- Home
- Cinema
- தொலைக்காட்சி
- நிலாவுக்காக சேரனை அடிக்க பாயும் சோழன்... வானதியால் உறவுக்குள் ஏற்படும் விரிசல் - அய்யனார் துணை சீரியல் அப்டேட்
நிலாவுக்காக சேரனை அடிக்க பாயும் சோழன்... வானதியால் உறவுக்குள் ஏற்படும் விரிசல் - அய்யனார் துணை சீரியல் அப்டேட்
அய்யனார் துணை சீரியலில் சேரன் செய்த செயலால் கடுப்பாகும் நிலா அவரை திட்டிக்கொண்டிருக்க கோபத்தில் சோழன் அடிக்க பாய்கிறார். இதையடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
- FB
- TW
- Linkdin
- GNFollow Us

Ayyanar Thunai Serial Today Episode
அய்யனார் துணை சீரியலின் இன்றைய எபிசோடில், வானதி, தான் பலமுறை அழைத்தும் பாண்டியன் போனை எடுக்காததால் நேரடியாக வீட்டுக்கே வந்து விடுகிறார். அதன்பின்னர் பாண்டியன் உடன் தனியாக பேச வேண்டும் எனக்கூறி அவரை ரூமுக்குள் அழைத்து செல்கிறார். அவரிடம் ஏன் போனை எடுக்கல என வானதி கேட்க, நீ போனை எடுத்தா சண்டை தான போடுவ, அதான் எடுக்கல என கூறுகிறார் பாண்டியன். நீ எப்போ பார்த்தாலும் சண்டை தான் போட்டுக்கிட்டே இருக்க என பாண்டியன் ஃபீல் பண்ணி பேச, உடனே வானதி, பாண்டியனை கட்டிப்பிடித்துக் கொள்கிறார். அதன்பின்னர் இருவரும் சமாதானம் ஆகிறார்கள்.
சேரனை திட்டும் நிலா
அந்த நேரத்தில் வீட்டுக்குள் கோபத்துடன் எண்ட்ரி கொடுக்கிறார் நிலா. வந்த உடனே சேரன் அவரிடம் என்னம்மா வேலையெல்லாம் முடிஞ்சதா என விசாரிக்க, உடனே நிலா, அவரிடம் உங்களுக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா என கேட்ட உடனே எல்லாருமே ஷாக் ஆகிறார்கள். எதுக்கு நிலா இப்படி கேட்கிறாள் என சேரனுக்கு புரியவில்லை. உடனே நான் என்னம்மா பண்ணுனேன் என சேரன் கேட்க, அதன்பின்னர் தான் நிலா விஷயத்தை சொல்கிறார். நீங்க ராகவ் கிட்ட போய், எதுக்காக என்னோட கதை எல்லாத்தையும் சொன்னீங்க என கேட்க, எனக்கு ஒன்னுமே புரியல என சொல்கிறார் சேரன்.
கப்சிப்னு ஆன சேரன்
எனக்கும் சோழனுக்கும் விருப்பமின்றி கல்யாணம் ஆன விஷயத்தை ஏன் சொன்னீங்க. அதெல்லாம் அவன் கேட்டானா... அவன் என்னைய பயங்கரமா டார்ச்சர் பண்ணிகிட்டு இருக்கான். இன்னைக்கு காலையில தான் எனக்கும் சோழனுக்கும் கல்யாணம் ஆகிடுச்சு இதுக்கப்புறம் என்னைய தொந்தரவு செய்யக்கூடாதுனு சொல்லிவச்சிட்டு வந்தேன். ஆனா நீங்க போய் அவன்கிட்ட, எங்களுக்கு நடந்தது போலியான கல்யாணம், நாங்க ரெண்டு பேரும் டைவர்ஸ் பண்ணப் போறோம்னு சொல்லி வச்சிருக்கீங்க. இதைக்கேள்விப்பட்ட பிறகு அவன் என்னிடம் என்னவெல்லாம் சொன்னான் தெரியுமா?
சேரனின் சட்டையை பிடித்த சோழன்
நீ ஏன் இந்த வீட்ல இருக்கணும், அங்க இருந்து வந்திரு. உனக்கு நான் தனியா ஒரு பிளாட் வாங்கித் தர்றேன்னு கேவலமா பேசுறான் என நிலா, சேரனை திட்டித்தீர்க்கிறார். நிலா சொன்ன விஷயத்தை எல்லாம் அருகில் இருந்தே கேட்டுக் கொண்டிருந்த சோழன், பயங்கரமா கோபமடைந்து சேரனின் சட்டையை பிடித்து அடிக்க பாய்கிறார் சோழன். இதையடுத்து அருகில் இருந்த பாண்டியன், சோழனை தடுத்து நிறுத்தி அண்ணனையே அடிக்க போறியா என சண்டை போடுகிறார். இந்த சண்டையெல்லாம் அங்கிருந்த வானதி பார்த்துக் கொண்டே இருக்கிறார்.
வம்பிழுத்த வானதி
அதன்பின்னர் நிலாவை தப்பு தப்பா பேச ஆரம்பிக்கிறார் வானதி. நீ இவ்வளவு கேவலமானவளா... உன் அப்பா ஏற்பாடு செஞ்ச கல்யாணம் பிடிக்காம தான் சோழனை போலியாக கல்யாணம் பண்ணி இங்க இருக்கியானு வானதி பேச, சோழனுக்கு மேலும் கோபம் அதிகரிக்கிறது. அதன்பின்னர் பாண்டியன், வானதியை வெளியே அழைத்துச் செல்கிறார். இதையடுத்து நிலா கோபித்துக் கொண்டு ரூமுக்குள் சென்றுவிடுகிறார். சேரன் என்ன செய்வதென்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறார். இதன்பின்னர் என்ன நடக்கப்போகிறது என்பதை இனி வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.

