- Home
- Cinema
- தொலைக்காட்சி
- சன் டிவி vs விஜய் டிவி : TRP கிங் யார்? இந்த வார டாப் 10 சீரியல்கள் பட்டியல் இதோ
சன் டிவி vs விஜய் டிவி : TRP கிங் யார்? இந்த வார டாப் 10 சீரியல்கள் பட்டியல் இதோ
டாப் 10 தமிழ் சீரியல்களின் டிஆர்பி விவரங்கள் வெளியாகி உள்ள நிலையில், இதில் முதலிடத்தில் உள்ள மூன்று முடிச்சு சீரியலை சிங்கப்பெண்ணே சீரியல் நெருங்கி உள்ளது. அதைப்பற்றி பார்க்கலாம்.

Top 10 Tamil Serial TRP Rating
தமிழ் தொலைக்காட்சி உலகில் வாரந்தோறும் வெளியாகும் TRP பட்டியல் ரசிகர்களின் விருப்பங்களையும், தொடர்களின் நிலைப்பாட்டையும் தெளிவாக வெளிப்படுத்துகிறது. கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், இந்த வாரத்தின் டாப் 10 பட்டியலில் சில முக்கியமான மாற்றங்கள் மற்றும் சுவாரஸ்யமான முன்னேற்றங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த வாரத்தில் எந்தெந்த தமிழ் சீரியல்கள் அதிக டிஆர்பி ரேட்டிங்கை பெற்று டாப் 10 பட்டியலில் இடம்பிடித்துள்ளன என்பதை விரிவாக பார்க்கலாம்.
முன்னேற்றம் அடைந்த சிங்கப்பெண்ணே
முதலிடத்தில் தொடர்ந்தும் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தி வருகிறது மூன்று முடிச்சு. கடந்த வாரம் 9.40 புள்ளிகள் பெற்றிருந்த இந்த தொடர், இந்த வாரம் 9.36 ஆக சற்றே குறைந்திருந்தாலும், இன்னும் முதலிடத்தை தக்க வைத்திருக்கிறது. இது அதன் நிலையான ரசிகர் ஆதரவை காட்டுகிறது. இரண்டாவது இடத்தில் இருக்கும் சிங்கப்பெண்ணே இந்த வாரம் குறிப்பிடத்தக்க உயர்வை பதிவு செய்துள்ளது. கடந்த வாரம் 8.48 இருந்தது, இந்த வாரம் 9.01 ஆக உயர்ந்து, முதலிடத்துக்கு நெருக்கமாக வந்துள்ளது. இதன் கதைக்கள முன்னேற்றம் ரசிகர்களை ஈர்த்திருப்பது தெளிவாக தெரிகிறது.
சரிவை சந்தித்த அன்னம் சீரியல்
கயல் மற்றும் மருமகள் தொடர்கள் தங்கள் நிலைகளை காக்கும் வகையில் சிறிய சரிவை சந்தித்துள்ளன. கயல் 7.71 இலிருந்து 7.44 ஆகவும், மருமகள் 7.34 இலிருந்து 7.20 ஆகவும் குறைந்துள்ளது. இருந்தாலும், Top 5-இல் தங்கள் இடத்தை இழக்கவில்லை. முக்கிய மாற்றமாக, கடந்த வாரம் 6வது இடத்தில் இருந்த அய்யனார் துணை, இந்த வாரம் 7.01 புள்ளிகளுடன் 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. அதே சமயம், அன்னம் 5வது இடத்திலிருந்து 7வது இடத்திற்கு சரிந்துள்ளது. கடந்த வாரம் 7.06 டிஆர்பி ரேட்டிங்கை பெற்ற இந்த சீரியல் இந்த வாரம் வெறும் 6.61 புள்ளிகளை மட்டுமே பெற்றிருக்கிறது.
ஏற்றம் கண்ட எதிர்நீச்சல் தொடர்கிறது
மத்திய தரவரிசையில் உள்ள சிறகடிக்க ஆசை கடந்த வாரத்தில் 6.70 ரேட்டிங்கையும் இந்த வாரம் 6.66 புள்ளிகளையும் பெற்று 6வது இடத்தில் உள்ளது. எதிர்நீச்சல் தொடர்கிறது கடந்த வாரம் 6.38 புள்ளிகளும் இந்த வாரம் 6.40 புள்ளிகளும் பெற்று 8ம் இடத்தில் உள்ளது. இது அந்த தொடர்கள் நிலையான பார்வையாளர்களை வைத்திருப்பதை காட்டுகின்றன. இதில் எதிர்நீச்சல் மட்டும் சற்று முன்னேற்றம் கண்டுள்ளது. கடைசி இரண்டு இடங்களில் பெரிய மாற்றம் இல்லை. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 5.89 புள்ளிகளுடன் அதே 9வது இடத்தில் தொடர்கிறது. சின்ன மருமகள் மட்டும் 4.98ல் இருந்து 5.07 ஆக உயர்ந்தாலும், 10வது இடத்தில் தான் உள்ளது.
முதலிடத்துக்கு கடும் போட்டி
மொத்தத்தில், இந்த வார TRP பட்டியல் சில தொடர்களின் வளர்ச்சியையும், சில தொடர்களின் சற்று பின்னடைவைவும் வெளிப்படுத்துகிறது. குறிப்பாக சிங்கப்பெண்ணே மற்றும் அய்யனார் துணை போன்ற தொடர்கள் வேகமாக முன்னேறி வருவது கவனிக்கத்தக்கது. வரும் வாரங்களில் முதலிடப் போட்டி இன்னும் கடுமையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் மற்ற சீரியல்களை காட்டிலும் நம்பர் 1 இடத்தில் உள்ள மூன்று முடிச்சு சீரியல் ஒரு மணிநேரம் ஒளிபரப்பாகி வருகிறது.

