MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • சீரியல் நடிகைகளுக்கு வாரி வழங்கப்படும் சம்பளம்... யாருக்கு அதிகம்? யாருக்கு கம்மி தெரியுமா?

சீரியல் நடிகைகளுக்கு வாரி வழங்கப்படும் சம்பளம்... யாருக்கு அதிகம்? யாருக்கு கம்மி தெரியுமா?

சின்னத்திரை சீரியல்களில் நடிக்கும் நாயகிகளுக்கு வழங்கப்படும் சம்பளம் எவ்வளவு என்பதைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்க உள்ளோம். இதில் அதிகம் வாங்கும் நடிகை யார், கம்மியாக வாங்கும் நடிகை யார் என்பதையும் பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Feb 09 2026, 01:15 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Serial Actress Salary
Image Credit : X

Serial Actress Salary

சினிமா ஹீரோயின்களுக்கு நிகராக சின்னத்திரை சீரியல் நடிகைகளுக்கும் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. சில நடிகைகளை தங்கள் வீட்டில் ஒரு பெண் போல மக்கள் கொண்டாடி வருகிறார்கள். அந்த அளவுக்கு தங்களின் இயல்பான நடிப்பால் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருக்கிறார்கள். அந்த நடிகைகள் சீரியல்கள் மூலம் எவ்வளவு சம்பாதிக்கிறார்கள்? அவர்கள் ஒரு நாளைக்கு வாங்கும் சம்பளம் எவ்வளவு என்கிற விவரங்கள் வெளியாகி உள்ளன. சன் டிவி மற்றும் விஜய் டிவி சீரியல் நாயகிகள் வாங்கும் சம்பளம் பற்றி இந்த தொகுப்பில் வரிசையாக பார்க்கலாம்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
சீரியல் நடிகைகள் சம்பளம்
Image Credit : instagram

சீரியல் நடிகைகள் சம்பளம்

சன் டிவியில் நான்கு ஆண்டுகளுக்கு மேலாக வெற்றிநடை போட்டு வரும் சீரியல் கயல். அதில் நாயகியாக நடித்து வரும் சைத்ரா ரெட்டி, அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். அவர் ஒரு நாளைக்கு ரூ.45 ஆயிரத்தில் இருந்து ரூ.60 ஆயிரம் வரை சம்பளம் வாங்கி வருவதாக கூறப்படுகிறது. அதேபோல் சன் டிவியில் ஒளிபரப்பாகும் லட்சுமி சீரியலில் நாயகியாக நடிக்கும் ஸ்ருதி ராஜ், ஒரு நாளைக்கு ரூ.40 ஆயிரம் வரை சம்பளம் வாங்கி வருகிறாராம். சிங்கப்பெண்ணே சீரியலில் ஆனந்தியாக ரசிகர்கள் மனதை கொள்ளை கொள்ளும் மனிஷா மகேஷ், ஒரு நாளைக்கு ரூ.30 ஆயிரம் வாங்குகிறாராம்.

Related Articles

Related image1
தேவசகாயத்தின் பிளானை ஒட்டுக்கேட்ட ஜனனி... கதிரை கதிகலங்க வைத்த நந்தினி - எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ட்விஸ்ட்
Related image2
நிலாவுக்காக சேரனை அடிக்க பாயும் சோழன்... வானதியால் உறவுக்குள் ஏற்படும் விரிசல் - அய்யனார் துணை சீரியல் அப்டேட்
34
அதிக சம்பளம் வாங்கும் நடிகை யார்?
Image Credit : suntv/youtube

அதிக சம்பளம் வாங்கும் நடிகை யார்?

சின்னத்திரையில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை என்றால் அது ஸ்வாதி கொண்டே தான். இவர் சன் டிவியில் சக்கைப்போடு போட்டு வரும் மூன்று முடிச்சு சீரியலில் நாயகியாக நடிக்கிறார். இவர் ஒரு நாளைக்கு ரூ.80 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை சம்பளமாக வாங்கி வருகிறாராம். இந்த சீரியல் தான் டிஆர்பியில் நம்பர் 1 இடத்தில் உள்ளது. அதேபோல் விஜய் டிவியில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை என்றால் அது அய்யனார் துணை சீரியலில் நிலாவாக நடித்து வரும் மதுமிதா தான். இவர் ஒரு நாளைக்கு ரூ.50 ஆயிரம் வரை சம்பளம் வாங்குகிறாராம். இந்த சீரியல் தான் விஜய் டிவியில் நம்பர் 1 சீரியலாக இருந்து வருகிறது.

44
கம்மி சம்பளம் வாங்கும் நடிகைகள்
Image Credit : JIOHOTSTAR

கம்மி சம்பளம் வாங்கும் நடிகைகள்

கம்மி சம்பளம் வாங்கும் நடிகைகளின் பட்டியலில் சிறகடிக்க ஆசை சீரியல் நாயகி கோமதிப் பிரியா இருக்கிறார். அந்த சீரியலில் மீனா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து இல்லத்தரசிகளின் உள்ளத்தில் இடம்பிடித்த ஒரு கேரக்டராக அது இருந்தாலும் அவருக்கு ஒரு நாளைக்கு ரூ.12 ஆயிரம் மட்டுமே சம்பளமாக வழங்கப்படுகிறதாம். அதேபோல் சன் டிவியில் எதிர்நீச்சல் தொடர்கிறது என்கிற சூப்பர் ஹிட் சீரியலில் ஜனனியாக நடித்து வரும் பார்வதி தான் கம்மி சம்பளம் வாங்குகிறார். அவருக்கு ஒருநாளைக்கு ரூ.12 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட்டு வருகிறதாம்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ் சீரியல்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Pandian Stores 2 : தங்கமயில் கேட்ட கேள்வியால் ஆடிப்போன சரவணன்... கோமதிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி
Recommended image2
Siragadikka Aasai : மீனா எடுத்த முட்டாள்தனமான முடிவு... சிறகடிக்க ஆசை சீரியலில் எதிர்பாரா ட்விஸ்ட்
Recommended image3
Ethirneechal Thodargiradhu : தர்ஷினியை கடத்தியது இவரா? ஈஸ்வரியிடம் வசமாக சிக்கப்போகும் ஜனனி
Related Stories
Recommended image1
தேவசகாயத்தின் பிளானை ஒட்டுக்கேட்ட ஜனனி... கதிரை கதிகலங்க வைத்த நந்தினி - எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ட்விஸ்ட்
Recommended image2
நிலாவுக்காக சேரனை அடிக்க பாயும் சோழன்... வானதியால் உறவுக்குள் ஏற்படும் விரிசல் - அய்யனார் துணை சீரியல் அப்டேட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved