- Home
- Cinema
- தொலைக்காட்சி
- Ethirneechal Thodargiradhu : தர்ஷனை பழிவாங்கிய பார்கவி... அன்புக்கரசி கழுத்தில் தாலி ஏறுமா?
Ethirneechal Thodargiradhu : தர்ஷனை பழிவாங்கிய பார்கவி... அன்புக்கரசி கழுத்தில் தாலி ஏறுமா?
Ethirneechal Thodargiradhu Serial Today Episode : எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் பார்கவி, தர்ஷன் உடனான திருமணத்தை தடுத்து நிறுத்தி இருக்கிறார். இதன்பின் என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.

Ethirneechal Thodargiradhu Serial Today Episode
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் தர்ஷன் - பார்கவிக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என ஆசைப்பட்டார் ஈஸ்வரி. அவரின் ஆசைக்கு ஏற்ப, திருமண ஏற்பாடுகளை செய்ய சொல்லி இருந்தார் ஆதி குணசேகரன். அதன்படி வெள்ளிக்கிழமை நடைபெற இருந்த திருமணத்தை திடீரென புதன்கிழமையே நடத்த வேண்டும் என முடிவெடுத்தார் குணசேகரன். திருமணத்தில் கலந்துகொள்ள சக்தி - ஜனனி இருவரும் ஜோடியாக வந்திருந்தனர். திருமண ஏற்பாடுகளும் தடபுடலாக நடத்தது. இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
Siragadikka Aasai : சிந்தாமணிக்கு சாபம் விட்ட விஜயா... காசுக்காக வீட்டோட மாப்பிள்ளையாகப்போகும் ரவி?

கல்யாணத்தை நிறுத்திய பார்கவி
தர்ஷன், பார்கவி கழுத்தில் தாலி கட்டச் சென்ற நேரத்தில், பார்கவி மணமேடையில் இருந்து எழுந்துவிட்டார். பார்கவியின் இந்த செயலால் அனைவருமே அதிர்ச்சி அடைந்தனர். அதன்பின்னர் அவர் இந்த வீட்டுக்கும் எனக்கும் ஒத்து வராது தர்ஷன், நமக்கு இந்த கல்யாணம் வேண்டாம் என சொல்கிறார். அதைக்கேட்டு கோபமடைந்த ஆதி குணசேகரன், எதை எப்போ பேசிக்கிட்டு இருக்க என கேட்க, அதற்கு பார்கவி, இப்போ பேசலேனா எப்பவுமே பேசமுடியாமல் போயிடும், அதனால் தான் இப்போ பேசுறேன் என பதிலடி கொடுத்துள்ளார்.
எண்ட்ரி கொடுக்கும் அன்புக்கரசி
அதுமட்டுமின்றி அந்த நேரம் பார்த்து அறிவுக்கரசி மணக்கோலத்தில் இருக்கும் தன்னுடைய தங்கச்சி அன்புக்கரசி உடன் வீட்டுக்குள் எண்ட்ரி கொடுக்கிறார். அவர்களை பார்த்து அனைவருமே ஷாக் ஆகிறார்கள். குறிப்பாக ஆதி குணசேகரன், இவளுங்க எதுக்கு இங்க வர்றாங்க இப்போ, யார் பார்த்த வேலை இது என கேட்க, அப்போது அருகில் இருந்த கதிர், இதெல்லாம் இவ வேலையா தான் இருக்கும் என சொல்லி ஜனனியை கைகாட்டுவதோடு, அவரை தரதரவென இழுத்து சென்று வெளியே துரத்திவிடப் பார்க்கிறார். ஜனனி, இதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என சொல்லியும் அவர் கேட்கவில்லை.
பார்கவியின் பிளான்
அப்போது அங்கிருந்த பார்கவி, நான் தான் அவங்களை வர சொன்னேன் என சொன்னதும் அனைவரும் வாயடைத்துப் போகிறார்கள். இந்த வீட்டுல என்னால இவங்க எல்லாரோடையும் நல்ல ரிலேஷன்ஷிப்போட இருக்க முடியும், ஆனால் நல்ல உனக்கு நல்ல மனைவியா இருக்க முடியாமானு யோசிச்சா அதற்கு என்கிட்ட பதில் இல்ல. நமக்கு இது செட் ஆகாது. நான் இந்த வீட்டை விட்டு போயிடுறேன் என சொல்லிவிட்டு பெட்டி படுக்கையெல்லாம் எடுத்துக்கிட்டு வீட்டை விட்டு கிளம்புகிறார் பார்கவி. அதைப்பார்த்து கண்ணீர்விட்டு கதறுகிறார் தர்ஷன்.
வழியனுப்பி வைத்த ஜனனி
பார்கவி வெளியே செல்லும் முன் அவரை அன்போடு பேசி வழியனுப்பி வைத்துள்ளார் ஜனனி. உன் வாழ்க்கை எதை நோக்கி போனா சரியா இருக்கும்னு முடிவெடுத்த பாத்தியா, இதுதான் எனக்கு வேணும். திரும்பி பார்க்காம போயிட்டே இரு பார்கவி என ஜனனி சொன்னதும் வீட்டை விட்டு கிளம்புகிறார் பார்கவி. தன் மகனின் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என ஈஸ்வரி மன உளைச்சலில் இருக்கிறார். இதையடுத்து என்ன நடக்கப் போகிறது? அன்புக்கரசி கழுத்தில் தர்ஷன் தாலி கட்டுவாரா? இல்லையா? என்பதை இனி வரும் எபிசோடுகளில் பொறுத்திருந்து பார்க்கலாம்.

