இந்த வரவேற்பு காட்சியே வீட்டில் புதிய பரபரப்பை ஏற்படுத்துகிறது. ரோகிணி மற்றும் மனோஜ் வீட்டிற்குள் வந்தவுடன், மீனா வழக்கம்போல தனது நக்கல் பேச்சை ஆரம்பிக்கிறார். தேவையில்லாத பொருட்கள் வீட்டிற்குள் வந்துவிட்டதாக மறைமுகமாக ரோகிணியை கிண்டல் செய்யும் வகையில் அவர் பேசுகிறார். இதனால் ரோகிணி, மனோஜ், விஜயா, முத்து, மீனா என அனைவருக்கும் இடையே மீண்டும் மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. ரோகிணியின் இந்த வீட்டுக்குள் வருகை என்ன மாதிரியான பிரச்சனைகளை ஏற்படுத்தப் போகிறது? முத்து-மீனாவின் புது பிளான் எங்கே போய் முடியப் போகிறது? என்பதை அடுத்தடுத்த எபிசோடுகளில் பொறுத்திருந்து பார்க்கலாம்.

Siragadikka Aasai : முத்து, மீனாவிடம் இருந்து ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பித்த மனோஜ்... கிரிஷ் உடன் வந்து பிளாக்மெயில் பண்ணும் ரோகிணி

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சிறகடிக்க ஆசை

Latest Videos
Recommended Stories
Recommended image1
பிளாக் பாண்டி போல் முதல் வாரமே பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய போட்டியாளர்கள் யார்... யார்? முழு லிஸ்ட் இதோ
Recommended image2
Bigg Boss 10 : பிளாக் பாண்டிக்கு பதில் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்ற வைல்டு கார்டு போட்டியாளர் யார் தெரியுமா?
Recommended image3
Bigg Boss Nomination: ஊரோடு ஒத்துபோகனும்..சத்தம் மட்டும்தான் இருக்கு - பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு!
Related Stories
Recommended image1
Siragadikka Aasai : சிந்தாமணியின் சதி வலையில் சிக்கும் சத்யா... அருணுக்கு அதிர்ச்சி கொடுத்த சீதா..!
Recommended image2
Siragadikka Aasai : ரேகாவின் தந்தைக்கு ஹார்ட் அட்டாக்.... சீதாவுக்கு வந்த டவுட்; சிந்தாமணியின் சதி அம்பலமாகுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved