- Home
- Cinema
- தொலைக்காட்சி
- அதிகம் பார்க்கப்பட்ட டாப் 5 தமிழ் சீரியல்கள்... சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழில் லீடிங் யார்?
அதிகம் பார்க்கப்பட்ட டாப் 5 தமிழ் சீரியல்கள்... சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழில் லீடிங் யார்?
2026-ம் ஆண்டு சன் டிவி, விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் ஆகிய தொலைக்காட்சிகளில் அதிக வியூஸ் அள்ளிய டாப் 5 தமிழ் சீரியல்கள் என்னென்ன என்பதை இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

Top 5 Most Watched Tamil Serials
சின்னத்திரையில் சினிமாவை மிஞ்சும் அளவுக்கு விறுவிறுப்பான தொடர்கள் வரத் தொடங்கி உள்ளன. இதனால் சீரியல்கள் பார்ப்போரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் சன் டிவி, விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் ஆகிய சேனல்கள் போட்டி போட்டு சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது. அந்த வகையில் 2026-ம் ஆண்டு தமிழ்நாட்டில் அதிக வியூஸ்களை வாரிசுருட்டிய டாப் 5 சீரியல்களின் பட்டியல் வெளியாகி உள்ளது. அதில் என்னென்ன சீரியல்கள் இடம்பெற்றுள்ளன. அதற்கு எவ்வளவு வியூஸ் கிடைத்திருக்கின்றன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
டாப் 5 சன் டிவி சீரியல்கள்
சன் டிவியில் இந்த வாரம் அதிக வியூஸ்களை அள்ளிய சீரியல்கள் பட்டியலில் முதலிடத்தில் மூன்று முடிச்சு, சிங்கப்பெண்ணே மகா சங்கமம் உள்ளது. இதற்கு 99.58 டிஆர்பி ரேட்டிங் கிடைத்திருக்கிறது. இதையடுத்து இரண்டாம் இடத்தில் கயல் சீரியல் உள்ளது. அதற்கு 8.82 டிஆர்பி கிடைத்துள்ளது. மூன்றாம் இடத்தை மருமகள் சீரியல் பிடித்துள்ளது. அந்த சீரியலுக்கு 8.03 டிஆர்பி ரேட்டிங் கிடைத்துள்ளன. நான்காம் இடத்தில் உள்ள அன்னம் சீரியலுக்கு 7.96 டிஆர்பி ரேட்டிங் கிடைத்திருக்கிறது. ஐந்தாம் இடத்தை எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பிடித்துள்ளது. அதற்கு 7.55 புள்ளிகள் கிடைத்திருக்கின்றன.
விஜய் டிவியின் டாப் 5 சீரியல்கள்
விஜய் டிவியில் அதிக வியூஸ் அள்ளிய சீரியல்கள் லிஸ்ட்டில் ஐந்தாம் இடத்தில் அழகே அழகு சீரியல் உள்ளது. புதிதாக தொடங்கப்பட்டுள்ள இந்த சீரியலுக்கு 5.24 டிஆர்பி புள்ளிகள் கிடைத்துள்ளன. இதையடுத்து நான்காம் இடத்தில் சின்ன மருமகள் சீரியல் உள்ளது. அதற்கு 6.50 புள்ளிகள் கிடைத்துள்ளன. 3ம் இடத்தை பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் பிடித்திருக்கிறது. அந்த சீரியலுக்கு 7.15 டிஆர்பி ரேட்டிங் கிடைத்துள்ளது. அடுத்தபடியாக இரண்டாம் இடத்தில் சிறகடிக்க ஆசை சீரியல் உள்ளது. அதற்கு 8.04 புள்ளிகள் கிடைத்துள்ளன. முதலிடத்தை பிடித்துள்ள அய்யனார் துணை சீரியலுக்கு 8.48 புள்ளிகள் கிடைத்திருக்கின்றன.
டாப் 5 ஜீ தமிழ் சீரியல்கள்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் அதிக வியூஸ் அள்ளிய சீரியல்கள் பட்டியலில் முதலிடத்தில் கார்த்திகை தீபம் சீரியல் உள்ளது. அதற்கு 5.53 டிஆர்பி கிடைத்துள்ளது. இதையடுத்து இரண்டாவது இடத்தை அயலி - பாரிஜாதம் மகா சங்கமம் பிடித்துள்ளது. அதற்கு 5.24 டிஆர்பி ரேட்டிங் கிடைத்திருக்கிறது. மூன்றாம் இடத்தில் திருமாங்கல்யம் சீரியல் உள்ளது. அந்த சீரியல் 4.57 டிஆர்பி புள்ளிகளை பெற்றுள்ளது. இதையடுத்து நான்காம் இடத்தில் சின்னஞ்சிறு கிளியே சீரியல் உள்ளது. அந்த சீரியலுக்கு 4.29 புள்ளிகள் கிடைத்துள்ளன. ஐந்தாம் இடத்தில் வாகை சூட வா சீரியல் உள்ளது. அதற்கு 3.78 புள்ளிகள் கிடைத்திருக்கின்றன.

