MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • பாண்டியன் - வானதி காதலில் புது ட்விஸ்ட்... நிலாவை பழிவாங்கும் ராகவ் - அய்யனார் துணை சீரியல் அப்டேட்

பாண்டியன் - வானதி காதலில் புது ட்விஸ்ட்... நிலாவை பழிவாங்கும் ராகவ் - அய்யனார் துணை சீரியல் அப்டேட்

அய்யனார் துணை சீரியலில் நிலா - சோழன் பற்றிய முழு விவரமும் ராகவ்வுக்கு தெரியவந்த நிலையில், அவர் நிலாவை பழிவாங்குகிறார். அதன் பின் என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Feb 06 2026, 08:47 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Ayyanar Thunai Serial Today Episode
Image Credit : jiohotstar

Ayyanar Thunai Serial Today Episode

அய்யனார் துணை சீரியலில் ராகவ் தன்னை காதலிக்கும் விஷயம் அறிந்த நிலா, அவரிடம் நேராக சென்று தனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிவிட்டதாகவும், சோழன் தான் தன்னுடைய கணவர் என்கிற உண்மையையும் போட்டுடைக்கிறார். இதனால் அதிர்ச்சியில் இருக்கும் ராகவ், ஒரு புராஜெக்ட் விஷயமாக சேரனை சந்திக்கிறார். அப்போது சோழன் - நிலா பற்றி பேசுகிறார். சேரனும் அவர்கள் இருவரும் தற்போது டைவர்ஸுக்கு அப்ளை பண்ணி இருக்கும் விஷயத்தை சொல்லிவிடுகிறார். இதனால் ராகவ் குஷியாகிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

25
சோழனுக்கு வந்த பயம்
Image Credit : jiohotstar

சோழனுக்கு வந்த பயம்

சேரன் பிசினஸ் பற்றி பேசச் சென்ற இடத்தில் வாய வச்சிகிட்டு சும்மா இல்லாம, ராகவ்விடம் சோழன் - நிலாவின் கதையை புட்டு புட்டு வைத்துவிடுகிறார். மறுபுறம் சோழன் தன்னுடைய ஆபிஸில் இருக்கிறார். அங்கு குட்டி போட்ட பூனை மாதிரி அங்கையும், இங்கையும் சுத்திகிட்டு இருக்கிறார். அப்போது சோழனின் ஓனர் அவரை அழைத்து, உனக்கு என்ன தாண்டா பிரச்சனை என விசாரிக்கிறார். சோழனும் நிலா தன்னைவிட்டு பிரிய உள்ள கதையை சொல்கிறார். நிலா என்னைய விட்டு போயிடுவாளோனு பயமா இருக்குனு சோழன் சொல்ல, அப்பயெல்லாம் போக மாட்டா டா என ஓனர் கூறுகிறார்.

Related Articles

Related image1
நான் சோழன் பொண்டாட்டி டா... ஆதாரத்தை காட்டி அதிர வைத்த நிலா - அய்யனார் துணை சீரியல் ட்விஸ்ட்
Related image2
ராகவ் - நிலா காதலுக்கு வேட்டு வைத்த சோழன் - அய்யனார் துணை சீரியலில் அடிபொலி ட்விஸ்ட்
35
நிலாவை காக்க வைக்கும் ராகவ்
Image Credit : jiohotstar

நிலாவை காக்க வைக்கும் ராகவ்

நம்மளிடம் படிப்பும் இல்லை. டிரைவர் வேலை தான் பார்க்கிறோம். வீடும் இல்லை, வசதியும் இல்லை. அதனால நம்மளை எப்படி அவளுக்கு பிடிக்கும், என சோழன் ஃபீல் பண்ணி பேச, அதெல்லாம் உன்னைய மாதிரி ஆளுங்களை தான் நிலாவுக்கு பிடிக்கும் என கூறுகிறார் ஓனர். பின்னர் நிலா ஆபிஸ் டைம் முடிந்து வீட்டுக்கு கிளம்பலாம் என முடிவெடுக்கும் போது, ராகவ், நிலாவையும் அவருடைய தோழியையும் வெயிட் பண்ண சொல்லுகிறார். ராகவ் ரொம்ப நேரம் ஆகியும் வராததால், நிலாவின் தோழி தனக்கு லேட் ஆகிவிட்டதாகவும், லேட்டாக சென்றால் வீட்டில் திட்டுவாங்க என சொல்ல, நிலாவும் ராகவ்விடம் இதுபற்றி கூறுகிறார். உடனே அவர் நிலாவின் தோழியை கிளம்பச் சொல்கிறார்.

45
பாண்டியனை புகழும் வானதி பெற்றோர்
Image Credit : jiohotstar

பாண்டியனை புகழும் வானதி பெற்றோர்

ஆனால் நிலாவை மட்டும் வெயிட் பண்ணச் சொல்கிறார். நேரம் 6 மணிக்கு மேல் ஆனதால் வீட்டில் போன் போட்டு தான் லேட்டாக தான் வருவேன் என கூறுகிறார் நிலா. மறுபுறம் வானதியின் பெற்றோர், பாண்டியனை புகழ்ந்து பேசுகிறார்கள். பாண்டியன் நிஜமாவே நல்ல பையன், பொறுப்பான பையன், நம்ம பொண்ணு நம்மகிட்ட சொல்லாம போயிருக்கு, அது தப்புனு நினைச்சி, அவளை வீட்டில் வந்து விட்டுட்டு மன்னிப்பெல்லாம் கேட்டுட்டு போயிருக்கு என புகழ்ந்து பேசுகிறார்கள்.

55
குஷியில் வானதி
Image Credit : jiohotstar

குஷியில் வானதி

பாண்டியனைப் பற்றி தன்னுடைய பெற்றோர் புகழ்ந்து பேசுவதை ஒளிந்திருந்து கேட்ட வானதி, சந்தோஷப்படுகிறார். பின்னர் பாண்டியனின் மெக்கானிக் ஷெட்டிற்கு செல்லும் வானதி, வீட்டில் தன்னுடைய பெற்றோர் உன்னைப் பற்றி புகழ்ந்து பேசினார்கள் என்பதை சொல்லி சந்தோஷப்படுகிறார். கொஞ்சம் விட்டா அவங்களே என்னை உனக்கு கல்யாணம் பண்ணிவச்சிருவாங்க போல என கூறுகிறார் வானதி. இதையடுத்து என்ன நடந்தது என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
விஜய் தொலைக்காட்சி தொடர்கள்
தமிழ் சீரியல்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Pandian stores 2: பாக்கியத்தின் கொடூர முகம் இதுதான்! சென்னைக்கு சென்ற கூலிப்படை?
Recommended image2
சீரியல் நடிகை வாஹினி மரணம்... கேன்சர் சிகிச்சைக்கு பணமின்றி உயிரிழந்த சோகம்
Recommended image3
TRP ரேஸில் சரிந்த சன் டிவி... சம்பவம் பண்ணிய விஜய் டிவி - இந்த வார டாப் 10 சீரியல்கள் லிஸ்ட் இதோ
Related Stories
Recommended image1
நான் சோழன் பொண்டாட்டி டா... ஆதாரத்தை காட்டி அதிர வைத்த நிலா - அய்யனார் துணை சீரியல் ட்விஸ்ட்
Recommended image2
ராகவ் - நிலா காதலுக்கு வேட்டு வைத்த சோழன் - அய்யனார் துணை சீரியலில் அடிபொலி ட்விஸ்ட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved